அழகின் அழகு!



Image result for beauty



அழகின் அழகு!

கடந்தாண்டு உலகம் முழுக்க பயன்படுத்தப்பட்ட காஸ்மெடிக்ஸ் வணிகத்தின் மதிப்பு - 10.7 பில்லியன் டாலர்கள். இது கோஸ்டாரிகாவின் ஓராண்டு ஏற்றுமதி மதிப்புக்கு சமம்.

அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், இத்தாலி, மெக்சிகோ ஆகிய ஐந்து நாடுகள்தான் உலகின் காஸ்மெடிக் பிசினஸ் மையங்கள். நடைபெற்ற சிகிச்சைகளின் அளவு 41.4%. அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 10.4 மில்லியன்.

முகம் மற்றும் உடல் தொடர்பான மேம்படுத்தல் சிகிச்சைகள் செய்தவர்களின் எண்ணிக்கை 23.6 மில்லியன். 2015 ஆம் ஆண்டைவிட 9% அதிகம்.

இதில் 14% வாடிக்கையாளர்கள் ஆண்கள். கொழுப்பு நீக்கம், முடிமாற்று அறுவைசிகிச்சை, மார்பக திருத்தம் என அறுவை சிகிச்சைகளை ஆண்கள் மேற்கொண்டனர்.

மார்பகத்தை பெரிதாக்குதல்(15.8%), லிப்போசக்‌ஷன்(14%), கண்ணிமை அறுவைசிகிச்சை(13%), மூக்கு திருத்தம்(7.6%) ஆகியவை 2016 ஆம் ஆண்டு புகழ்பெற்ற சிகிச்சைகளாக இருந்தன.  

2

பிட்ஸ்!

கூச்சப்படுபவர், கலகலப்பாக பழகுபவர் இருவருக்குமிடையே உள்ள குணம் கொண்டவர்களுக்கு Ambivert என்று பெயர்.

முன்பு மெக்சிகோவில் அவகாடோ பழத்தொழில் கார்டெல் முறையில் ஏகபோகமாக நடைபெற்றது. பண்ணையை பாதுகாக்க துப்பாக்கியுடன் தனி வீரர்படையையே பண்ணை முதலாளிகள் வைத்திருந்தனர்.

ஆப்பிள், ஆரஞ்சுகளில் ஓட்டப்படும் ஸ்டிக்கர் பசை உடலுக்கு கேடுவிளைக்காதபடி தயாரிக்கப்படுகின்றன.

ஹிட்லரின் டாக்டர் தியோடர் மோரல், தன்னுடைய சோதனைகளை டைரியில் குறித்து வைத்திருந்தார். இதில் அட்ரோபின்,மார்பின், காபீன், கோகைன், ஹெராயின் ஆகிய வேதிப்பொருட்களைப் பற்றிய குறிப்புகள் இருந்தன.

கழிவறைக்கு தண்ணீர் ஊற்றவில்லை என்றால் சிங்கப்பூரில் 150 டாலர்கள் ஃபைன் உண்டு.  

 3
நிஜமும் புரளியும்!

சர்க்கரை குழந்தைகளுக்கு அதீத சுறுசுறுப்பைத் தரும்!

இந்த நம்பிக்கைக்கு அறிவியல்பூர்வமான அணுவளவு ஆதாரமும் கிடையாது. 1974 ஆம் ஆண்டு டாக்டர் வில்லியம் க்ரூக், அமெரிக்க குழந்தை மருத்துவச்சங்கத்திற்கு  எழுதிய கடிதத்தில் "கடந்த மூன்று ஆண்டுகளாக சர்க்கரை குறித்து நான் செய்த ஆராய்ச்சியில் குழந்தைகளை அது சுறுசுறுப்பாக்குகிறது" என்று குறிப்பிட்டதுதான் புரளிகளுக்கு காரணம். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ADHD குறைப்பாட்டை ஊக்கப்படுத்துகிறது என்று பலர் கூறினாலும் பின்தொடர்ந்த ஆராய்ச்சிகள் அதனை தவறு உறுதி செய்தன என்கிறது தேசிய உளவியல் கழகம்.

கேரட்டை நிறைய தின்றால் இரவுப்பார்வை தெளிவாகும்!

கேரட்டில் வைட்டமின் ஏ சத்து கண்களுக்கு வலிமை தரக்கூடியது. அதற்காக கிலோகணக்கில் கேரட்டையே மீல்ஸாக சாப்பிட்டால் சூப்பர்மேன் போல எக்ஸ்‌ரே பார்வையெல்லாம் கிடைத்துவிடாது. இங்கிலாந்து நாட்டின் விமானிகள், இரண்டாம் உலகப்போரில் இரவில் ரேடார் மூலம் இலக்கை தாக்கியபோது கிளம்பிய வதந்தி இது.

மனிதர்களுக்கு மூளை செல்கள் புதிதாக வளராது!

நம் மூளையிலுள்ள செல்கள் பிறக்கும்போதே உருவானவை அல்ல. மூளை செல்கள் குறிப்பிட்ட வயது வரை வளருவதற்கான அறிவியல் ஆதாரங்கள் உண்டு. இச்செயல்முறையை நியூரோஜெனசிஸ் என்பார்கள்.

தொகுப்பு: செரீன் கெய்ன், பெனிரா வெம்
நன்றி: முத்தாரம்