சாதனை புரிந்த இளையோர் - கெயவோன் வுடார்ட் மாற்றுத்திறனாளிகளுக்கான திரை பிம்பம்
சாதனை புரிந்த இளையோர் - கெயவோன் வுடார்ட் மாற்றுத்திறனாளிகளுக்கான திரை பிம்பம் இந்திய சினிமாக்களில் நன்றாக நடிக்க கூடிய, சினிமா குடும்ப செல்வாக்கு இல்லாதவர்களை ஓரம்கட்டும் போக்கு உள்ளது. இதை வெளிப்படையாக பெருமையாக இந்தி சினிமா ஆட்கள் செய்கிறார்கள். மற்றவர்கள் மறைவாக செய்கிறார்கள். சாதி, மதம், இனம் சார்ந்த வேறுபாடுகள் மாற்ற முடியாமல் இறுகிப்போன மனங்கள் அதிகாரத்தில் உள்ளன. எனவே, சூழல்கள் நாட்டுக்கே பேராபத்தை ஏற்படுத்தும்படி மாறியுள்ளளன. திரையில் மாற்றுத்திறனாளிகளை எப்படி காட்டுவது என நிறைய இயக்குநர்களுக்கு இன்னும் தெரியவில்லை. பெரும்பாலும் அவர்களை கேலிக்குரியவர்களாக மாற்றி நகைச்சுவை செய்கிறார்கள். பார்வையாளர்களுக்கு அவை நகைச்சுவையாக இருக்கிறதா என்று யோசிக்கத் தெரியவில்லை. தங்களது அறியாமையை உறுதியாக வெளிப்படுத்தி வருகிறார்கள். பொதுவாகவே மாற்றுத்திறனாளிகளை குறிப்பிட்ட பாத்திரத்தில் நடிக்க வைத்து வெற்றி பெற முடியுமா என்றால் அது இயக்குநரின் திறனைப் பொறுத்தது. அந்த வகையில், காது கேட்க முடியாத சிறார் நடிகரான கெய்வோன் உழைப்பும் போட்டு, அதற்கு காலமும் பயன் கொடுத்...