காதலிக்க முடியுமா?- இளங்கோ கிருஷ்ணன்
தமிழ்வலம் - இளங்கோ கிருஷ்ணன்
காதலிக்க முடியுமா?
சொல்லை சிவம் என்றும் அதன்
பொருளை சக்தி என்றும் சாகுந்தலத்தில் வர்ணிக்கிறான் காளிதாசன். தமிழில் உள்ள லட்சக்கணக்கான சொற்களில் சில ஆயிரங்களை மட்டுமே
நாம் பயன்படுத்துகிறோம். அதையும்
தப்பும் தவறுமாக பேசி எழுதும் தலைமுறை ஒன்று உருவாகிவிட்டது. தவறுகளைத் தவிர்க்க சிறிது கவனம் தேவை. ஐயையோ தமிழ் இலக்கணமா? என்று அலற வேண்டாம். ஆர்வத்துடன் தமிழை நோக்கி நீங்கள் ஓரடிவைத்தால் அது உங்களை நோக்கி
ஈரடிவைக்கும். அவ்வளவு
இலகுவான இனிய மொழி அது. வாருங்கள்
தமிழில் இறங்குவோம்.
அருகாமையில் காதலிக்க முடியுமா?
’அன்பே! உன்அருகாமையில் நான் மகிழ்வாய் இருக்கிறேன்’ என்றான் ஒரு நவீன காதலன். இதில் உள்ளஅபத்தம் என்ன? உண்மையில் தமிழ் தெரிந்த காதலி என்றால் அவனைத் தாளித்திருப்பாள்.
அருகாமை என்ற சொல்லுக்கு அருகில்
என்று அர்த்தம் கொள்கிறோம். அது தவறு. அருகில் என்றால் பக்கத்தில் என்று பொருள். அருகாமை எனில் அருகில் அமையாமை(தொலைவில் இருப்பது) என்று
பொருள். காதலியிடம் ’உன்அருகாமைஇன்பம்’ என்றால் நீ தொலைவில் இருப்பதே இன்பம் என்றாகிவிடும். எனவே, தமிழுக்கும் காதலிக்கும் அருகாமை வேண்டாம்; அருகில் போதும். அதுவே பேரின்பம்.
நன்றி: முத்தாரம்
நன்றி: முத்தாரம்