நேர்காணல்:"இந்திய சமூகம் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை"
முத்தாரம் நேர்காணல்
"இந்திய சமூகம் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை"
ஓம்பிரகாஷ் ராவத், தலைமை தேர்தல் ஆணையர்.
தமிழில்:
ச.அன்பரசு
ஐஏஎஸ் அதிகாரியான ஓம்பிரகாஷ் ராவத், 1997 பேட்ஜ்ஜைச் சேர்ந்தவர். ஜனவரி 21 இல் ஏ.கே.ஜோதிக்கு பிறகு 21 ஆவமு தலைமை தேர்தல் ஆணையராக ராவத் பொறுப்பேற்றார். 2004 ஆம் ஆண்டு ம.பியில் பிஜேபி முதல்வரான பாபுலால் கௌரின் முதன்மை செயலராக பணியாற்றினார் ராவத்.
தேர்தல் ஆணையத்தின் முன்னுரிமைகளாக எதனைக் கருதுகிறீர்கள்?
டி.என்.சேஷன், ஜே.எம். லிங்டா, எம்.எஸ்.கில், டாக்டர். நசீம் ஜைதி ஆகிய தேர்தல் ஆணையர்கள் தம் செயல்பாடுகளால் இன்றும் மக்களால் நினைவுகூரப்படுகிறார்கள். இவர்கள்தான் எனக்கு முன்னோடிகள். தேர்தல் முறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதே என் முன்னுள்ள தலையாய பணி.
உங்கள் பார்வையில் தேர்தல்முறை எப்படி மாறியிருக்கின்றன?
நான்
அரசுப்பணியில் இணையும்போது எலக்ட்ரானிக் மெஷின் கிடையாது.
முதலில் பேப்பரில் குத்தி ஓட்டுப்பெட்டியில் போட்ட முறை இன்று சாத்தியமல்ல. இன்று ஓட்டுப்போட ஒருவருக்கு இருபது நொடிகள் போதும்.
சராசரியாக ஐந்து மணிநேரத்திற்கு ஆயிரம் ஓட்டுகள்.
இதற்கான பாதுகாப்பு பணி உள்ளிட்ட அனைத்தும் மிச்சம்தானே! டெல்லி,கோவா,மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் மக்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெற்று ஜெயிக்கிறார்கள். தமிழ்நாட்டில் 89 கோடி ரூபாயை இப்படி கைப்பற்றினோம். இத்தனைக்கும் அது ஒரே ஒரு தொகுதி.
தேர்தலை முதலீடாக பார்க்கத்தொடங்கியதன் அவலம் இது.
கட்டாய ஓட்டு என்ற திட்டத்தை என்பதை வரவேற்கிறீர்களா?
நமது
சமூகம் இதுபோன்ற விதிகளுக்கு இன்னும் பழகவில்லை.
மத்திய பிரதேசத்தில் வன உரிமை சட்டத்தை அமுல்படுத்தியபோது, பழங்குடிகள் அதனை எதிர்த்தார்கள். ஏனெனில் தினக்கூலிகளாக அவர்கள் இச்சட்டத்திற்கு உட்பட்டு ஆவணங்களை பதிவு செய்ய முன்வரவில்லை. கட்டாய ஓட்டு என
சட்டம் கொண்டுவரும்போது பாதிக்கப்படுவது இவர்களைப் போன்றோர்தான். தேர்தல் விழிப்புணர்வு (SVEEP) பிரசாரத்தை செய்து ஓட்டு சதவிகிதத்தைக் கூட்டலாம்.
வாக்காளர்களில் 30 சதவிகிதத்தினர் வாக்களிப்பதே இல்லையே ஏன்?
நீங்கள்
குறிப்பிடுவது இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களைத்தான். விரைவில் இப்பிரச்னைக்கான தீர்வு பற்றி விவாதிக்கவிருக்கிறோம்.
எலக்ட்ரானிக் மெஷின் குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதே?
மெஷினை
நாங்கள் பேட்டரி சக்தியில்தான் இயக்கி வருகிறோம்.
இதன் செயல்பாட்டை சரிபார்க்க மக்களவை தொகுதிகளில் VVPAT எனும் சிலிப் வழங்கும்படியான முறையை கொண்டு வந்து வெற்றி பெற்றிருக்கிறோம். இதனை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது என்பதே நிரூபிக்கப்பட்ட உண்மை.
மத்தியபிரதேசத்திலுள்ள அமைச்சரை தேர்தலில் போட்டியிட முடியாதபடி தகுதிநீக்கம் செய்திருக்கிறீர்கள். அது பற்றிக்கூறுங்கள்.
பெய்டு நியூஸ் விவகாரம் மாறிவருகிறது. முதலில் இதுதொடர்பான வழக்குகளை நாங்கள் ஏற்கவில்லை. தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், இதுதொடர்பாக நிறைய வழக்குகளை ஆராய்ந்து தொடர்புடையவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மேலும் வேட்பாளர்கள் குற்றச்சாட்டை மறுக்காமல் தங்கள் செலவுக்கணக்கில் ஏற்றுக்கொள்கின்றனர்.
டிசம்பரில் பணி நிறைவு பெறும் சூழலில் எட்டு மாநிலங்களில் தேர்தல்களை நடத்தவிருக்கிறீர்கள். இதுபற்றிய திட்டங்கள் ஏதேனும் உள்ளதா?
தேர்தல் ஆணையத்தின் விதிகள், தொழில்நுட்பம், சட்டங்கள் ஆகியவை காலத்திற்கேற்ப புதிய பரிமாணத்தில் வளர்ச்சி பெறவேண்டும் என்பதே எனது ஆசை.
நன்றி:
தீபக் திவாரி, தி வீக்