உதடுகள் சிவப்பாக இருப்பது ஏன்?
ஏன்?எதற்கு?எப்படி? Mr.ரோனி
உதடுகள் சிவப்பாக
இருப்பது ஏன்?
பெண்களின் சுளையான
உதடுகளைப் பார்த்தவுடனே ஆண்களின் உடலில் ஏறும் குபீர் கிளுகிளுப்பை 1960 ஆண்டு
உயிரியலாளர் டெஸ்மாண்ட் மோரிஸ் நம்பினார். பிறப்பிறுப்பில் தோன்றும்
ரத்த ஓட்டம்தான் உதட்டைச் சிவப்பாக்குகிறது என அடித்து பேசினார். பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களின் உதடும் கூட சிவப்புதானே! உள்ளிருந்து மலருவதால் மெலியதாக சிவப்பாகவும் உள்ளது என 2012 என கென்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி சொல்கிறது. உதடுகள்
சிவப்போ கருப்போ வாய் மூடி இருந்தாலும் பொருட்களை சுவைக்க, உறிஞ்ச
என உதவுகிறது. முக்கியமாக பச்சக் என இச் வைக்க, வளவளவென பேச என எக்கச்சக்க பிரயோஜனம் உண்டு பாஸ்!
2
உயிர்க்கொல்லி
மீன்!
ஜப்பானின் கமகோரி
நகரமெங்கும் ஸ்பீக்கர்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எதுபற்றி?
அங்காடிகளில் விற்கப்படும் பஃபர்மீன் பற்றித்தான். கவனமாக சாப்பிடாவிட்டால் உயிர்கொல்லும் எமனாகும் மீன் இது.
உணவு பாக்கெட்டில்
மீனின் கல்லீரலை அகற்றாமல் விற்றுவிட்டனர். அதில்தான் நரம்புகளை பாதிக்கும்
டெட்ரோடோடாக்சின் நிறைந்திருந்தது. இது ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுவதுதான்.
ரூல்கள் கடுமையாக விதிக்கப்பட்டும் நிலை மாறாததன் பிரச்னை இது.
தற்போது இதன் தன்மை அறியாத மீனவர்களின் வலையில் சிக்கி பாதிப்பை இன்டர்நேஷனல்
லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது பஃபர்பிஷ்.
இரண்டு மில்லி
கிராம் டெட்ரோடோடாக்சின் மனிதரைக் கொல்ல போதும். நரம்புகளை தாக்கி ரத்தத்திலுள்ள
சோடியத்தை உறைய வைத்து, மூச்சுத்திணறலை உருவாக்கும். பின் இதயத்துடிப்பு நின்று மரணம் நேரும்.இந்த நச்சை பஃபர்பிஷ்
உடலில் பாக்டீரியா உருவாக்குகிறது. இங்கிலாந்தின் தென்பகுதி கடலிலுள்ள
மீன்களிலும் டெட்ரோடோடாக்சின் நச்சு காணப்படுகிறது. மருத்துவத்தில்
இது புற்றுநோய் வலிநிவாரணியாகவும் பயன்படுகிறது.
3
மூளை சிப்!
அமெரிக்காவின்
மசாசூசெட்ஸைச் சேர்ந்த ஆராயச்சியாளர்கள் மூளை போன்ற நரம்புகள் இணைப்பு கொண்ட சிப் ஒன்றை
உருவாக்கியுள்ளனர்.
மூளையில் 80 மில்லியன் நியூரான்களை நூறு ட்ரில்லியனுக்கும்
அதிக ஸினாப்ஸ் எனும் ஜங்க்ஷன் அமைப்பு இணைத்து
உடலின் சிக்னல்களை கடத்துகின்றன. இதே ஐடியாவில்தான் கம்ப்யூட்டர்கள்
வேலை செய்கின்றன.
"சூப்பர்
கம்ப்யூட்டர்களுக்கு மாற்றாக விரல்நக அளவில் சிப்களை உருவாக்குவதே லட்சியம்"
என்கிறார் ஆராய்ச்சியாளர் ஜீவான் கிம். தற்போது
எம்ஐடி உருவாக்கியுள்ள மூளை அமைப்பு, சிலிகா, ஜெர்மானியம் இணைந்து சினாப்ஸ் என்ற ஜங்க்ஷன் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மின்சார வழியாக செயல்பாட்டுக்கு வரும் அயனிகள் நியூரான்களுக்கிடையே பயணிக்கின்றன.
இது கையெழுத்து மாதிரிகளை 95% துல்லியமாக கண்டறிகின்றன.
"இந்த அமைப்பில் மின்சாரத்தை செலுத்தினால் நினைவுகளை எழுதவும் அழிக்கவும்
முடியும்" என்கிறார் கிம்.
4
நீரின்றி மனிதன்!
வெப்பமயமாதலால்
ஆறு,குளம்,குட்டை,கால்வாய் என அனைத்து
நீர்ப்பரப்பும் மெல்ல சுருங்கி வரும் நிலையில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
மனிதர்கள் இச்சூழ்நிலையில் எத்தனை நாட்கள் நீரின்றி தாக்குபிடிக்க முடியும்?
நீரின்றி ஏழு நாட்கள்
தாக்குபிடிக்கலாம் என்பதே பெரும்பாலான ஆராய்ச்சியாளர்களின் பதில். துல்லிய
தரவுகள் இதில் கிடைக்கவில்லை. ஒருவர் உயிர்பிழைப்பு அவரின் ஆரோக்கிய
உடலமைப்பு, தட்பவெப்பநிலை ஆகியவையும் இதில் முக்கிய அம்சங்கள்
என்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த மாயோ கிளினிக் ஆராய்ச்சி அமைப்பு. "மிக வெப்பமான சூழலில் ஒருவரின் உடல் 1.5 லிட்டர் நீரை
வியர்வையாக வெளியேற்றுகிறது" என்கிறார் ஜார்ஜ் வாஷிங்டன்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாவரவியலாளர் ராண்டல் பேக்கர்.
சிறுவன்,
சூடான கார் அல்லது தடகளப்பயிற்சியில் இருந்தால் வெப்பமான சூழ்நிலையில்
நீரிழப்பு ஏற்பட்டு மரணம் சில மணி நேரத்தில் நிகழக்கூடும். காய்ச்சல்
நோயாளிகளுக்கு உடலின் உள்ளுறுப்புகள் மற்றும் வெளிப்புற வெப்பம் காரணமாக, டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர் குடிக்க தோன்றாமல் பாதிப்பு
ஏற்பட்டு மரணத்தை நெருங்குவார்கள் என்கிறார் பேனர் தண்டர்பேர்ட் மருத்துவ மையத்தின்
சிகிச்சை மருத்துவரான கர்ட் டிக்ஸன். தன் உடல்எடையில்
10 சதவிகிதத்திற்கு அதிகமாக நீரிழப்பு ஏற்பட்டால் அபாயம் என வரையறுக்கிறது
இங்கிலாந்தின் தேசிய ஆரோக்கிய சேவை அமைப்பு(2009). ஒருமணி நேரத்திற்கு
1.5 லிட்டர் என்பது தோராய கணக்கு.
தொகுப்பு: கா.சி.வின்சென்ட்
நன்றி: முத்தாரம்