தலித் இலக்கியம் அரசியல் லாபத்திற்கானது அல்ல!
முத்தாரம் Mini
உங்களது பயணம் எப்படி தொடங்கியது?
1995 ஆம் ஆண்டு என் முஸ்லீம் குடும்பத்தைப்
பற்றிய கதை வெளியானது. டெல்லியிலுள்ள நேரு பல்கலையில் முனைவர் படிப்பின்போது தலித்
இலக்கியம் வாசிக்க தொடங்கினேன். ஓம்பிரகாஷ் வால்மீகி, மராத்தி எழுத்தாளர்கள் என் பார்வையை
விரிவாக்கினார்கள்.
ஜாதி பற்றிய தங்களது புரிதலை கூறுங்கள்.
ராஜஸ்தானில் நடந்த திருமணத்தில்
பங்கேற்றேன். தாகத்திற்கு நீர்கேட்டபோது, ராஜபுத்திர பெண்மணி ஜாதி கேட்டு நீர்மறுத்ததுதான்
சாதி பற்றிய முதல் கொடும் அனுபவம். நியூ கஸ்டம் என்ற கதை, என் தந்தைக்கு டீக்கடையில்
நேர்ந்த அனுபவம்தான் இன்ஸ்பிரேஷன்.
தலித் இலக்கியம் அவசியமா?
இலக்கிய கட்டமைப்புக்குள் நுழைய
முடியாத தலித் எழுத்தாளர்கள் தாங்களாகவே கட்டமைத்த இலக்கியங்களின் பெயர்தான் அது. சமர்,
வால்மீகி என தனித்தனி அமைப்புகளாக பிராமணியத்துக்கு எதிராக போராடுவதும் சாதியை ஒழிக்க
உதவுமா என்பது சந்தேகம்தான்.என் கதைகளிலுள்ள கதாபாத்திரங்கள், எப்போதும் தலித் அடையாளங்களை
சுமந்து திரிவதில்லை. அப்படி கூறுவர்கள் அதனை தங்கள் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்துபவர்கள்தான்.
-எழுத்தாளர் அஜய் நவாரியா.