இடுகைகள்

ஆல்பிரட் ஹிட்ச்சாக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உளவியல்ரீதியில் பாதிக்கும் கதைகள - ஆல்பிரட் எழுதிய மர்மக்கதைகள்!

படம்
ஆல்பிரட் ஹிட்ச்சாக் மர்மக்கதைகள் விகடன் பிரசுரம் இவை எதுவும் ஆல்பிரட் எழுதிய கதைகள் கிடையாது. பிற எழுத்தாளர்களின் கதைகளை இயக்குநர் ஆல்பிரட் சிறிது மாற்றி அதனை தனக்கான கதைகளாக மாற்றியிருக்கிறார். எதற்கு சினிமாவாக எடுக்கத்தான். அனைத்து கதைகளுமே ஆல்பிரட்டின் கைவண்ணத்தில் கடும் திகிலை மனதில் ஊட்டுகின்றன. அதில் எந்த சந்தேகமும் வேண்டும். மொழிபெயர்ப்பு கதைகள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. அதை நினைவில் கொண்டு படிக்கவேண்டியதில்லை. நடைபெறும் சூழல்கள், இடம் ஆகியவற்றை புரிந்துகொண்டால் எளிதாக நீங்கள் கதையை உள்வாங்க முடியும். அதற்காக சொன்னேன். இதில் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து பரம்பரை பற்றி கேள்விகளை ஒருவர் நிரப்புவார். பின்னர் அந்த நிறுவனத்தில் உயர் பதவிகளை எட்ட சாம, பேத, தண்ட முறைகளை பின்பற்றுவார். இக்கதை திரைப்படத்திற்கான அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளது. கணவர் வர தாமதம் ஆகிறது. புயல் மழை, மனைவியின் மனதில் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது என்று செல்லும் கதை முழுக்க அக உணர்வுகளை முன்னிலைப்படுத்துகிறது. இந்த வகையில் இதில் கைவிடப்பட்ட வீடு போன்ற தோற்றத்திலுள்ள வீட்டின் அருகில்