இடுகைகள்

ஒகனா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாத்தாவின் கடனை அடைக்க பொக்கிஷத்தை தேடிச்செல்லும் பேத்தி! - ஃபைண்டிங் ஓகானா

படம்
                ஃபைண்டிங் ஓகானா !   Director: Jude Weng Produced by: Ian Bryce Writer(s): Christina Strain அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஹவாய்க்கு இடம்பெயருகிறது ஓர் குடும்பம் . தாத்தாவின் வீட்டுக்கு வரும் சிறுமி , பொக்கிஷம் பற்றிய டைரியை தாத்தாவின் வீட்டிலிருந்து கண்டெடுக்கிறாள் . அப்புறமென்ன , பொக்கிஷ வேட்டைதான் . படத்தின் கதையைப் பார்த்தால் ஏதோ இந்தியா ஜோன்ஸ் ஜூனியர் என்று பெயர் வைக்காமல் படம் எடுத்திருக்கிறார்களோ என்று தோன்றும் . ஆனால் படம் நெடுக குடும்ப பாசம் , இயற்கை மீதான நேசம் , முன்னோர்களுக்கு மரியாதை , ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது என ஏராளமான சமாச்சாரங்களை வைத்து கண்கலங்க நெகிழ்ச்சியாக படம் சொல்கிறார்கள் .    நியூயார்க்கிலிருந்து வரும் குடும்பத்தின் டீன் ஏஜ் பையன் , சிறுமி , அம்மா ஆகியோரோடு ஹவாய் தீவில் வாழும் தாத்தா , அவரின் நெருக்கமான இளம் பெண்ணும் அவளது தம்பியும்தான் கதை நாயகர்கள் . ராபின்சன் பரௌன் என்ற தீவுக்கு வந்த வெள்ளைக்காரர் , புனித குகையில் பொக்கிஷங்களை மறைத்து வைத்திருக்கும் தகவலை நோட்டில் பதிவு செய்கிறார் . ஆனால் உயிர்போகும் அபாயத்திலிரு