ஒலிம்பிக்ஸில் கோல்டு டிராகன்!

 Image result for gold dragon





ஒலிம்பிக்ஸில் கோல்டு டிராகன்!

2018 ஆம் ஆண்டு தென்கொரியாவின் பியாங்சாங்கில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டி, விளையாட்டு வீரர்களின் திறமையை நிரூபிக்கும் களம் என்பதோடு ஹேக்கர்களும் இதில் மோதவிருக்கிறார்கள். இதில் ரஷ்யா மற்றும் வடகொரியா நாட்டின் தகவல் திருட்டு தாக்குதல்கள் அதிகம் நிகழ்ந்திருப்பதாக தகவல்கள் லீக்காகி உள்ளன.

"ஒலிம்பிக்ஸ் என்பது இன்று மிகப்பெரும் அரசியல் விளையாட்டாக மாறிவிட்டது.எனவே இங்கு நிகழும் ஆவணங்கள் திருட்டு என்பது சாதாரணமான ஒன்று" என்கிறார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் தாமஸ் ரிட்.
ஆபரேஷன் கோல்டு டிராகன் என்ற பெயரில் நடந்துள்ள ஸ்பைவேர் தாக்குதலை மெக்அஃபி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதன் பெயர்கள், GoldDragon, BravePrince,  GHOST419.


ஐடியா சிம்பிளானது. முதலில் குறிப்பிட்ட ஒலிம்பிக் ஐடிக்கு இமெயில் அனுப்புவார்கள். அதில் எனேபிள் கன்டன்ட் என்பதை கிளிக் செய்தால் முடிந்தது கதை. உங்கள் கம்ப்யூட்டரை பிறர் ரிமோட் முறையில் இயக்க முடியும். பின்னர் உளவு சாப்ட்வேரை கணினியில் பதித்து தகவல்களை பதிவு செய்வார்கள். இதில் உளவு நிரல்கள், சிம்பிளான படக்கோப்புகளாக இருக்கும். மெக்அஃபீ இதனை ட்ரேஸ் செய்தபோது குறிப்பிட்ட உளவு கணினி, செக் நாட்டில் இருந்தது. இதில் ரஷ்யாவின் உளவு நிறுவனமான ஃபேன்சி பியரின் அத்தியாயங்களும் உண்டு.


2

5ஜிக்கு பாதுகாப்பு!

அமெரிக்கா தனது தொலைத்தொடர்பு சேவையை சீனா, உளவறியாதமுறையில் கட்டமைக்க மெனக்கெட்டு வருகிறது. தேசிய பாதுகாப்பு கவுன்சில், இதற்காக பரித்துரைத்துள்ள திட்டம்தான் அல்ட்ரா வேக வயர்களற்ற 5ஜி சேவை.

சீனாவைச்சேர்ந்த ஹூவாய் ஹெட்செட் விற்பனையை நிறுத்திவைக்கவும் அமெரிக்க காங்கிரஸ் சபை முடிவு செய்துள்ளது. அதிபர் இந்த 5ஜி சேவை ஐடியாவை ஏற்றால் உடனே நடைமுறைக்கு வர வாய்ப்புண்டு. "5ஜி நெட்வொர்க்கு ஏற்பில்லாத பொருட்களை சந்தையிலிருந்து அப்புறப்படுத்தி தகவல்களை சேமிக்க 5ஜி சேவை உதவும்.நம் தகவல்களை பிற நாட்டினர் ஒற்றறிய முடியாமல் பாதுகாக்கலாம்" என்கிறார் பாதுகாப்புத்துறை அதிகாரி. இதற்கு ஃபெடரல் கம்யூனிகேஷன் கமிஷன் தலைவர் அஜித்பாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  இரண்டு மணிநேரத்தில் 3ஜி சேவை உடைக்கமுடிவதும், 4ஜியின் 3 லெவல் பாதுகாப்பு அடுக்கு அனைத்து தொலைத்தொடர்பாளர்களாலும் பின்பற்றப்படுவதில்லை. எனவேதான் 5ஜிக்கு அமெரிக்கா தாவுகிறது.


ஐடியா சிம்பிளானது. முதலில் குறிப்பிட்ட ஒலிம்பிக் ஐடிக்கு இமெயில் அனுப்புவார்கள். அதில் எனேபிள் கன்டன்ட் என்பதை கிளிக் செய்தால் முடிந்தது கதை. உங்கள் கம்ப்யூட்டரை பிறர் ரிமோட் முறையில் இயக்க முடியும். பின்னர் உளவு சாப்ட்வேரை கணினியில் பதித்து தகவல்களை பதிவு செய்வார்கள். இதில் உளவு நிரல்கள், சிம்பிளான படக்கோப்புகளாக இருக்கும். மெக்அஃபீ இதனை ட்ரேஸ் செய்தபோது குறிப்பிட்ட உளவு கணினி, செக் நாட்டில் இருந்தது. இதில் ரஷ்யாவின் உளவு நிறுவனமான ஃபேன்சி பியரின் அத்தியாயங்களும் உண்டு. 


3



காந்த ஒளி சைக்கிள்!

சைபீரியாவைச் சேர்ந்த டாக்டர் செமியோன் ஃபிலிமோவ், சைக்கிள் ஸ்போக்குகளில் எல்இடி விளக்குகளை பேட்டரி இன்றி அமைத்துள்ளார். சைக்கிள் ரிம்களிலுள்ள நியோடைமிய காந்தம் இதற்கான மின்சாரத்தை அளிக்கிறது. லைட்டுகளுக்கும் காந்தத்திற்கும் இதில் நேரடியான இணைப்புகள் கிடையாது. சைக்கிள் ஓடுவதன் வழியாக லைட்டுகள் மின்சாரத்தை பெற்று ஒளிர்கின்றன.

வாட்டர் ஃப்ரூப் கொண்ட இந்த லைட்டுகள் -26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் வேலை செய்யும். இரண்டு சக்கரங்களிலும் இரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆறு நிறங்களில் இவை கிடைக்கின்றன. விரைவில் சந்தைக்கு வரவிருக்கும் காந்த ஒளி சைக்கிள் இது.



தொகுப்பு: செலீன் கிளார்க், ராய்ன் பிலிப்ஸ்
நன்றி: முத்தாரம்