நேர்காணல்: "இன்பத்தை உணர வலிகள் அவசியம்"


Image result for pain





முத்தாரம் நேர்காணல்!

"இன்பத்தை உணர வலிகள் அவசியம்"

பிராக் பாஸ்டியன், உளவியலாளர்.

பரபரவேலையில் சுருக்கென நெற்றிப்பொட்டில் குத்தும்வலி. அதனை ஆரத்தி எடுத்து வரவேற்போமா? உடனே அமிர்தாஞ்சனை தடவி அதனை தீர்க்க நினைப்போம். ஆனால் வலி என்பது மகிழ்ச்சியின் திறவுகோல். நிறைவான வாழ்க்கை வலிதான் உதவும் என்கிறார் உளவியலாளர் பிராக் பாஸ்டியன்.

நம் வாழ்க்கைக்கு வலி தேவை என்பதுதான் உங்கள் புத்தகத்தின் ஐடியாவா?

மகிழ்ச்சி என்பதை மேற்கத்திய கலாசாரத்தில் வாழ்க்கையின் லட்சியமாக கருதுகிறார்கள். ஆனால் முடிவில்லாத மகிழ்ச்சி என்பது கிடையாது. எதிர்மறையான விஷயங்கள் மகிழ்ச்சியை அனுபவிக்க அவசியம். தன்னளவில் ஒவ்வொருவரும் எதிர்மறையான விஷயங்களை ஏற்க பழகவேண்டும்.

பெரும்பாலும் வலிகளிலிருந்து நம்மை மீட்கவே விரும்புகிறோம். உண்மையில் அதனை அழிக்கநினைப்பதின் பிரச்னைகள் என்ன?

வலியிலிருந்து விடுதலை பெற வலிநிவாரணிகளை டஜன் கணக்கில் பயன்படுத்துகிறோம். காரணம், சுகநிலையின் சிதைவை நாம் உளப்பூர்வமாக விரும்புவதில்லை. வலிநிவாரணிகள், எதிர்மறை விஷயங்களை மட்டுமான நேர்மறை அனுபவங்களையும் இழந்துவருகிறோம். மருந்துகள் வேண்டாம் என்பது என் வாதமல்ல, அதனை சிறிதளவேனும் ஏற்கபழகுவது அவசியம். மகிழ்ச்சியை தேடும் சமூக அழுத்தம் பின்னாளில் மனநிலை பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என மெல்போர்ன் பல்கலைக்கழக ஆய்வு முடிவு கூறுகிறது.

வலியின் பயன் என்ன?

புற உடல்ரீதியாக நெருப்பு சுடும் என்பது கை சுட்டுக்கொண்டபின் அறிந்துகொள்வது. உளவியல்ரீதியாக சமூக தொடர்புகளை ஏற்படுத்துகிறது. ஒருவரின் வலியை துடைக்க பிறர் முன்வருகிறார்கள். 2011 ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் வெள்ளம் ஏற்பட்டபோது, அதனை சரிசெய்ய 55 ஆயிரம் பேர் திரண்டு வந்து சுத்தம் செய்தனர். வலி என்பது வாழ்க்கைக்கான நெகிழ்வுத்திறனை கற்றுதருகிறது.  


வலி பற்றிய ஐடியாக்களை எப்படி தினசரி வாழ்க்கைக்கு பயன்படுத்துவீர்கள்?

வாழ்க்கையில் எதிர்மறையான விஷயங்களை நாம் அங்கீகரித்து ஏற்பது முக்கியம். வெற்றிக்காக நடத்தும் மாரத்தான் ஓட்டங்கள் நமக்கு விரக்தியையே தரும். அபாயங்களுக்கும் ஆபத்துகளுக்கும் துணிந்து எடுக்கும் துணிச்சலான முடிவுகள்தான் மகிழ்ச்சியை அனுபவிக்க கற்றுத்தரும். உண்மையான வாழ்க்கை என்பது இப்படித்தான் இருக்கமுடியும்.


நன்றி:James Lloyd,sciencefocus.com/
நன்றி: முத்தாரம்
தொகுப்பு: கா.சி.வின்சென்ட், விக்டர் காமெஸி