இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாயேரிச எழுத்தாளர் விக்டர் ஹியூகோ!

படம்
விக்டர் ஹியூகோ ! ப்ரெஞ்ச் எழுத்தாளரான விக்டர் ஹியூகோ 1802 ஆம் ஆண்டு பிப் .26 அன்று பிறந்தவர் . எழுத்தாளராக   Les Miserables, The Hunchback of Notre-Dame உள்ளிட்ட புகழ்பெற்ற படைப்புகளை எழுதினார் . இதோடு , ஏராளமான படங்களையும் வரைந்து கண்காட்சி வைத்தார் . தன் வீட்டில் தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் விக்டர் ஹியூகோ , கற்பனை தடைபடும்போது தன் வேலையாட்களை கூப்பிட்டு முழு ஆடைகளையும் கழற்றிக் கொடுத்துவிடுவார் . நிர்வாண நிலையில் மீண்டும் பேனா பிடித்து நினைத்ததை எழுதி முடித்தபின்னரே ஆட்களை அழைத்து ஆடையை பெறுவார் . காமத்தில் பெருந்தீயாக வளர்ந்து எழுந்தவர் விக்டர் ஹியூகோ . ஒரேநாளில் நான்கு பெண்களுடன் உறவு கொண்ட ஹியூகோ , மணமான , பணிப்பெண்கள் உட்பட நூறுக்கும் மேலான பெண்களுடன் காமத்தேனை அருந்தினார் . அதோடு தன் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை அவர்களறியாமல் வேடிக்கை பார்க்கவென துளைகளை சுவர்களில் அமைத்த வாயேரிச எழுத்தாளர் விக்டர் . லெஸ் மிஸரபிள் நாவலை எழுத மட்டும் விக்டர் பதினேழு ஆண்டுகள் எடுத்துக்கொண்டார் . இதில் 6 லட்சத்து 55 ஆயிரத்து 478 வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார்

வாங்க கைகழுவோம்!

படம்
சோலார் பூங்கா ! கர்நாடகா அரசு , தும்கூர் மாவட்டத்தின் பாவகடா பகுதியில் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பூங்காவை உருவாக்கியுள்ளது . பதிமூன்றாயிரம் ஏக்கரில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள சோலார் பூங்காவின் செலவு , 16,500 கோடி . சக்தி ஸ்தலா என பெயரிடப்பட்டுள்ள இப்பூங்கா , முதல்கட்டமாக 600 மெகாவாட்டும் , இவ்வாண்டின் இறுதியில் 1400 மெகாவாட்டும் தயாரிக்கத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . கர்நாடகா சோலார் பாலிசி 2014-2021 படி இந்த சோலார் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது . விவசாயிகளிடம் 25 ஆண்டு குத்தகையாக பெறப்பட்டுள்ள நிலத்திற்கு ஆண்டிற்கு ரூ .21 ஆயிரமும் , இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தொகை 5% உயர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது .   KSPDCL, KREDL,SECI  ஆகிய அரசு நிறுவனங்கள் சக்தி ஸ்தலா சோலார் பூங்காவை உருவாக்கி பராமரிக்கின்றன . 2 ரத்த சரித்திரம் ! நமது ரத்தத்தில் சிவப்பணுக்கள் , வெள்ளையணுக்கள் , ரத்த தட்டுகள் , பிளாஸ்மா ஆகியவை உள்ளன . ரத்தத்திலுள்ள ஆன்டிஜென்கள் அடிப்படையில் ரத்தவகை பிரிக்கப்படுகிறது . இதுவரை நான்கு அடிப்படை ரத்த குரூப்கள்

புத்தகம் புதுசு!

படம்
LUCY CASTOR FINDS HER SPARKLE by  Natasha Lowe Page count: 240pp Publisher: Simon & Schuster லூசி காஸ்டர் அதிக மாற்றங்களை விரும்புபவள் அல்ல .  ஆனால் விரைவில் நான்காம் வகுப்பு செல்லவிருக்கிறாள் .  என்ன மாற்றங்களை சந்திக்கிறாள் என்பதே கதை .  லூசியின் தாய்க்கு பிறக்கவிருக்கும் ட்வின் சகோதரர்கள் ,  பக்கத்து வீட்டுத்தோழியின் பற்பல நிறங்களைக் கொண்ட முடி என சூழல்கள் லூசியை தடுமாற்றமடைய வைக்கின்றன .  லூசி எப்படி தன் கோபத்தையும் பதற்றத்தையும் கட்டுப்படுத்த கற்கிறாள் என்பதை ஆசிரியர் இனிய மொழியில் விவரிக்கிறார் . FLORETTE by  Anna Walker  ; illustrated by  Anna Walker 40pp, Clarion மே தன் நகரம் நோக்கி இடம்பெயர்ந்த பின் தான் வளர்த்த தோட்டத்தை நிரந்தரமாக பிரிந்துவிட்டதாக ஏக்கம் கொள்கிறாள் .  வண்ணத்துப்பூச்சிகள் ,  பறவைகளை அட்டைகளில் வைப்பதையும் மழை அடித்துக்கொண்டு போக ,  மீதியை மேயின் தந்தை குப்பை என கூட்டித்தள்ள நொந்துபோகும் மே ,  இறுதியாக தன் பிரிய தாவரங்களை வளர்க்க என்ன செய்தாள் என்பதை அழகிய படங்களுடன் விளக்கும் நூல் இது . Playing Atari with

கேட்கக் கூடாத கேள்விகள்!

படம்
2 பிளஸ் பாய்ண்ட்   ஜெ . திருமால்முத்து கேட்க கூடாத கேள்விகள் ! இன்டர்வியூவில் நீங்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்கிற டிப்ஸ் தேவைதான் . ஆனால் இன்டர்வியூவில் சில தவறுகள் செய்துவிடுகிறீர்கள் . வேலை அங்கு கிடைக்காது எனினும் , அத்தவறுகளை செய்யக்கூடாது என்ற விஷயம் புத்திக்கு சுருக்கென புரிவது லாபம்தானே ! இந்த வாரம் அத்தகைய கேள்விகளின் லிஸ்ட் இதோ ! உங்களைப் பற்றி அந்த நிறுவனத்தில் விசாரித்தோம் . ஆனால் அவர்கள் உங்களை தெரியாது என்று கூறுகிறார்களே ? இதன் அர்த்தம் ஒன்றுதான் . ரெஸ்யூமில் நீங்கள் பொய் சொல்லிவிட்டீர்கள் என்பதே மெய் . இதற்கு நீங்கள் சாரி கேட்டாலும் வேலை கிடைக்காது . வேலையில் சேரும் முன்பே நீங்கள் டுபாக்கூர் வேலைகள் பார்த்தால் எப்படி ? உங்களுடைய ஃபேஸ்புக் , ட்விட்டர் அக்கவுண்டுகளை பார்த்தோம் அதில் ..? சமூக வலைதளத்தில் நீங்கள் தற்போது வேலைக்கு வந்துள்ள நிறுவனம் குறித்த சர்சை கருத்துகள் , உங்கள் தோழர்களோடு மதுபானம் உள்ளிட்டவற்றைப் பற்றி இக்கேள்வி எழுப்பப்படலாம் . இன்று உங்களைப்பற்றி ஆன்லைனில் டைப் செய்தாலே தெரிந்துவிடும் . எனவே சோஷிய

நியூஜென் துறவிகள்- சமணத்தில் துறவு எப்படி சாத்தியமாகிறது?

படம்
புதிய தலைமுறை துறவிகள் !- ச . அன்பரசு அண்மையில் மும்பையில் சமண மதத்தைச் சேர்ந்த பதினாறு நபர்கள் புத்தம்புது துறவியாக தீக் ‌ ஷை பெற்றுள்ளனர் . இவர்களில் பெரும்பாலானோரின் வயது முப்பதே முப்பதுதான் . துறவியான அனைவருமே தொழிலில் , கல்வியில் , பணியில் அத்தனையிலும் டாப் பொசிஷனில் இருப்பவர்கள் . ஏன் தங்கள் பணியை , சொத்துக்களை விட்டு பிச்சைப்பாத்திரம் ஏந்த விரும்புகின்றனர் ? மும்பை புறநகரான போரிவலியில் அமைந்துள்ள சிம்பொலி கிரிக்கெட் மைதானம் . விஐபி வீட்டு கல்யாணம் போல சொகுசு கார்களில் ஜிகுஜிகு சேலைகளில் முகம் மலர்ந்த சிரிப்புடன் பெண்கள் இறங்குகின்றனர் . குளுமையான நிறங்களில் அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலில் குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர் . மெல்லியதாக இசை ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த ஸ்பாட்டில்தான் பதினாறு துறவிகளின் வாழ்க்கை புத்தம் புதிதாக தொடங்கப்போகிறது . ஆண்களும் , பெண்களும் ஸ்ட்ரிக்ட்டாக பிரிக்கப்பட்டு அமர்ந்திருந்த ஹாலில் பண்டிட் மகராஜின் தலைமையில் தீக் ‌ ஷை பூஜை அமளிதுமளியாக நடந்துகொண்டிருந்தது . கேமரா ட்ரோன் ஒன்று நடக்கும் நிகழ்வுகளை

இந்தியாவைக் காக்கும் தேள்ப்படை!

படம்
இந்தியாவைக் காக்கும் ஸ்கார்பியன் படை ! - ச . அன்பரசு இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பது , மக்களின் உணர்ச்சி வெறியைத் தூண்டி அதில் மீன் பிடிக்கும் அரசியல்வாதிகளல்ல ; நாட்டுக்காக உயிரை துச்சமாக மதித்து தீவிரவாதிகளை களத்தில் நேருக்குநேராக சந்தித்து போராடும் வீர தீர ஜவான்களின் படைதான் . அதிலும் ஸ்பெஷலானவர்கள் டெசர்ட் ஸ்கார்பியன்கள் எனும் சிறப்புப்படை . நீர் , நிலம் , ஆகாயம் என மூன்று இடங்களிலும் பட்டையக் கிளப்பி பாடுபடும் பாரா கமாண்டோ பிரிவில் சீட் போடுவது நூறில் இருவருக்கு மட்டுமே ஆயுள் சாத்தியம் . ஏன் ? பயிற்சிகள் அவ்வளவு டஃப் ! கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்திய பாகிஸ்தான் எல்லையைக் கடந்து நடந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதலில் ஒரு டஜனுக்கும் மேலான தீவிரவாதிகளை பரலோகம் அனுப்பியது ஸ்பெஷல் ஃபோர்ஸின் கைங்கரியம்தான் . சிறப்பு படையின் வீரதீரங்கள் அனைத்தும் தீவிரவாதிகளுடன் என்பதால் அனைத்தும் பிரேக்கிங் நியூஸ் ஆகாதபடி ரகசியம் காக்கிறார்கள் . ரௌத்திரம் பழகு ! அழிப்பது , வழிகாட்டுவது , தகவல்தொடர்பு , மருத்துவ உதவிகள் ஆகிய தகுதிகள் சிறப்புபடையில் இடம்பெற அடிப்படையானவை .

தன் மேல் சந்தேகப்படுபவர்களுக்கு என்ன பெயர்?

படம்
பிட்ஸ் ! 1890 ஆம் ஆண்டு படிக்கத்தூண்டும் ஆராய்ச்சியற்ற வதந்தி தகவல்களை வெளியிடும் பத்திரிக்கை பணியை Yellow Journalism என்று குறிப்பிட்டனர் . அமெரிக்காவின் 1 சென்ட் நாணயத்தை வடிவமைத்தவர் , பெஞ்சமின் பிராங்ளின் . அதிலுள்ள ஃப்யூஜியோ என்ற வார்த்தைக்கு லத்தீனில் நான் பறக்கிறேன் என்று அர்த்தம் . ஸ்வீடனிலுள்ள சில பல்கலைக்கழகங்களில் இரவு பத்துமணிக்கு மாணவ , மாணவிகள் கோரஸாக கத்துகிறார்கள் . இதற்கு Flogsta Scream என்று பெயர் . மனஅழுத்தம் போக்க செய்யும் முயற்சியாம் இது . தன்மேல் சந்தேகம் கொண்டு எப்போதுமே அவநம்பிக்கையாகவே பேசுபவர்களை Nehaholics எனலாம் . கோகைன் போதைப்பொருளைப் பயன்படுத்தினால் மூளையின் நினைவுகள் மெல்ல அழியும் . நன்றி: முத்தாரம் தொகுப்பு: கோமாளிமேடை டீம்

பிளேசர் ரகசியம்!

படம்
பிளேசர் ரகசியம் ! சட்டைக்கு மேல் அணியும் கேஷூவல் ஜாக்கெட்தான் பிளேசர் . அதில் முதலிரண்டு பட்டன்கள் சரியாக பயன்பட்டாலும் இறுதி பட்டனை பலரும் பயன்படுத்துவதில்லை ஏன் ? காரணம் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட்வர்ட் (1841-1910). சாப்பாட்டு பிரியரான இளவரசர் எட்வர்ட் பன்றி இறைச்சி , முட்டைகள் ஆகியவற்றை காலை உணவாகவும் , வறுத்த மாட்டிறைச்சி , கேக்குகளை மதிய உணவாகவும் தின்று வளர்ந்தார் . வயிறு சைஸ் 48 இன்ச் . முரட்டுத்தீனி தின்றதால் தன் கோட்டின் மூன்றாவது பட்டனை அவரால் போட முடிந்ததே இல்லை . மன்னரைப்போலத்தானே மக்களும் இருக்கவேண்டும் . பிரபுக்கள் , நாடக நடிகர்கள் என அனைவரும் டவுட் கேட்காமல் மூன்றாவது பட்டனை போடாமல் ராஜ விசுவாசம் காட்ட அதுவே ஃபேஷனாகிப்போனது . ஆபீஸ் போவது போல விருந்துகளுக்கு போக விரும்பாத இளவரசராக இருந்த எட்வர்ட் கேஷூவலாக சூட் உடைக்கு போ டை கட்டி ஃபங்க்‌ஷனுக்கு சென்றார் . அவரது நண்பர் ஜேம்ஸ் ப்ரௌன் பாட்டர் அதே ஸ்டைலை கமா மாறாமல் அமெரிக்காவிற்கு கொண்டு சென்று பரப்ப புதிய டின்னர் உடை பிறந்தது .   தொகுப்பு: ரஜாகான், சுசீமேனன் நன்

"இந்தியாவை தனியாருக்கு தாரை வார்ப்பதே அரசின் திட்டம்"

படம்
முத்தாரம் Mini பட்ஜெட் பற்றிய உங்கள் கருத்தென்ன ? விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ . 9,793 கோடி ரூபாய் எனக் கூறப்பட்டது . விவசாயத்தில் அரசு முதலீடு செய்யும் என நிதியமைச்சர் கூறினாலும் அதில் உண்மையில்லை . காரிஃப் , ரபி பருவத்திற்கு குறைந்தபட்ச விலையை அளித்துவிட்டதாக கூறியுள்ளது . ஆனால் மகாராஷ்டிரா அரசு இதுபற்றி ஆராய கமிட்டி தேவை என கூறியுள்ளது . ஏன் இந்த குழப்பம் ? பிரதமர் மோடி அறிவித்த தேசிய மருத்து பாதுகாப்புத்திட்டம் உலகிலேயே மிகப்பெரிய திட்டம் அல்லவா ? குடும்பத்திற்கு தலா ரூ .5 லட்சம் என ஐம்பது கோடி மக்களுக்கு அறிவித்த திட்டம் செயல்படுத்தப்படுவதிலேயே வெற்றி உள்ளது . பத்து லட்சம் குடும்பங்களுக்கு செலவிடவே இத்தொகை போதுமா என்று தெரியவில்லை . அரசின் பயிர்க்காப்பீட்டிலே பெறப்பட்ட பிரீமியத்தொகையில் ஒரு சதவிகிதம் கூட விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை . காப்பீடு தனியாரிடம் செல்லும்போது , மக்களின் பயன்கள் குறையும் . மேக் இன் இந்தியா பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? பாதுகாப்புத்துறையில் அரசின் முதலீடு மிக குறைவு . 50 சதவிகித ஆயுதங்கள் வெளிநாட்டுவரவு . லோக்கீத

துப்பாக்கிக்கு கட்டுப்பாடு!

படம்
பிழைக்குமா கரப்பான்பூச்சிகள் ? அகில உலக கேரக்டராக சந்து பொந்து எங்கும் வாழும் உயிரியான கரப்பான்பூச்சி , மனிதர்களையும் இயற்கையும் சமாளித்து இன்றும் அழியாமல் வாழ்ந்து வருகிறது . 3 கோடி ஆண்டுகளாக வாழும் உயிரி , அணு ஆயுதப்போரிலும் பிழைக்கும் என நம்புகிறார்கள் . கதிர்வீச்சை தாங்குவதில் மனிதர்களை விட வலிமை கொண்டது கரப்பான் . ஒரு மாதத்திற்கும் மேல் சாப்பிடாமல் தாக்குப்பிடிக்கும் இதன் திறன் , அணுஆயுதப்போரில் உதவும் என கணிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . பரிணாம வளர்ச்சியின் வேகமும் , விஷத்தையும் கதிர்வீச்சையும் எதிர்த்து தாங்கும் வலிமையும் கரப்பானுக்கு கவசமாக உதவலாம் . வண்டுகள் , கரப்பான்பூச்சிகளை வைத்து ஆராய்ச்சியாளர்கள் செய்த டெஸ்டில் மனிதர்களை கொல்லுமளவு பத்து மடங்கு கதிர்வீச்சு பயன்படுத்தியபோது , வண்டுகள் கரப்பான்பூச்சியையும் தாண்டி தாக்குப்பிடித்து சாதித்தன . 4 ஆயிரம் வகை கரப்பான்பூச்சிகள் கோடிக்கணக்கில் உயிர்வாழ்வதால் , அவற்றில் சில நியூக்ளியர் போரில் பிழைக்க வாய்ப்புண்டு . கண்நோய்களை கண்டறியும் கூகுள் ! கூகுள் ஆராய்ச்சியாளர்கள் கண்களை ஆய்வு செய்து அதன் ம

அண்டார்டிகாவில் குடியேற முடியுமா?

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ? -Mr. ரோனி அண்டார்டிகா அல்லது ஐஸ்லாந்தில் பனி உருகியபிறகு அங்கு குடியேறமுடியுமா ? அப்படி தங்க பல்லாண்டுகள் தேவை . அண்டார்டிகா மற்றும் ஐஸ்லாந்தில் உள்ள ஐஸ் கட்டிகள் உருகினால் கடல்மட்டம் 68 மீட்டர் உயரும் . இதன்விளைவாக ஐரோப்பாவின் பெரும்பாலான இடங்கள் நீருக்குள் நீச்சலடித்துக் கொண்டிருக்கும் . கூடவே ஆசியா , கனடா , தென் அமெரிக்காவின் பலபகுதிகளும் பாதிக்கப்பட்டிருக்கும் . தற்போது ஐஸ்லாந்து மற்றும் அன்டார்டிகாவின் மேலுள்ள ஐஸ்கட்டிகள் உருகி கீழே வந்துகொண்டிருக்கின்றன . பனிக்கட்டிகள் உருகிவிட்டால் நீரிருந்த பரப்பு வாழும் இடமாக பல நூறு ஆண்டுகள் தேவை . அன்டார்டிகா ஆஸ்திரேலியா போலவும் , ஐஸ்லாந்து குவளை போன்றிருப்பதால் தங்குவதற்கான வாய்ப்பு உள்ளது . ஆனால் அன்டார்டிகா , காசாகிராண்டே போலவெல்லாம் ரியல் எஸ்டேட் விளம்பரம் கொடுக்கும்படி கிராக்கி வராது என நம்புவோம் . தொகுப்பு: கா.சி.வின்சென்ட் நன்றி: முத்தாரம்