ரசகுல்லாவுக்கு மரியாதை! -ரோனி




Related image



கோடிரூபாய் காவலன்!

ஜெய்ப்பூரில் பதிமூன்று கொள்ளையர்களோடு போராடி வங்கியின் 925 கோடி ரூபாய் பணத்தை தனியாளாக வீரதீர விவேக புத்தியால் காப்பாற்றியிருக்கிறார் இளம் கான்ஸ்டபிள் சீதாராம்.

ஜெய்ப்பூரிலுள்ள வங்கிக்கு அதிகாலை 2.30க்கு துப்பாக்கி சகிதமாக தடதடவென நுழைந்த பதிமூன்று கொள்ளையர்கள் செக்யூரிட்டியை மிரட்டி கதவைத் திறந்துவிட்டனர். வங்கியின் உள்ளே பாதுகாப்பிலிருந்த கான்ஸ்டபிள் சீதாராம் கொள்ளையர்களை தடுக்க முயற்சித்தார். "கொள்ளை கேங் ஷட்டரை திறக்க முயற்சித்தபோது, துப்பாக்கியால் சுட்ட சீதாராம் உடனே அலாரத்தை ஒலிக்கவிட்டதால் போலீஸ் வங்கியை உடனே சுற்றி வளைத்துவிட்டனர்" என்கிறார் ஏசிபி பிரஃபுல் குமார். மின்னலாக தப்பி ஓடிய கொள்ளையர்களை சிசிடிவி வீடியோ மூலம் போலீஸ் தேடிவருகிறது. மாநிலத்தின் பல்வேறு கிளைகளுக்கு பணம் அனுப்பும் வங்கியின் மத்தியக்கிளை அலுவலகம் இது. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைமைச்செயலகம் கொள்ளை அட்டெம்ப்ட் நடந்த ஸ்பாட்டிலிருந்து மூன்று கி.மீ என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசகுல்லாவுக்கு மரியாதை!

மேற்கு வங்காளத்தின் ஸ்பெஷல் அடையாளம், ரசகுல்லா. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதனை கண்டுபிடித்தவருக்கு இந்திய தபால்துறை பெருமை சேர்த்திருக்கிறது. எப்படி?

நூற்றைம்பதாவது தினத்தைக் கொண்டாடும் ரசகுல்லா இனிப்பை உருவாக்கியவரான நோபின் சந்திர தாஸூக்கு சிறப்பு ஸ்பெஷல் கவரை  தபால்துறை வெளியிடவிருக்கிறது. கடந்தாண்டே ரசகுல்லாவுக்கான புவிசார்குறியீட்டை மேற்கு வங்காள அரசு பெற்றுவிட்டது. "மக்களை மகிழ்விக்கும் இனிப்பை கண்டுபிடித்தவருக்கு சிறப்பு கவரை தபால்துறை வழங்குவது எங்கள் குடும்பத்திற்கு பெருமை" என்கிறார் கே.சி.தாஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த திமான் தாஸ். முதலில் ஸ்பெஷல் ஸ்டாம்பை வெளியிடுவதுதான் அஞ்சல்துறையில் பிளான். ஆனால் 2020 இல் நோபினின் 175 பிறந்த தினத்தில் அதனை வெளியிட அவரின் குடும்பம் கோரியதால்  இப்போது கவர் மட்டும் ரிலீஸ் செய்யப்போகிறார்கள்.

3
கல்யாணமும் நியூஸ்தான்!

வேலையை படு சீரியஸாக எடுத்துக்கொள்ளும் சிகாமணிகள் ஆல் ஓவர் லோகத்திலும் உண்டு என்பதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சின்சியர் நிருபரே சூப்பர் உதாரணம்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஹனான் புகாரி, சிட்டி 41 என்ற சேனலின் நிருபராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு சடக்கென வரன் அமைந்து திருமணம் ஏற்பாடாக, மனுஷன் யோசிக்கவேயில்லை. உடனே கேமராவைத் திருப்பி மைக்கை கையில் வாங்கி தன் கல்யாணத்தை தானே விஸூவல் ஸ்டோரியாக டெலிகாஸ்ட் செய்து உலகையே மெர்சலாக்கி விட்டார். கல்யாண ட்ரெஸ்ஸில் தன் உறவினர்கள், காதல் மனைவி, பெற்றோர் என அத்தனை பேரிடமும் 'ஹவ் டூ யூ ஃபீல்?' என பேட்டி கண்டு வெளியிட்ட செய்திதான் இணையத்தில் சென்சேஷனல் ஹிட். இப்படியொரு சின்சியர் மனிதனா என வீடியோ பார்த்துவிட்டு உலகமே பேஸ்தடித்துக் கிடக்கிறது.  

காதல் தீவிரவாதி!


ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்தவர் இணையத்தின் வழியே உலாவியபோது பெல்ஜியத்தைச் சேர்ந்த இருபது வயது பெண்ணோடு சாட்டிங்கில் ப்ரெண்டானார். சாட்டிங் மெல்ல லவ்வாக மாற, காதல் பஸ், கல்யாண டிப்போவில்தானே செட்டிலாகும்?

 ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த காதலர் கல்யாணத்திற்கு சிக்னல் காண்பிக்க, பெண்ணோ அப்பா இறந்துவிட்ட நிலையில், நான் உடல்நிலை சரியில்லாமல் தவிக்கிறேன்" என்று கூறினார். உடனே இணையக்காதலர் கையிலிருந்து 500 யூரோவுக்காக செக்புக்கை கிழித்து மொத்தம் எட்டு செக்குகளை அடுக்கடுக்காக எழுதி பேங்குகளுக்கு அனுப்பினார். பின் அடுத்த நாளும் நிறைய செக்குகளோடு பேங்கில் நுழைய போலீஸ் மூலம் உடனே அரஸ்ட்டானார். ஏன்? அத்தனை செக்குகளும் பௌன்ஸ் ஆனால் சும்மா விடுவார்களா? விஷயம் ஹெல்சிங்போர்க் மாவட்ட கோர்ட் படியேற, "காதலியை பார்க்கவே இவர் இப்படி குறுக்குவழியே தேர்ந்தெடுத்திருக்கிறார்" என்று அவரை எச்சரித்த கோர்ட் விடுதலை செய்துவிட்டது. லவ் டெரரிஸ்ட் வாழ்க!

டூப் புலியோடு போலீஸ்!

துப்பு துலக்குவதில் உலக மகா கில்லி என புகழ்பெற்ற ஸ்காட்லாந்து போலீசுக்கே தண்ணி காட்டிவிட்டது ஒரு புலி. மேட்டரின் க்ளைமேக்ஸ் பரிதாபம்தான் நெட்டின் காமெடி வைரல்.

ஸ்காட்லாந்திலுள்ள வடக்கு கிழக்கு பிரிவு போலீசுக்கு எமர்ஜென்சி அழைப்பு வந்தது. ப்ரூஸ் க்ரப் என்ற விவசாயி, தன் பண்ணையில் புலி புகுந்துவிட்டது என பயத்தில் அலற, மின்னல் வேகத்தில் ஸபாட்டுக்கு வந்த போலீஸ் 45 நிமிஷங்கள் புலியை பிடிக்க ஸ்கெட்ச் போட்டனர். அருகிலுள்ள வனவிலங்கு பூங்காவில ்புலி ஏதும் தப்பித்ததா என நடந்த என்கொயரியில் பரபரப்பு களைகட்டியது. புலி சற்றும் அசையாமல் இருந்தது போலீசுக்கு டவுட்டாக, ரிவால்வர் சகிதம் சுற்றிவளைத்து ஹேண்ட்ஸ் அப் சொன்ன போதுதான் அது பொம்மைபுலி என்று தெரியவந்து விரக்தியானார்கள். "பொம்மையை நிஜபுலி என விவசாயி கருதியதால் நேர்ந்த குழப்பம் இது" என இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் கார்டினர் பேட்டி தட்டி சமாளித்தது தூள். அடங்காத புலி ஆக்ரோஷ புலி!

தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்