வாயேரிச எழுத்தாளர் விக்டர் ஹியூகோ!
விக்டர் ஹியூகோ!
ப்ரெஞ்ச் எழுத்தாளரான
விக்டர் ஹியூகோ 1802
ஆம் ஆண்டு பிப்.26 அன்று பிறந்தவர். எழுத்தாளராக Les
Miserables, The Hunchback of Notre-Dame உள்ளிட்ட புகழ்பெற்ற படைப்புகளை
எழுதினார். இதோடு, ஏராளமான படங்களையும்
வரைந்து கண்காட்சி வைத்தார்.
தன் வீட்டில் தீவிரமாக
எழுதிக்கொண்டிருக்கும் விக்டர் ஹியூகோ, கற்பனை தடைபடும்போது தன் வேலையாட்களை
கூப்பிட்டு முழு ஆடைகளையும் கழற்றிக் கொடுத்துவிடுவார். நிர்வாண
நிலையில் மீண்டும் பேனா பிடித்து நினைத்ததை எழுதி முடித்தபின்னரே ஆட்களை அழைத்து ஆடையை
பெறுவார்.
காமத்தில் பெருந்தீயாக
வளர்ந்து எழுந்தவர் விக்டர் ஹியூகோ. ஒரேநாளில் நான்கு பெண்களுடன் உறவு
கொண்ட ஹியூகோ, மணமான, பணிப்பெண்கள் உட்பட
நூறுக்கும் மேலான பெண்களுடன் காமத்தேனை அருந்தினார். அதோடு தன்
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை அவர்களறியாமல் வேடிக்கை பார்க்கவென துளைகளை சுவர்களில்
அமைத்த வாயேரிச எழுத்தாளர் விக்டர்.
லெஸ் மிஸரபிள்
நாவலை எழுத மட்டும் விக்டர் பதினேழு ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். இதில்
6 லட்சத்து 55 ஆயிரத்து 478 வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார்.
விக்டர் ஹியூகோவின் 79 ஆவது
பிறந்தநாளில் அவரது வீட்டுக்கு 50 ஆயிரம் பேர் வாழ்த்துகளைச்
சொல்ல திரண்டனர். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள்
திரண்டு தேசியகீதத்தை விக்டருக்கு அர்ப்பணித்தனர்.
தொகுப்பு: விக்டர் காமெஸி
நன்றி: முத்தாரம்