பாம்பின் மீது ரிவென்ஞ்ச்!


Image result for revenge snake sonelal




பாம்பின் மீது ரிவென்ஞ்ச்!

தந்தையைக் கொன்ற வில்லனை  கொன்று அவரின் மகளை மேரேஜ் செய்வது சினிமா ரிவென்ஞ்ச். ஆனால் உ.பியில் சோனேலால், தன்னைக் கடித்த பாம்பை என்ன செய்தார் தெரியுமா?


.பியின் சுக்லாபூரைச் சேர்ந்த சோனேலால், சரியான தண்ணி வண்டி. தன் பண்ணைக்கு போகும்போது பாம்பு ஒன்று தன்னை கடித்துவிட்டது என டென்ஷனாகி, 'என்னையா கடிக்கிறாய்?' என சொல்லி அதன் தலையை கடித்து மென்று துப்பிவிட்டார். பாம்பின் பல்லிலுள்ள விஷம் உடலுக்குள் டவுன்லோடு ஆக ஸ்பாட்டிலேயே மயங்கி விழுந்தார் சோனேலால். உடனே அவரின் ப்ரெண்ட்ஸ் அவரை ஹாஸ்பிடலில் சேர்க்க உயிர்பிழைத்திருக்கிறார். தன்னைக் கடிக்காத பாம்பின் தலையை யூடர்ன் போட்டு கடித்து துப்பியுள்ளார் என்பதை டாக்டர் கண்டுபிடித்துள்ளனர்

2

பெண்கள் ரயில்வே ஸ்டேஷன்! -ரோனி

பெண்களின் இட ஒதுக்கீட்டிற்கு டஜன் கணக்கில் தடை வந்தாலும், பெண்களுக்கான வாய்ப்பை தம் திறமையால் அவர்களே பெற்றுவருகிறார்கள் என்பதை ஜெய்ப்பூர் ரயில்வே ஸ்டேஷன் நிரூபித்துள்ளது.

ராஜஸ்தானின் தலைநகரமான ஜெய்ப்பூரிலுள்ள காந்திநகர் ரயில்வே ஸ்டேஷன் முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்பட்டு ஆச்சரியம் தருகிறது.  டிக்கெட் கலெக்டர் டூ ஸ்டேஷன் சூப்பரிடென்ட் வரை அனைத்து பதவிகளும் பெண்களுக்கு மட்டுமேதான். தினசரி இங்கு வரும் 75 ரயில்களில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர். ரயில்வே பாதுகாப்பு படையிலும் பதினொரு பெண் காவலர்களை தேர்வு செய்து நியமிக்க உள்ளனர். "எனது ஓராண்டு பணியில் ஸ்டேஷன் மாஸ்டராக என்னை நியமிப்பார்கள் என நினைக்கவேயில்லை. பணியிடத்தில் பாதுகாப்பு, வேகமான சேவை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்" என்கிறார் ஸ்டேஷன் மாஸ்டர் ஏஞ்சலா ஸ்டெல்லா.

3

 அவசர அமைச்சர்!

இந்திய பிரதமர் மோடியின் ஸ்வட்ச் பாரத் அபியான் திட்டத்தை வெற்றி வெற்றி என எக்காளமிட்டு சொன்னாலும் அவர்களின் கட்சிக்காரர்களே அதை ஃபாலோ செய்வதில்லை என்பதை சுவற்றில் மாடர்ன் ஆர்ட் வரைந்து சொல்லியிருக்கிறார் அமைச்சர் காளிசரண் சரஃப்.

ராஜஸ்தானைச் சேர்ந்த சுகாதார அமைச்சர் காளிசரண் சரஃப், அரசு கடமையாற்ற காரில் வேகமாக சென்றபோதுதான் நடந்தது அந்த விபரீதம். யெஸ். சடாரென சூச்சூ வந்துவிட்டது. என்ன செய்வார் கடமை தவறாத அக்கோமகன்? உடனே வண்டியை ஹோல்ட் ஆன் என அலறி நிறுத்தி ஜிப்பை பிரித்து சாலையோர சுவற்றிலேயே சிறுநீர் கழித்து பெருமூச்சுவிட்டார். அமைச்சரே ஏன் இப்படி செஞ்சீங்க? என்று பத்திரிகைகள் கேட்டதற்கு "இதெல்லாம் ஒரு விஷயமா?" பதில் சொல்லிவி எஸ்கேப்பானார் அமைச்சர். பொதுஇடத்தில் சிறுநீர் கழிப்பதற்கு ராஜஸ்தானின் கார்ப்பரேஷன் விதிக்கும் ஃபைன் ரூ. 200. எதிர்கட்சிகள் யூரின் அமைச்சரை பதவி விலகச்சொல்லி மல்லுக்கட்டி வருகின்றன

4

மனைவியைத் தேடி பயணம்!

பீகாரின் ஜார்க்கண்டைச் சேர்ந்த கூலித்தொழிலாளி 600 கி.மீ மேல் சைக்கிளில் பயணித்திருக்கிறார். விழிப்புணர்வுக்காகவா அல்லது கின்னஸ் சாதனைக்கா, இரண்டுமில்லை. தன் மனைவிக்காக.

பீகாரிலுள்ள பலிகோடா கிராமத்தைச் சேர்ந்த மனோகர் நாயக், பொங்கல் பண்டிகைக்காக தன் மனைவி அனிதாவை கம்ரசோல் கிராமத்திலுள்ள பெற்றோர் வீட்டுக்கு அனுப்பினார். இரண்டு நாளாகியும் மனைவி திரும்பி வராததால், சைக்கிளில் தினசரி 25 கி.மீ என 24 நாட்களில் 65 கிராமங்களைக் கடந்து மனநிலை பிரச்னையுள்ள மனைவியை காரக்பூரில் தேடிப்பிடித்துள்ளார். "துருப்பிடித்த சைக்கிளை எடுத்துக்கொண்டு தேடத்தொடங்கியதுதான் தெரியும். எவ்வளவு தூரம் என கணக்கு போடவில்லை" எனும் மனோகர், உள்ளூர் பத்திரிகையில் காணவில்லை விளம்பரமும் கொடுத்தார். அதைப்பார்த்தவர்கள், காரக்பூர் ஹோட்டல் அருகே அனிதா இருப்பதாக தகவல் கொடுத்தனர். காரக்பூர் மற்றும் முசாபனி போலீசாரின் முயற்சியில் மனோகர், அனிதாவை அழைத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

5
இரும்பு மனிதரின் சிலை ரெடி!

இந்தியாவின் இரும்பு மனிதர் என பெருமையுடன் அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலை குஜராத்தில் விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது.

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேலின் சிலை குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சர்தார் சரோவர் அணையிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிலை. பிரதமர் மோடியின் கனவு திட்டமான இச்சிலை 2013 ஆம் ஆண்டு அக்.31 அன்று வல்லபாயின் 138 ஆவது பிறந்தநாளன்று அடிக்கல் நாட்டப்பட்டு வேலை தொடங்கியது. மூவாயிரம் கோடி திட்டமான இதனை எல் அண்ட் டி நிறுவனம் ஏற்று செய்ய, சர்தார் சரோவர் நர்மதா நிகாம் லிட். மேற்பார்வை செய்ததுசுதந்திர இந்தியாவில் 562 இந்திய சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இந்தியாவை படேல் உருவாக்கியதற்கான கௌரவம் இது.


தொகுப்பு: காத்ரீனா வின்ஸ்டன், மெலிசா
நன்றி: குங்குமம்