இடுகைகள்

ரோம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெரிஞ்சுக்கோ - நகரங்கள்

படம்
  தெரிஞ்சுக்கோ இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவில்,   பதிமூன்று ஆறுகள் ஓடுகின்றன. இந்த நகரம் ஆண்டுக்கு 1-15 செ.மீ என்ற அளவில் கீழே முழுகிக்கொண்டு இருக்கிறது. 1966-1987 காலகட்டத்தில் ஐஸ்லாந்து நாட்டின் ரெய்க்ஜாவிக் நகரில் வியாழக்கிழமை டிவி பார்ப்பதற்கு தடை இருந்தது. சீனாவில்31.18 பெய்ஜிங் நகரில் 699.3 கி.மீ. தொலைவுக்கு இருப்பு பாதையும், 405 ரயில் நிலையங்களும் உள்ளன. தென் ஆப்பிரிக்காவில் மூன்று தலைநகரங்கள் உண்டு. பிரிடொரியா, நாட்டின் தலைநகர். கேப் டவுன், சட்டம் இயற்றப்படும் நகரம், பிளோம்ஃபான்டெய்ன், நீதிமன்றம் இயங்குவதற்கானது. இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில்   900 தேவாலயங்கள் உள்ளன. மங்கோலியாவின் உலானபாட்டர் நகரில் பதிவான தோராய ஆண்டு வெப்பநிலை -1.3 டிகிரி செல்சியஸ். 1801-1821 காலகட்டம் வரையில் தென் அமெரிக்காவின் ரியோ டி ஜெனிரோ போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகராக செயல்பட்டது. அவர் வேர்ல்ட் இன் நம்பர்ஸ் image - pinterest

அழகிய ரோம் நகரமே....

படம்
  ரோம் அமைந்துள்ள இடம் இத்தாலி கலாசார இடம் பிக்பாக்கெட்டுகள் ஜாக்கிரதை   இத்தாலியின் தலைநகரம். இங்கு நீங்கள் சென்றாலே கடந்தகாலத்திற்கு உங்கள் நினைவு சென்றுவிடும். 753 -476 காலகட்ட கட்டுமானங்கள் இங்கு உள்ளன. இதனை ரோமுலஸ், ரெமுஸ் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். 1980ஆம் ஆண்டு இதனை கலாசார தொன்மை கொண்ட இடமாக அறிவித்தனர். ரோமை சுற்றிப் பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் முதலில் கொலோசியத்திலிருந்து பயணத்தை தொடங்கவேண்டும். வெஸ்பியன் மன்னர் கால ரோம் நகரில் 80 ஆயிரம் பேர் உட்காரும் ஆம்பிதியேட்டர் உருவாக்கப்பட்டது. இது பிரம்மாண்டமானது. மன்னர் வெஸ்பியன் உருவாக்கி எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இது பயன்பாட்டிற்கு வந்தது.கிளாடியேட்டர்கள் இதில் சண்டை போடுவார்கள். சில காலம் இதில் நீர் நிரப்பி கடல் சண்டைகளுக்கான மாதிரி பயிற்சிகளும் செய்யப்பட்டன. இதற்கு அருகில் ரோமன் ஃபாரம் உண்டு. இதில் அரசு அலுவலகங்கள், கோவில், சதுக்கங்கள் உள்ளன. மிகவும் தொன்மையான இடம். இங்கு கட்டப்பட்டுள்ள கோவிலுக்கு வயது 2000. ரோமின் மையமான இடம் என வாட்டிகன் நகரைக் கூறலாம். கிறிஸ்துவர்களுக்கு முக்கியமான இடம்.. கத்தோலிக்க கிறிஸ்தவம் பல்வ

அடேங்கப்பான்னு சில உலகை மாற்றிய கண்டுபிடிப்புகள்! வாங்க பார்ப்போம்!

படம்
                      பென்சிலின் 1928 பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் முக்கியமான மருந்து இது . அலெக்ஸாண்டர் பிளெமிங் விபத்தாக கண்டுபிடித்த கண்டுபிடிப்பு பல லட்சம் உயிர்களை காப்பாற்ற உதவியது . இதற்காக அவருக்கு 1945 ஆம் ஆண்டு நோபல் விருது வழங்கப்பட்டது . இன்று பென்சிலின் பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது . கிரடிட் கார்டு 1958 அமெரிக்காவில் பேங்க் ஆப் அமெரிக்கா வங்கி கிரடிட் கார்டை அறிமுகப்படுத்தியது . தொடக்கத்தில் இதனை சிலர் ஏமாற்ற பயன்படுத்தினாலும் பின்னாளில் கிரடிட் கார்டு வெற்றிபெற்றது . 1976 ஆம் ஆண்டு இதன் பெயர் விசா என மாற்றப்பட்டது . இன்று உலகம் முழுக்க பயன்படும் முக்கியமான பணப்பரிமாற்ற கார்டுகளில் இதற்கு முக்கிய இடமுண்டு . ஸ்கேன் 1953 ஸ்வீடனிலுள்ள லண்டு பல்கலைக்கழக மருத்துவமனையில் அல்ட்ராசோனோகிராபி கண்டறியப்பட்டது . இதன்மூலம் மருத்துவர்கள் நோயாளிகளின் உடலை எளிதாக அறிய முடிந்தது . இதன்மூலம் கர்ப்ப பையில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் எளிதாக அறிய முடிந்தது . ரேடார் 1935 டெத் ரே என்று பெயரில் பிரிட்டிஸ்