ஆன்டிபயாடிக்கிற்கு மாற்று!
எதிரியின் எதிரி!
கடந்தாண்டு ஏப்ரலில், சான்டியாகோ மருத்துவக்கல்லூரியில் தீவிர தொற்றுநோய் பாதிப்பில் அட்மிட்டானவருக்கு
எந்த ஆன்டிபயாடிக்கும் பயனளிக்கவில்லை. கோமா சென்றவர் இறப்புக்கு
அருகிலிருந்தார் அப்போது ட்ரையலாக bacteriophages எனும் பாக்டீரியா உண்ணும் வைரஸை உடலில்
செலுத்த பேஷன்ட் பிழைத்தார்.
எஃப்டிஏ இச்சிகிச்சையை பயன்படுத்த அனுமதி
தந்ததோடு விவசாயத்துறையிலும் கால்நடைகளிலும் பயன்படுத்த பர்மிஷன் தந்துவிட்டது.
ஐரோப்பிய யூனியன் தீப்புண்களை ஆற்ற பாக்டீரியாதின்னி வைரஸ்களை பயன்படுத்த
யோசித்துள்ளது. 1919 ஆம் ஆண்டு பிரான்சின் பாரீசிலுள்ள பாஸ்டர்
இன்ஸ்டிடியூட்டில் ஃபெலிக்ஸ் ஹெரல்லே வயிற்றுப்போக்கு தீராத சிறுவனுக்கு பாக்டீரியாதின்னி(Phage
therapy) வைரஸை உடலில் செலுத்தி குணமாக்கினார். 1915 ஆம் ஆண்டே பேஜோதெரபியை ஃபெலிக்ஸ் கண்டறிந்தாலும் முறையான கல்வி கற்காததால்
இவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதன் இன்னொருவடிவாக
1945 ஆம் ஆண்டு பென்சிலின் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இன்று ஆன்டிபயாடிக்குகளை பாக்டீரியாக்கள் எளிதாக எதிர்க்கத் தொடங்கிவிட்டதால்
மாற்று வழியாக பேஜோதெரபி உதவும். ஆராய்ச்சிகள் தொடர்ந்தால் மட்டுமே
பேஜோதெரபியிலுள்ள சேமிப்பு, அதன் இயக்கம் குறித்த டவுட்கள் தீரும்.
தொகுப்பு: மோனா எஸ்தர், குணால் வத்சவா
நன்றி: முத்தாரம்