புத்தகம் புதுசு!
LUCY CASTOR FINDS HER SPARKLE
by Natasha Lowe
Page count: 240pp
Publisher: Simon & Schuster
லூசி காஸ்டர் அதிக மாற்றங்களை விரும்புபவள் அல்ல. ஆனால் விரைவில் நான்காம் வகுப்பு செல்லவிருக்கிறாள். என்ன மாற்றங்களை சந்திக்கிறாள் என்பதே கதை. லூசியின் தாய்க்கு பிறக்கவிருக்கும் ட்வின் சகோதரர்கள், பக்கத்து வீட்டுத்தோழியின் பற்பல நிறங்களைக் கொண்ட முடி என சூழல்கள் லூசியை தடுமாற்றமடைய வைக்கின்றன. லூசி எப்படி தன் கோபத்தையும் பதற்றத்தையும் கட்டுப்படுத்த கற்கிறாள் என்பதை ஆசிரியர் இனிய மொழியில் விவரிக்கிறார்.
FLORETTE
by Anna Walker ; illustrated by Anna Walker
40pp, Clarion
மே தன் நகரம் நோக்கி இடம்பெயர்ந்த பின் தான் வளர்த்த தோட்டத்தை நிரந்தரமாக பிரிந்துவிட்டதாக ஏக்கம் கொள்கிறாள். வண்ணத்துப்பூச்சிகள், பறவைகளை அட்டைகளில் வைப்பதையும் மழை அடித்துக்கொண்டு போக, மீதியை மேயின் தந்தை குப்பை என கூட்டித்தள்ள நொந்துபோகும் மே, இறுதியாக தன் பிரிய தாவரங்களை வளர்க்க என்ன செய்தாள் என்பதை அழகிய படங்களுடன் விளக்கும் நூல் இது.
Playing Atari with
Saddam Hussein
Jennifer Roy, pp176
HMH Books
இராக்கில் வாழ்ந்து
வரும் அலி ஃபாதிலுக்கு சாஸர் வெறியன். அதோடு வீடியோ கேம்கள், அமெரிக்க டிவி நிகழ்ச்சிகள் என்றால் அவ்வளவு இஷ்டம்.1991 ஆம் ஆண்டு ஜனவரி பதினேழுக்குப் பிறகு இராக்கின் மீது அமெரிக்காவின் தாக்குதல்
தொடங்க பசி,பட்டினி, பயம் என அலி நினைத்துப்பார்க்க
முடியாத வாழ்க்கை தொடங்குகிறது. அலியின் பார்வையில் விரியும்
43 நாட்கள் உலகம்தான் கதை.
One True Way
Shannon Hitchcock
224 pages
Scholastic, Inc.
டேனியல் பூன் நடுநிலைப்பள்ளியில்
படிக்கும் இரண்டு சிறுமிகளின் நட்பின் அடிப்படையில் 1970 ஆம் ஆண்டு உலகில் நிலவிய
அரசியல் வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி பேசும் படைப்பு இது. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு
உண்டான நெருக்கடிகள், சமூகத்தில் அதன் மீதான தாக்கம் ஆகியவற்றை
பற்றி பேசும் நெகிழ்ச்சியான கதைநூல் இது.
தொகுப்பு: ரஜீத்கான், முகேஷ்ராஜன்
நன்றி: முத்தாரம்