கலக்கும் டப்பாவாலா!
டப்பாவாலாக்களின்
மனிதநேயம்!
மும்பையில் டைமிங்
தவறாது ஆபீஸர்களுக்கு லன்ச் சோறு போடும் டப்பாவாலாக்களின் பெருமை பிசினஸ் பள்ளிகள்
வரை பரபரக்கிறது.
இங்கு நாம் பேசப்போவது அவர்களின் மனிதநேயம் பற்றித்தான்.
மும்பை டப்பாவாலாக்களின்
சங்கம்(MDA)
கடந்த 2015 ஆண்டிலிருந்து வீடற்றவர்களுக்கு உணவுகளை
பல்வேறு ஓட்டல்களிலிருந்து பெற்றுத்தந்து வருகிறது. தோராயமாக
இதன் மதிப்பு 40 லட்சம். "நகரங்களில்
உணவை வீணாக்கும் வசதியானவர்கள் ஒருபுறம், மறுபுறம் ஒருவேளை உணவுகூட
கிடைக்காத ஏழைகள் என உள்ளனர். உணவு சேவையை வழங்கும் நாங்கள் இதற்காகவே
ரொட்டி வங்கியை தொடங்கினோம்" என்கிறார் எம்டிஏவைச் சேர்ந்த
சுபாஷ் தாலேகர். உணவுகளை சேகரித்து தினசரி 400 வீடற்ற ஏழைகளுக்கு வழங்குகிறார்கள். இதற்கு எடுத்துக்கொள்ளும்
நேரம் 4 மணிநேரம் மட்டுமே.
2
ஐஸில் சிக்கிய
சீனர்!
சவாலே சமாளி என
பித்துக்குளித்தனமாக முதலில் டாஸ்க்கில் இறங்குபவர்கள் பின்னர் தாக்குப்பிடிக்க முடியாமல்
ஹெல்ப் கேட்டு கதறுவது வாடிக்கைதானே.
அச்சு அசல் இதே
லட்சியத்தில்தான் சீனா மனிதரும் உறுதியாக இருந்தார். உறைந்து போன ஏரியில் ஐஸ்
நீச்சல் போடலாம் என்றுதான். கூட இருந்த உயிர்காக்கும் நண்பர்கள் இந்த சாகச செயலை நெகிழ்ச்சி பொங்க லைவாக
படம்பிடித்தனர். வேகமாக உறைந்த ஏரி நீரில் குதித்த சீனர், வெளியே வருவதற்கான துளையில் வருவார் என வெயிட் பண்ணியே நண்பர்கள் சோர்ந்து
போனார்கள். பிறகு ஆகா கொலைப்பழி நம்மேலதானடா விழும் என அலர்ட்
ஆகி சுத்தியல் மூலம் பனிக்கட்டியை உடைத்து, சோலி முடியும் கட்டத்திலிருந்த
நண்பனை அரவணைத்து மீட்ட ஆசம் வீடியோ, இணையத்தில் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
3
நாசா காலண்டரில்
தமிழ்நாடு!
உலகிலுள்ள 193 நாடுகளிலிருந்து
பங்கேற்ற 3 ஆயிரம் பேர்களில் பனிரெண்டு சிறுவர்களுக்கு மட்டுமே
அந்த ஆச்சர்ய சான்ஸ் கிடைத்துள்ளது. அதில் இருவர் நம் தங்கத்தமிழ்நாட்டைச்
சேர்ந்தவர்கள்.
அமெரிக்காவின்
விண்வெளி மையமான நாசா நடத்திய ஓவியப்போட்டியில் வென்றுள்ள சிறுவர்களின் லிஸ்ட்டில்
தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு சிறுவர்கள் இடம்பிடித்து சாதித்துள்ளனர். இவர்களின் காலண்டர் ஓவியப்படைப்புகள் விரைவில் சர்வதேச
விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.
வெற்றிபெற்ற பனிரெண்டு
பேர்களில் தமிழ்நாட்டின் புஷ்பத்தூரிலுள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த பி.ஜே.
காவியா, கே. செல்வா ஜித் உண்டு. ஆறாம் வகுப்பு மாணவரான செல்வா, ஆராய்ச்சியாளர் விண்வெளிக்கு என்ன கொண்டுவருவார் என்ற கான்செப்டிலும்,
காவியா, விண்வெயில் இயற்கை தோட்ட உணவு என்ற தலைப்பிலும்
வரைந்த படங்கள்தான் வெற்றிவாகை சூடியுள்ளன.
தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்