அறிவியல் நொறுக்ஸ்!
கடவுளும் நம்பிக்கையும்!
அமெரிக்க நாணயங்கள்
மற்றும் கரன்சிகளில் கடவுள் மீது சாட்சியாக என்ற வார்த்தை அச்சிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தை
அன்றிலிருந்து இன்றுவரை சர்ச்சையான மேட்டர்.
1861 ஆம்
ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த அமைச்சர், கருவூலத்துறை
செயலர் சால்மன் பி. சேஸூக்கு 'நாணய டிசைனில்
கடவுளின் அங்கீகாரம்' வேண்டி கடிதம் எழுதியிருக்கிறார்.
இது கருவூலத்துறை பதிவேடுகளில் பதிவாகியுள்ளது. 1864 ஆம் ஆண்டு காங்கிரஸ் அவை இரண்டு மற்றும் மூன்று சென்ட் நாணயங்களில் கடவுள் வார்த்தை அச்சிட முடிவானது. அவ்வாண்டின் இறுதியில் வெளியான இரண்டு சென்ட் நாணயங்களில் 'In God
we trust' வார்த்தை இடம்பெற்றுவிட்டது.
கரன்சிகளில் கடவுள் நம்பிக்கை வார்த்தை 1955 ஆம்
ஆண்டிலிருந்து இடம்பெறத்தொடங்கியது. மதத்தை திட்டமிட்டு குறிப்பிடும்
உள்நோக்கம் அரசுக்கு இல்லை என்று ஃபெடரல் கோர்ட் கூறிவிட்டது. அமெரிக்க உயர்நீதிமன்றம் இதுபோன்ற வழக்குகளை பரிசீலனை செய்யவும் மறுத்துவிட்டதால்,
அவ்வார்த்தைகள் அப்படியே இன்றுவரை தொடர்கின்றன.
2
கேள்விக்கென்ன
பதில்?
தேனும், தயாரித்த
சர்க்கரைக்கும் வித்தியாசம் உண்டா?
உடலுக்குள் செல்லும்
சர்க்கரை அடிப்படையில் பெரிய வேறுபாடுகள் இல்லை. பழங்களிலுள்ள சர்க்கரையும்,
சாக்லெட்டிலுள்ள சர்க்கரையும் வேறுபாடு அதன் கலோரி விஷயங்களில்தான்.
காஃபி உடல் வளர்ச்சியை
பாதிக்குமா?
காஃபீன் லிமிட்
தாண்டும்போது உடலில் கால்சியம் உட்கிரகிக்கப்படுவது குறையும். காஃபீனோடு
பாலை ஒப்பிடும்போது, பாலின் பக்கவிளைவுகள் அதிகம்.
நாயும், பூனையும் நிறக்குருடானவையா?
நம் பார்வைத்திறனில் 1/7 திறன்
கொண்டவை இவை. பூனை மற்றும் நாய், பச்சை
மற்றும் நீலநிறத்தில் காட்சிகளை காணும். ஒளியை பிரதிபலிக்கும்
தன்மை இதன் கண்களில் உள்ளதால் குறைந்த ஒளியில் காட்சிகளை துலக்கமாக உள்வாங்கும்.
ரத்த வாசனையை சுறா
மீன்கள் ஒரு கி.மீ தூரத்திலேயே கண்டுபிடித்துவிடுமா?
மிகை கற்பனை. நீச்சல்
குளத்தின் சைசிலுள்ள நீரில் இரை மீன்களை உடனே கண்டறிந்து லபக்கும் திறமை சுறா மீன்களுக்கு
உண்டு. ஆனால் கடலில் வாசனை பிடித்து மீன்வேட்டையாடுவது மிகசிரமம்.
3
மார்ட்டின் லூதர்கிங்
ஜூனியர்!
- குடியுரிமை போராளியான மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர் பிறந்தது 1929 ஆம் ஆண்டு ஜனவரி 15. இவரது தந்தை மைக்கேல் கிங் வைத்த பெயர், மைக்கேல் கிங் ஜூனியர். பதினாறாம் நூற்றாண்டின் இறையியல் ஞானியான மார்ட்டின் லூதர் மேல் ஈர்க்கப்பட்ட மைக்கேல் கிங், தன் மகனுக்கு மார்ட்டின் லூதர் என பெயரிட்டார்.
- சிறுபான்மையினருக்கு குரல் கொடுத்து தன் வாழ்நாளில் முப்பது முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மார்ட்டின் லூதர்கிங் ஜூர்.
- இறையியலில் முனைவர் பட்டம் வென்ற மார்ட்டின் லூதர்கிங்குக்கு, செமினார் உரை வழங்குவதில்(1948-1951) கல்லூரி வழங்கியிருந்த தரம் - சி மற்றும் சி பிளஸ்.
- 1971 ஆம் ஆண்டு பதிமூன்றாவது கிராமி விருது விழாவில், மார்ட்டின் லூதர்கிங்கின் Why I Oppose the War in Vietnam என்ற ஆடியோ உரைக்கு கிராமி விருது அளிக்கப்பட்டது.
- மார்ட்டின் லூதர்கிங்குக்கு உருவான எதிரிகளில் முக்கியமானவர், FBI தலைவர் ஜே.எட்கர் ஹூவர். லூதரை பல ஆண்டுகள் நுணுக்கமாக கண்காணித்தவர், அவரை மறைமுகமாக தற்கொலை செய்ய நிர்பந்தித்தனர்.
தொகுப்பு: வின்சென்ட் ரிச்சர்ட்ஸ், பிரமோத் ரிஷி
நன்றி: முத்தாரம்