இடுகைகள்

பாலஸ்தீனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி தேடும் இருவர், காடுகளை அழிக்காமல் பொருட்களை தயாரிக்க முயலும் ஆய்வாளர்!

படம்
  reem hajajreh - yael admi இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்குமான பிரச்னை தீராத ஒன்று. இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆதரவு உள்ளது. எனவே, சண்டையிட்டால் எப்போதும் அதன் கை ஓங்கி இருக்கும். அதற்காக பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. பலவீனமாக இருந்தாலும் போரிடுவதை அவர்கள் நிறுத்தவில்லை. போரைப் பொறுத்தவரை இருதரப்பிலும் இழப்புகள் உண்டு. உயிர்ப்பலி தொடங்கி பொருளாதார பாதிப்புகள் வரை உண்டு. எனவே, இரு தரப்பிலும் அமைதி முயற்சிகளை சிலர் செய்து வருகிறார்கள். அவர்களில் இருவர் முக்கியமானவர்கள். அவர்களின் பெயர்கள் ரீம் ஹஜாஜ்ரே, யேல் ஆட்மி.  ரீம், வுமன் ஆஃப் சன் என்ற பெண்கள் அமைப்பையும். யேல், வுமன் வேஜ் பீஸ் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து போருக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போராடினர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதில் இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் உண்டு. ஹமாஸ் அமைப்பு, அக்.7 இல்தான் 1200 இஸ்ரேலியர்களைக் கொன்றது. இறந்துபோனவர்களில் யேலின் வும் வேஜ் பீஸ் அமைப்பின் துணைத்தலைவர் விவியன் சில்வரும ஒருவர்.  அவர்கள் நாட்ட

இஸ்ரேலை மிரட்டும் நிழல் கமாண்டோ தலைவர்! - மொகம்மது டெய்ப்

படம்
                  பாலஸ்தீனியர்களை காக்கும் தலைவன் ! மொகமது டெய்ப் மே மாதத்தின் தொடக்கத்தில் இஸ்ரேலிய நாட்டு உச்சநீதிமன்றம் , கிழக்கு ஜெருசலேமிலுள்ள ஷேக் ஜர்ராவிலுள்ள பாலஸ்தீனிய குடு்ம்பங்கள் அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டது . இஸ்ரேலிய அரசுக்கு மகிழ்ச்சி என்றாலும் உடனே அதன் எதிரிகளில ஒன்றிடமிருந்து உடனே எச்சரிக்கை வந்தது . ஹமாஸ் அமைப்பின் ராணுவப்பிரிவான இஷ் அட் தின் அல் க்வாசிம் படைத்தலைவர் மொகம்மது டெய்ப்தான் அந்த எச்சரிக்கையை செய்தார் . பொதுவாக பாலஸ்தீனியர்கள் மொகம்மதை வெளியிடங்களில் அதிகம் பார்த்திருக்க மாட்டார்கள் , மேலும் இதுபோல வெளிப்படையாக எச்சரிக்கையையும் அவர் செய்த்து . இல்லை . பாலஸ்தீனியர்களை வெளியேற்றினால் இஸ்ரேல் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கும் என மொகம்மது தனது எச்சரிக்கை செய்தியில் கூறியிருந்தார் . . பாலஸ்தீன மக்களே பல்லாண்டுகளாக பார்க்காத நிழல் தலைவர்தான் மொக்ம்மது . அவரின் செய்தி வெளியானவுடன் பாலஸ்தீன போராட்டக்காரர்கள் ஷேக் ஜர்ராவில் புரட்சி போராட்டத்தைத் தொடங்கினர் . மே 10 அன்று அங்கு வந்த இஸ்ரேலிய ராணுவம் அல் அக்சா மசூதியை முற்றுகையிட