காலையில் உடல்எடை குறைகிறதா?

Image result for weight




ஏன்?எதற்கு?எப்படி?-Mr.ரோனி

வானில் ஹீலியம் பலூன்கள் எவ்வளவு தூரம் பறக்கும்?


சுதந்திரதினம், குடியரசு தினம் வந்தால் இளைப்பு வாங்குமளவு பொடிசு முதல் தாவணி தேவதைகள் வரை வானில் பறக்கவிடப்படும் பாக்கியம் பெற்றவை ஹீலியம் பலூன்கள். பலூன்களின் பலமும், வெளிப்புறத்திலுள்ள காற்று ஏற்படுத்தும் அழுத்தம் என ஆர்க்கிமிடீஸ் விதிகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். சாதாரண பலூன்கள் பத்து கி.மீ வரை பறக்கும். தட்பவெப்பநிலைக்கான பலூன்கள் அதிகபட்சமாக 30 கி.மீ வானில் பறக்கும் சான்ஸ் உண்டு. விண்வெளி அறிவியல் மையத்தைச் சேர்ந்த டாக்டர் தகாமாசா யமாகாமி குழுவினர் தயாரித்த ஹீலியம் பலூன் அதிகபட்சமாக 53 கி.மீ தூரத்தை எட்டிப்பிடித்துள்ளது.

2

ஏன்?எதற்கு?எப்படி?-Mr.ரோனி

காலையில் எழுந்தவுடன் உடல் எடை ஏன் குறைவாக இருக்கிறது?

காரணம் நீங்கள் உயிரோடு இருப்பதுதான். இரவில் தூங்குவதற்கு முன்பு சாப்பிட்ட உணவிலுள்ள கார்பன்டை ஆக்சைடு மற்றும் நீர் ஆகியவை உடலில் மெல்ல பிரிந்துகொண்டிருக்கும் பணி, நடைபெற்றுக்கொண்டு இருப்பதால், உடல் எடைகிறதுதூங்கும்போது 2,100 லிட்டர் நீரை உள்ளிழுக்கிறோம். இதில் 84 லிட்டர் கார்பன்டை ஆக்சைடு, 27 கிராம் நீர் உள்ளது. மேலும் வியர்வை, எச்சில், தோல் செல்கள் இழப்பு ஆகியவையும் எடைகுறைவில் இணையும்.


ஏன்?எதற்கு?எப்படி? -Mr.ரோனி

புத்தகம் படிக்கும்போது ஏன் தூக்கம் வருகிறது?

புத்தகங்களை வாசிக்கும்போது நாம் கம்ஃபோர்ட்டான போஸில் பெருமாள்போல படுத்துக்கொண்டே அல்லது ஈஸி சேரில் ஹாயாக சாய்ந்துகொண்டே படிப்பது முக்கிய காரணம். மேலும் தினசரி ஆக்டிவான அத்தனை வேலைகளையும் லிஸ்ட் போட்டு முடித்துவிட்டுத்தான் புத்தகத்தை தொடுகிறோம். நூலின் அத்தியாய எண்ணை  பார்க்கும்போதே கண் சொருக காரணம் உடல் மற்றும் மூளையின் களைப்புதான். வாசிப்பை கைவிடாமல் தொடர்ந்தால் அடுத்தநாள் எக்சாம் பீதி, டாக்டரின் அப்பாயின்மென்ட் பரபரப்பு ஆகியவை மனதில் நுழையாமல் தடுக்கலாம். ஸோ அதிகம் வாசி லைஃப் ஈஸி!

தொகுப்பு: கா.சி.வின்சென்ட்
நன்றி: முத்தாரம்



பிரபலமான இடுகைகள்