இடுகைகள்

உறுப்புகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2050இல் நடைபெறும் டெக் மாற்றங்கள் தெரிஞ்சுக்கோங்க.

படம்
pixabay மிஸ்டர் ரோனி 1. பட்டாம்பூச்சிகளை தொட்டால் அதன் இறகுகளில் பவுடர் போல ஒட்டுகிறதே....அது என்ன? அதுதான் அதன் உடலிலுள்ள முடி போன்ற பொருள். அது அதன் உடல் வெப்பநிலையை குறிப்பிட்ட நிலையில் வைத்திருக்க உதவுகிறது. ஒரேயொரு பயன்பாட்டுக்காக எந்த பொருளும் பயன்பட முடியாது அல்லவா? இந்த இறக்கையிலுள்ள இப்பொருள் எதிரிகளைக் குழப்பவும், பறக்கும்போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப பறக்கவும் உதவுகிறது. இவை சிதைந்து போனால் பட்டாம்பூச்சி பறக்கமுடியாது. எனவே விளையாட்டு என்று பூச்சிகளைப் பிடித்து கொன்று விடாதீர்கள். 2. 2050இல் சூழலுக்கு இசைவாக என்ன மாற்றங்கள் நடக்கும்? டேட்டாவை அடுக்குகிறோம். படித்து மகிழுங்கள். 139 நாடுகள் சூழலுக்கு இசைவாக கரிம பொருட்களை கைவிட்டுவிடும் வாய்ப்பு உள்ளது. 2.4 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும். 2040ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு பெட்ரோல், டீசல் எரிபொருட்களில்  இயங்கும் வாகனங்களை தடை செய்ய உள்ளது. 42.5 சதவீதம் அளவுக்கு மின்சாரத் தேவை குறையும். எப்படி ப்ரோ என்று கேட்காதீர்கள். அப்படித்தான். நிலவிலுள்ள ஹீலியத்தின் அளவு 1.1 மில்லியன் டன்கள். இதை எதுக்கு இப

உறுப்பு மாற்ற சோதனைகளுக்கு உதவும் விலங்கு-மனித கலப்பு உயிரிகள்!

படம்
டாக்டர் எக்ஸ். விலங்கு மனிதர்கள் இணைப்பு சோதனைகளை ஏற்கலாமா? விலங்கு அணுக்கள், மனிதர்களின் அணுக்கள் இணைந்து உருவாக்கப்படும் உயிரிகளை சிமேரா என்று அழைக்கின்றனர். மனித ஸ்டெம் செல்களை விலங்குகளின் கருக்களுக்குள் செலுத்தி இந்த கலப்பு பரிசோதனையைச் செய்கின்றனர். என்ன பயன் என்று கேட்கிறீர்களா இருக்கிறது. டோக்கியோ பல்கலைக்கழகத்தின் அரசின் அனுமதி பெற்று எலி - மனிதன் ஆகியோரின் செல்களைப் பயன்படுத்தி சோதனைகள் நடைபெற்றது. இதனை டாக்டர் ஹிரோமிட்சு நாகாச்சி என்பவர் தலைமையேற்று செய்தார். இது ஜப்பானில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் சால்க் பல்கலைக்கழகத்தில் மனிதர்கள் - குரங்கு செல்கள் கொண்ட கலப்பின  பரிசோதனை நடைபெற்றதாக ஸ்பானிஷ் பத்திரிகை எல் பாரிஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இச்செல்கள் பின்னர் அழிக்கப்பட்டன. விலங்கு - மனிதர்கள் கலப்பின உயிரிகள் உருவாக்கப்படுவதற்கு முக்கியக் காரணம், உறுப்புகள் போதாமைதான். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்திலும் ஏராளமானோர் உறுப்பு பழுதாகி மாற்று உறுப்புக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் அதிக காலம் காத்தி