குவாத்தமாலாவில் மாயா!
தடுப்பூசிகள் தயாரிப்பு!
தடுப்பூசிகள் மருத்துவ
வரலாற்றில் சாதனை என்றே கூறலாம். போலியோ, அம்மை ஆகிய நோய்களை
ஒழித்ததில் தடுப்பூசியின் பங்கு அதிகம். விஞ்ஞானி எட்வர்டு ஜென்னர்,
பசுஅம்மைக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பில் மூழ்கியிருந்தார். அம்மை கிருமிகள் பிற நுண்ணுயிரிகளுடன் கலந்திருந்தன. செல் கல்ச்சர் முறையில் புரதம், அமினோ அமிலம்,
கார்போஹைட்ரேட் உள்ள குடுவையில்
வளர்க்கப்படுகிறது.
வைரஸின் வாழ்க்கை
சுழற்சி முடிவுற்றபின் வாழும் செல்லிலிருந்து பிரித்தெடுத்து பில்டர் செய்யப்படுகின்றன. இவை உடலுக்குள்
செலுத்தப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. 2000 ஆம்
ஆண்டில் போலியோ வைரஸ் செலுத்தப்பட்ட பலருக்கும் உடலில் பிரச்னை தந்ததால் உயிருடன் வைரஸ்களை
செலுத்தும் முறை அமெரிக்காவில் கைவிடப்பட்டது. அங்கு ஹெபடைடிஸ், ஃப்ளூ ஆகியவற்றுக்கு இறந்த வைரஸ் செல்களை(புரதம்,
நியூக்ளிக் அமிலம் நீக்கப்பட்டது) உடலில் தடுப்பூசியாக
செலுத்துகிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தியின் ஒரு பகுதியை மட்டுமே
எழுப்புகிறது. 1960 ஆம் ஆண்டில் வைரஸ்களை உயிரோடு கையாள்வது பெருமளவு
குறைந்துவிட்டது. தற்போது மருந்துகளை இயங்க வைக்க அலுமினிய உப்புகள்,
மோனோ சோடியம் குளூட்டமேட் திமெரோசால் உள்ளிட்ட சமநிலையாக்கிகள் பயன்படுகின்றன.
2
குவாத்தமாலாவில்
மாயா!
குவாத்தமாலாவில்
செய்த ஆய்வில் அறுபதாயிரம் புதிய மாயா கட்டுமானங்களை(பிரமிடு,கடல்பாலங்கள்,வீடுகள்,தற்காப்பு
அமைப்புகள்) தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்."பரந்த நிலப்பரப்பில் வாழ்ந்த மாய நாகரிக மக்கள் ஒற்றுமையாக காடுகளை அழிக்காமல்
வாழ்ந்துள்ளனர்" என்கிறார் லிசா லூசரோ மற்றும் டாம் காரிசன்
ஆகிய ஆராய்ச்சியாளர்கள்.
லிடார் எனும் தொழில்நுட்பம்
பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனை செலுத்தி அது பொருளில் பட்டு திரும்பிவருவதை வைத்து பொருளின் உருவத்தை
3டியில் காணலாம். லிடார் மூலம் பாலம், சாலை, வீடுகளைக் கண்டுபிடித்தபின் ஒன்பது மீட்டர் நீளமுள்ள
சுவரை எதேச்சையாக கண்டுபிடித்தனர். 1985 ஆம் ஆண்டு லிடார் தொழில்நுட்பம்
கோஸ்டாரிகாவில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் 2009 ஆம்ஆண்டு பெலிஸ் என்ற இடத்தின் ஆராய்ச்சிப்பணி வரை லிடார் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை.
"21 ஆம் நூற்றாண்டின் புரட்சிகரமான லிடார் தொழில்நுட்பம் மூலம்
மாயன்களின் வரலாறு குறித்து தெளிவான பார்வையை பெறமுடியும்" என்கிறார் கொலராடோ பௌல்டர் பல்கலையின் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான பேசன் ஷீட்ஸ்.
3
ஆர்கானிக் நம்பிக்கைகள்!
ஆர்கானிக் உணவில்
உரங்கள் கிடையாது!
அமெரிக்க விவசாயத்துறை(USDA), இயற்கை ஆதாரங்களை காப்பாற்றும், பல்லுயிர்த்தன்மையை பாதுகாக்கும்
குறிப்பிட்ட சாரம் கொண்ட உணவுப்பொருட்களுக்கு ஆர்கானிக் அந்தஸ்து வழங்குகிறது.
இதில் மரபீனி(GM) விஷயங்கள் இருக்காது.
உணவுப்பொருட்களைஅறுவடை செய்வதற்கு மூன்று ஆண்டுகள் முன்புவரை உரங்கள்,
வேதிப்பொருட்கள் பயன்படுத்தவில்லை என்பதே ஆர்கானிக் என்பதன் அர்த்தம்.
2011 ஆய்வுப்படி 571 மாதிரிகளில் 39% உரப்பயன்பாடு கொண்ட உணவுப்பொருட்கள் இருந்ததை ஆர்கானிக் என
USDA,EPA அனுமதித்தன.
மரபீனி உணவுகள்
ஆபத்தானவை!
"மரபீனி
உணவுகள் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தின என்று எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பங்களுக்கான விதிகளை கவனமாக உருவாக்குவதில்தான் இப்பயிர்களின்
வெற்றி உள்ளது" என்கிறார் CSPI மைய
உயிரிதொழில்நுட்ப இயக்குநர் கிரிகோரி ஜாஃபே. 2014 ஆய்வுப்படி
மரபீனி சோளம், பிற வகைகளை விட 22 சதவிகிதம்
அதிக மகசூல் தந்திருந்தது. பிற இயற்கை சோள வகைகளை விட குறைவான
நீர் இதற்கு தேவைப்பட்டது. எனவே மரபீனி பயிர்கள் சூழலுக்கு எதிரானவை
அல்ல.
தொகுப்பு: விக்டர் காமெஸி
நன்றி: முத்தாரம்