நேர்காணல்:"மூன்று தலைமுறையாக ஒரே பொய்யை நம்பி வாழ்கிறார்கள்"
முத்தாரம் நேர்காணல்
"மூன்று தலைமுறையாக ஒரே பொய்யை நம்பி வாழ்கிறார்கள்"
சுகி கிம், கொரிய
-அமெரிக்க பத்திரிகையாளர்.
தமிழில்: ச.அன்பரசு
கொரிய- அமெரிக்க
பத்திரிகையாளரான சுகி கிம் தென்கொரியாவில் பிறந்தவர். பதிமூன்று
வயதில் அமெரிக்காவுக்கு சென்றவர், 2002 ஆம் ஆண்டு கிம் ஜாங்கின்
அறுபதாவது பிறந்தநாளுக்கு வடகொரியா வந்தார். ஆசிரியர்களின் உடமைகள்,
வகுப்பறைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் அங்கு ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்
சுகி கிம். 2 லட்சம் அரசியல் கைதிகள் உள்ளதாக ஹியூமன் வாட்ச்
அமைப்பு செய்தி தெரிவிக்கிறது.
உங்களது நூலில்
தவிர்க்கமுடியாத சோகம் உள்ளாடுகிறதே? விஷயங்கள் என்றென்றைக்குமாக மாறாது
என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா?
அங்குள்ள மாணவர்கள்
அன்பானவர்கள்.
ஆனால் அவர்கள் மோசமான நிலையில் வளர்க்கப்படுகிறார்கள். உங்களது சகோதரராக, சகோதரியாக நினைக்கும்போதுதான் அவர்களின்
கனவுகள் படுகொலை செய்யப்படுவதை உங்களால் உணர முடியும்.
சர்வாதிகார நாடுகளான
சீனா,
கியூபா ஆகிய நாடுகளைப் போலே வடகொரியா உள்ளது என கூறலாமா?
சீனா கியூபா ஆகிய
நாடுகள் போல சில விஷயங்கள் உண்டுதான். ஆனால் சிறந்த தலைவர் என்ற பொய்யை
நம்பி மூன்று தலைமுறையாக வாழும் மக்கள் பரிதாபமானவர்கள். இணையத்தில்
கிம் ஜாங் உன் என்றோ, கொரியா என்றோ தட்டச்சு செய்து பார்த்தால்தான்
அவர்களுக்கு உண்மை நிலவரம் புரியும். அதுவரை தங்கள் தலைவர் உலகை
வென்றுவிடுவார் என்றே நம்பியிருப்பார்கள். கிம் படுகொலை செய்யப்படும்போது
பொய்யான உலகை வார்த்தைகளை நம்பியுள்ள 25 மில்லியன் மக்களின் நிலை
என்னவாகும்?
வடகொரியா மக்கள்
பொய்யின் நிழலில் வாழ்வதாக கூறுகிறீர்கள். அங்கு என்னவிதமான சூழல்
நிலவுகிறது?
நீங்கள் நாளிதழ்களில்
பார்க்கும் செய்திகள் தவறானவை அல்ல. முழு உலகே தவறான செய்திகளை தந்துகொண்டிருக்கிறது.
என் வகுப்பிலுள்ள மாணவர்கள் அதிகம் பொய் சொல்லுபவர்கள். உண்மை எது, பொய் எது என உணர முடியாமல் பேச பழகியிருந்தனர்.
மனிதநேயம் பற்றி கேள்வி எழுப்புமளவு இதயத்தை வருத்திய சம்பவம் இதுவே.
வரிசையாக உணவு வாங்க செல்வது, காலையில் நாட்டு
அதிபரை புகழ்ந்து பாடுவது எவ்வளவு நேரம் வீணாகிறது பாருங்கள். பியாங்யாங்கிலுள்ள நகரங்களை கடக்கவே உங்களுக்கு அனுமதி அட்டை தேவை.
நாஸியின் வதை முகாம்களைப் போல இன்றும் வடகொரியாவில் முகாம்கள் செயல்படுகின்றன.
அமெரிக்காவின்
ட்ரம்ப்,
வடகொரியாவின் கிம் என இருவரும்தான் இன்று பலருக்கும் நினைவுக்கு வருகிற
முகங்கள். வடகொரியா உண்மையில் ஆபத்தான நாடா?
ட்ரம்ப் வடகொரியாவின்
மீது குற்றச்சாட்டுகளை அடுக்குவது அவரின் சுயநலனிற்காகத்தான். இப்போது
ஒலிம்பிக்ஸ் போட்டி தென் கொரியாவில் நடைபெறுகிறது. ஆனால் இது
இருநாடுகளின் கொள்கையில் எவ்வித மாற்றத்தையும் தந்துவிடாது. அமெரிக்கா
தொடர்ந்து அணு ஆயுத மிரட்டல் தருவது சிறந்த அணுகுமுறையல்ல.
நன்றி: Harsimran
Gill,scroll.in
தொகுப்பு: விக்டர் காமெஸி, இம்மானுவேல் தாங்கர்