அமேஸிங் அறிவியல்!

Image result for mythical beasts



சீக்ரெட் சூமா!

அண்மையில் ஸ்பேஸ்எக்ஸ் சீக்ரெட்டாக விண்ணுக்கு அனுப்பிய சூமா ராக்கெட் ஹிட் என்று கம்பெனியும், படுதோல்வி என ப்ளூம்பெர்க் மற்றும் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என இரு செய்தி நிறுவனங்களும் தகவல் கூற, சயின்ஸ் வட்டாரங்களில் சர்ச்சை றெக்கை கட்டிப்பறந்தது.

ஸ்பேஸ்எக்ஸ் அதன் இணையதளத்திலும் சூமா விண்ணுக்கு செல்வதை குறிப்பிட்ட பகுதிக்கு மேல் ஒளிபரப்பு செய்யாதது பலருக்கும் புருவத்தை உயரவைத்துள்ளது. ஆனால் இச்செயல்பாடு அந்நிறுவனத்துக்கு புதிதான ஒன்றல்ல. "ஃபால்கன் 9 ராக்கெட் சரியானபடி இலக்கை அடைந்துள்ளது" என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன திட்ட இயக்குநர் க்வைன் ஷாட்வெல்."சீக்ரெட் திட்டங்களில் வட்டப்பாதை பற்றிய தகவல்களை தெரிவிக்காவிட்டாலும், கேட்லாக்கில் அதனை குறித்து வைப்பார்கள்" என தகவல் தருகிறார் ஹார்வர்டு பல்கலையைச் சேர்ந்த ஜொனாதன் மெக்டௌல். உண்மையை அனுப்பிய ஸ்பேக்ஸ்எக்ஸ் சொன்னால்தான் சர்ச்சைகள் தீரும் என்பதே நிஜம்.   

நிஜம் எது?

வயதான நாய்களுக்கு புதிய விஷயங்களை கற்றுத்தர முடியாது.

நிஜம்: டெய்லி பதினைந்து நிமிடங்கள் என இரண்டு வாரங்கள் செலவிட்டால் போதும். நாய் உட்பட மனிதர்களும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். வயதாகும்போது மனம் சொன்னாலும் உடல் வளையாது என்ற அர்த்தத்தில் மேற்சொன்னபடி கூறியிருக்கலாம்.

 வௌவால்களுக்கு பார்வை கிடையாது.

நிஜம்: யூகமான கருத்து இது. ஒலி, வாசனை,மீயொலி ஆகிய இரு விஷயங்களை அதிகம் பயன்படுத்தியே பயணிக்கும் வௌவாலுக்கு கண்களில் பார்வைத்திறன் உண்டு.

அணில் குடும்பத்தைச் சேர்ந்த groundhog வசந்தகாலத்தை முன்னரே அறிந்துகொள்ளும்.

நிஜம்: 1758 ஆம் ஆண்டு கார்ல் லினாயஸ் என்பவரால் அடையாளமறியப்பட்ட விலங்குவளையில் தன் எடையில் ஒருபகுதி உணவு உண்டு தூங்கும் இந்த உயிரினம், சூரிய வெளிச்சம், வெப்பநிலை ஆகியவற்றை அடையாளம் கண்டு வசந்தகாலத்தை வரவேற்க முன்னரே ரெடியாகிவிடுவது உண்மைதான். கனடா,அமெரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படும் விலங்கு இது. நீளம் 65 செ.மீ எடை 4 கி.கி. 

 3
மர்ம கல்லின் கதை!

1996 ஆம் ஆண்டு வானியல் ஆய்வாளர்கள், சகாரா பாலைவனத்தில் மஞ்சள் நிற கல் ஒன்றை கண்டறிந்தனர். ஹைபாடியா என பெயரிடப்பட்ட இக்கல், விண்வெளியிலிருந்து வந்திருக்கலாம் என யூகங்கள் கூறப்பட்டன. ஆனால், முன்பு கிடைத்த  விண்கற்களோடு இதற்கு எந்த ஒற்றுமையும் இதற்கு கிடையாது. ஜோகன்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனை ஆராய்ந்து சூரியகுடும்பத்திலுள்ள பொருட்களை கொண்டதாக இக்கல் அமையவில்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

"சூரிய மண்டலத்திலிருந்து கிடைத்தால் இதில் கார்பன் மற்றும் சிலிகா ஆகியவை ஹைபாடியாவில் காணப்படவேண்டும். ஆனால் இக்கல்லில் அவற்றின் அளவு மிக குறைவு. -196 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த சூழலில் உருவாக்கப்பட்ட இதில் Polyaromatic hydrocarbons (PAH) கார்பன் சேர்மம் அதிகம்" என்கிறார் ஆராய்ச்சியாளர் ஜான் கிராமர்ஸ். தற்போது ஹைபாடியா கார்பன் பொருட்கள் நிறைந்த பொருளாக மாற்றப்பட்டது எப்படி ஆராய்ச்சி நடந்து வருகிறது.


   4
கற்பனை மிருகங்கள்!

Centaur

கிரீசில் வாழ்ந்ததாக நம்பப்படும் சென்டார், மனிதனும் குதிரையும் இரண்டறக் கலந்த வடிவத்தில் இருக்கும். விலங்குகள் மற்றும் மனிதர்கள் என இரண்டு உலகிலும் சஞ்சாரம் செய்யும் நம் சகோதர உறவு. முரட்டுத்தனம் கொண்டவர் என்றாலும் சிரோன் போன்ற இன்டலெக்சுவல்களும் இந்த இனத்தில் உண்டு.

Mermaid

பாதி பெண், பாதி மீன் என கடலில் வாழும் கடல்கன்னி. கிளாமர் பாடல்களை பாடி பாலியல் ஆசையைத் தூண்டி மனிதர்களை கொல்லும் நச்சுக்கன்னி. 3 ஆயிரம் ஆண்டுகளாக கதைகளில் உலாவி வாசிப்பவர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டும் ஐட்டம் கேர்ள்.

Leviathan

மீன், முதலை இரண்டின் வடிவிலுள்ள கடல் மிருகம். கப்பல்களை முட்டிமோதி தள்ளி மனிதர்களை மீல்ஸாக்கிக் கொள்வது லெவியாதனின் ஸ்பெஷல். இதனை உருவாக்கிய பிரம்மா கடவுளா, சாத்தானா என்று இன்றும் சர்ச்சை முடியவில்லை.

 Pegasus
கடல் கடவுள் பொசெய்டன், மெடுசா ஆகியோருக்கு பிறந்ததுதான் பொன்னிற இறக்கைகளைக் கொண்ட குதிரை, பெகாசஸ். கிரீக்கில் பெகாசஸ் இல்லாத சிற்பங்களும், ஓவியங்களும் மிக குறைவு.

5

ஈரான் போராட்டம் எதற்கு?

டிச. 28 அன்று ஈரானில் தொடங்கிய போராட்டம் 80 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு பரவியுள்ளது. இப்போராட்டத்தில் போலீசுக்கும், மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 22 பேர் பலியாகியும், ஆயிரம் பேர் கைதாகியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 முன்பு 2009 ஆம் ஆண்டு உருவான மக்கள் போராட்டம் மீண்டும் நடைபெற என்ன காரணம்? ஏற்றத்தாழ்வு, ஊழல், வேலைவாய்ப்பின்மை ஆகியவைதான். 2016 ஆம் ஆண்டு இரான் மேற்கு நாடுகளுடன் செய்த அணு ஒப்பந்தப்படி, எண்ணெய்துறை வளர்ச்சியடைய பொருளாதாரம் 13.4 சதவிகிதம் உயர்ந்தது. ஆனால் பிற துறைகளின் வளர்ச்சி 3.3 சதவிகிதம்தான் என்றாலும் பொருளாதாரம் மீண்டு வருகிற நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது. கட்டுமானத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சரிவிலிருந்து மீளாதது அதிபருக்கு தலைவலியை தந்துள்ளது. எப்படி? வேலைவாய்ப்பின்மை அளவு தோராயமாக 12 சதவிகிதம். சிரியா, ஈராக், லெபனான் ஆகிய நாடுகளுக்கு ஆண்டுதோறும் அளிக்கும் மானிய உதவிகள் மக்களுக்கு கோபத்தை கிளறிவிட்டன. வருமான வாய்ப்பிழந்த அனைவரும் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக போரடத்தொடங்கினர். ஆனால் உண்மையில்  சுப்ரீம் தலைவர் அலி காமனெய்யை விட குறைந்த அதிகாரங்கள் கொண்டவரே ஈரான் அதிபர் ருஹானி. இப்போராட்டம் வயிற்றுக்கானது, அதிகாரத்திற்கானது அல்ல.


 Pegasus
கடல் கடவுள் பொசெய்டன், மெடுசா ஆகியோருக்கு பிறந்ததுதான் பொன்னிற இறக்கைகளைக் கொண்ட குதிரை, பெகாசஸ். கிரீக்கில் பெகாசஸ் இல்லாத சிற்பங்களும், ஓவியங்களும் மிக குறைவு.

தொகுப்பு: கா.சி.வின்சென்ட், லீதோவிதா

நன்றி: முத்தாரம்