இடுகைகள்

அணுசக்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிரையோபிரசர்வேஷனை கோட்பாடு அளவில் முன்வைத்தவர்! - ஜேம்ஸ் லவ்லாக்

படம்
  ஜேம்ஸ் லவ்லாக் ( James lovelock 1919) அறிவியலாளர், சூழலியலாளர்  "கார்பன் வெளியீட்டைக் குறைக்க அணுசக்தி உதவும் என்பது என் கருத்து" "காற்றில் உள்ள குளோரோ ப்ளோரோ கார்பனை (CFC) கண்டறியும் கருவி(ECD), சூழலைப் பற்றிய கேயா கோட்பாடு (Gaia theory) எனது முக்கியமான சாதனை" இங்கிலாந்தில் உள்ள லெட்ச்வொர்த் கார்டன் சிட்டியில் பிறந்த  அறிவியலாளர். மருத்துவப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். உடல்களைப் பாதுகாக்கும் கிரையோபிரசர்வேஷன் ( cryopreservation) முறையில் ஈடுபாடு காட்டியவர்.  எலிகளை வைத்து சோதித்து வெற்றிகண்டார். இதனால் பல்வேறு அறிவியலாளர்கள், மனிதர்களை கிரையோபிரசர்வேஷன் முறையில் பாதுகாக்கும் ஆராய்ச்சிகளை நம்பிக்கையுடன் தொடர்ந்தனர்.  1960களில் நாசா அமைப்பிற்காக, கோள்களை ஆராய பல்வேறு அறிவியல் கருவிகளை வடிவமைத்து கொடுத்தார்.  தான் எழுதிய நூல்களில் ( The Revenge of Gaia, The Vanishing Face of Gaia) கார்பன் வெளியீடு பற்றி எச்சரித்தவர், பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க அணுசக்தியை ஆதரித்தார். இதனால், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.  https://en.wikipedia.org/wiki/James_Lovelock

சாதனைகளை செய்தும் கூட அனைத்து புகழையும் விட்டுக்கொடுத்த பிரதமரின் துயரக்கதை! - தற்செயல் பிரதமர் - சஞ்சயா பாரு

படம்
          தற்செயல் பிரதமர் சஞ்சயா பாரு தமிழில் பி . ஆர் . மகாதேவன் கிழக்கு 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பற்றியும் அதில் பிரதமரான பதவி வகித்த மன்மோகன் சிங் பற்றியும் நூல் விலாவரியாக உண்மைகளைப் பேசுகிறது . பிரதமர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரின் ஊடக ஆலோசகரான வணிகப் பத்திரிக்கை ஆசிரியரான சஞ்சயா பாரு , பணியில் சேர்கிறார் . அங்கு அவர் பார்த்த தனிப்பட்ட ஆளுமையான மன்மோகனும் , பிரதமராக இருந்த மன்மோகனும் எப்படி சூழலுக்கு ஏற்ப வெளிப்பட்டார்கள் என்பதை பெரியளவு சமரசப்படாமல் நூலாக எழுதியுள்ளார் . அடிப்படையில் இந்த நூலை யார் படித்தாலும் அவர்களது மனம் காங்கிரஸ் கட்சி , சோனியா காந்தி ஆகிய இரண்டுபேரையும் விரோதமாகவே எண்ணும் . அந்தளவு பல்வேறு அதிகார மையங்களால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உழைப்புக்கான பலன்களுக்கான பெயர் கிடைக்காமல் அவமானப்படு்த்தப்பட்ட பொருளாதார நிபுணரின் கதை இது . இந்த நூலைப் பொறுத்தவரை மன்மோகன்சிங்கை பலம் , பலவீனத்தை சரியாக எடை போட்டு அணுகுகிறது . கொடுத்த வேலையை சிறப்பாக செய்யும் தன்மை கொண்ட ப