சார் போஸ்ட்!
சார் போஸ்ட்!
தபால்பெட்டி ஆபத்து!
வீட்டில் முன்னாடியே
வைத்திருக்கும் தபால்பெட்டி என்றாலும் தொப்பி, ஜோல்னாபை என சுற்றும் தபால்காரரை
நாய்கள் சும்மாவிடுமா? எனவே வெளிப்புறத்தைவிட உட்புறம் உள்ள போஸ்ட்பாக்ஸ்களை
திறப்பதில் கவனம் தேவை. நாய் உங்களை அட்டாக் செய்யும்போது,
சடக்கென ஜோல்னாபையை நுன்சாக்காக பயன்படுத்தி தடுத்து உயிர்தப்பி ஓடலாம்.
எக்சர்ஸைஸ் வேண்டாம்!
தபால்களை பட்டுவாடா
செய்வதே உடற்பயிற்சிதான் பாஸ்! வெட்டுக்கிளி கால்களும் ஆட்டோமேடிக்காக நடந்து
சைக்கிள் பெடல் செய்து கட்டழகு கால்களாக மாறிவிடுவதோடு டயட்டின்றி எடையும் குறையும்.
அதோடு கொண்டுவரும் பார்சல் கிப்ட்கள் தொடர்புடையவருக்கு பரம சந்தோஷம்
தந்தால் தீபாவளி, பொங்கல்
என டிப்ஸ்களும் நிறைய கிடைக்கும்.
அதிகாரமற்ற பாதுகாவலர்கள்!
உடல்நலமற்ற பெற்றோர்களுக்கு
கடிதம் அனுப்புகிறீர்கள்.
கொண்டுவரும் தபால்களை பெற வீட்டுக்காரர் வரவில்லை எனில் உடனே உதவி கோரி
சம்பந்தப்பட்டவர் நலமாக இருக்கிறாரா என்பதையும் தபால்காரர் உறுதி செய்கிறார்.
குப்பை கடிதங்களையும் கூட அக்கறையாக டெலிவரி செய்பவர் நம்ம ஊர் தபால்காரர்கள்தான்.
இன்று மவுசில்லை என்றாலும் நினைத்துப் பார்க்க கூடிய உறவு அவர்களிடம்
அனைவருக்கும் ஏதாவது இருக்கும்.
2
கஞ்சா இழையில்
பிசினஸ்!
குவைத்தைச்சேர்ந்த
எல்ஸ்டன் மற்றும் பென்சன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிப்படிப்பிற்காக பெங்களூரு
சென்றனர்.
தங்கி படிக்கும்போது லீவில் நேபாளம் சென்ற நண்பன் திரும்பி வரும்போது
கொண்டு வந்த பர்ஸ் கஞ்சாவின் இழையில் தயாரித்தது என்று சொல்ல ஆச்சரியமானார்கள்.
மருந்துகள், கார் உதிரிபாகங்கள் என ஏறத்தாழ
30 ஆயிரம் பொருட்கள் கஞ்சாசெடி இழைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
நேபாள அரசு கஞ்சா இழை பொருட்களை குடிசைத்தொழிலாக
செய்ய மக்களை ஊக்குவிக்கிறது. 2012 ஆம் ஆண்டில் கஞ்சா இழைகளில்
பொருட்களை செய்து ஸ்டால் போட்டபோது, கடைக்கு போலீஸ் என்கொயரிக்கு
வந்துவிட்டது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பிஈ ஹெம்ப் என்ற இவர்களின்
நிறுவனம் பேக், ரிஸ்ட் பேண்ட்ஸ், துணிகள்,
சீனா மற்றும் ஸ்பெயினிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து விற்கிறார்கள்.
ஒருவார விற்பனை ரூ.60 ஆயிரம்.
Tetrahyrdocannabinol (THC) என்ற வேதிப்பொருளின் அளவு 0.3 கிராம் இருக்கவேண்டும் என்பதே சர்வதேசவிதி. இந்தியாவில்
இதன் அளவு 2-3 கிராம் இருப்பது போதைப்பொருள் பிரிவில் வராது. உலகெங்கும் உள்ள கஞ்சா இழை பொருட்களின்
பிஸினஸ் மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய். இந்தியாவிலும் Boheco, BE
hemp உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இப்பொருட்களை விற்கவென ஸ்டார்ட் அப்களாக
உருவாகி வளர்ந்து வருகின்றன.
3
மருந்தில்லாத குறைபாடு!
புற்றுநோய், சர்க்கரைநோய்
ஆகியவற்றுக்கான மருந்துகள் சிகிச்சைகள் இன்று கட்டுப்படுத்தவேனும் உருவாகியுள்ளன.
ஆனால் மூளையில் ஏற்படும் குறைபாடான டீமென்ஷியாவுக்கு இன்றும் மருந்து
கண்டறிவதில் சுணக்கம் உள்ளது.
· அமெரிக்காவில்
டீமென்ஷியா குறைபாடுகளால் 2050 ஆம் ஆண்டில் மட்டும்
1.6 கோடி நோயாளிகள் உருவாக வாய்ப்பு
உள்ளது. உலகெங்கும் அடுத்த இருபது ஆண்டுகளில் 5 கோடி மக்கள் டீமென்ஷியா குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள். அடுத்த இருபது ஆண்டுகளில் இது இருமடங்காக அதிகரிக்கும்.
· 1906
ஆம் ஆண்டு டாக்டர் அல்ஸீமர் டீமென்ஷியா குறைபாட்டைக் கண்டறிந்தார். அமெரிக்காவில் இந்நோயின் சந்தை மதிப்பு 30 பில்லியன்.
· இந்தியாவில்
டீமென்ஷியா குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் அளவு 41 லட்சம்(2015)
· உலகிலுள்ள
நாடுகளில் அதிகளவு டீமென்ஷியா பாதிப்பு கொண்ட நாடுகளில் இந்தியாவின் இடம் மூன்று. முதல் இடத்தை சீனாவும், அடுத்த இடத்தை அமெரிக்காவும்
பிடித்துள்ளன.
· டீமென்ஷியாவின்
வகைகள்:
அல்ஸீமர் நோய், வஸ்குலர் டீமென்ஷியா, லெவி பாடி டீமென்ஷியா, ஃப்ரான்டோ டெம்ப்ரல் டீமென்ஷியா.
தொகுப்பு: கோமாளிமேடை டீம்
நன்றி: முத்தாரம்