அமேஸிங் கலவரங்கள்!


Image result for riot



திடீர் கலவரங்கள்

கலவரங்கள் நடக்க சின்ன தீப்பொறி போல சின்ன விஷயங்கள் நடந்தால் போதும். சடக்கென தீ பற்றிவிடும். இந்தியாவில் இதைச் செய்ய  வாட்ஸ்அப் மெசேஜ் அல்லது வீடியோ போதுமானது. உணர்ச்சிகரமான மனநிலை இந்தியாவுக்கும் மட்டும் சொந்தமா என்ன? உலகம் முழுக்க நடந்த கலவரங்கள் இது. 


போதை கலவரம்!
ஆஸ்திரேலியாவில் 2015 ஆம் ஆண்டு darts மேட்ச் நடந்தது. சினிமாவில் கொள்ளையிட முடிவு செய்த வில்லன் சிறிய அம்பை போர்டில் திரும்பி நின்று எறிய செஸ்போர்டு போன்ற அட்டையின் சென்டரில் குத்தி நிற்குமே அதேதான். டார்ட்ஸ் விளையாட்டில் இறுதிப்போட்டி. வான் கெர்வென், சைமன் இறுதிப்போட்டியில் மோதினர். நன்கு குடித்துவிட்டு வந்த ஆடியன்ஸ் போட்டி சுவாரசியத்தை இழந்ததால் சேர்களை தூக்கி பிரமிடு போல அமைக்கத்தொடங்க தகராறு வெடித்தது. பின் போலீஸ் அரங்குக்குள் நுழைந்து கன்ட்ரோல் செய்தனர்.

பலூன் கலவரம்!

1864 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் வானியலாளரான ஹென்றி காக்ஸ்வெல், பலூனில் சாகச நிகழ்ச்சி நடத்தினார். ஏறத்தாழ ஐம்பதாயிரம் பேர் கூடியுள்ள இடத்தில், ஹென்றி தனது ஸ்பெஷல் பலூனை நிகழ்வில் பயன்படுத்தவில்லை என வதந்தி கிளம்பியது. விரக்திக்குள்ளான பார்வையாளர்கள், பலூனிலிருந்து ஹென்றி இறங்கியதும், அதனை கிழித்தெறிந்ததோடு, மிச்ச பலூனோடு நகரில் பரேடும் வந்தனர்.   

பர்மிஷன் கலவரம்!

மனித உடலை வெட்டிச்சோதிப்பதற்கு எதிராக அமெரிக்காவில் ஒருகாலத்தில் போராட்டம் நடந்து வந்தது. 1907 ஆம் ஆண்டு உயிருள்ள விலங்குகளுக்கு ஆபரேஷன் செய்ய ஆதரவு தேடி இங்கிலாந்து நாட்டினர் போராட்டம் நடத்தினர். இதற்கு முன்னர், அனஸ்தீசியா கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என வதந்தி பரவ, திகைத்து எழுந்த காருண்ய கந்தசாமிகள் இணைந்து நாய் சிலை ஒன்றை லண்டன் பல்கலையில் அமைத்தனர். பின்னர் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் இதனை உடைக்க திரண்டு செய்த போராட்டத்தால் இச்சிலை அகற்றப்பட்டது.

டொரன்டோ கலவரம்!

1850 களில் கனடாவின் டொரன்டோ இருந்த திகுதிகு கலவர நிலைமை இன்றில்லை. 1855 ஆம் ஆண்டு ஜூலை பனிரெண்டாம் தேதி, அந்நகருக்கு வந்திருந்த S.B. Howe’s circus கலைஞர்களுக்கு வேலை அடுத்தநாள் என்பதால் போரடித்தது. நகரில் மது, மாதுக்களை தேடி அலைந்தனர். கிங் தெருவில் அங்கிருந்த தீயணைப்பு படைவீரர்களை சர்க்கஸ்காரர் கேலி செய்து கலாய்க்க, விவகாரம் பெட்ரோலில் வைத்த நெருப்பானது. ஊர்மக்கள் சர்க்கஸ் கூடாரத்தை தீவைத்து கொளுத்தினர். என்கொயரில் ஆக்ஷன் எடுக்காத போலீஸ் சீஃப் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்

தொகுப்பு: விக்டர் காமெஸி
நன்றி: முத்தாரம்


பிரபலமான இடுகைகள்