நேர்காணல்: பிர்ஜித் ஸ்வார்ஷ், மூத்த பத்திரிகையாளர்



Image result for mauritania slavery




முத்தாரம் நேர்காணல்


"உண்மையை பேசும் மக்கள் அரசிடம் கொடுக்கும் விலை அசாதாரணமானது"


பிர்ஜித் ஸ்வார்ஷ், மூத்த பத்திரிகையாளர்.

தமிழில்: .அன்பரசு
நன்றி: hrw.org

வட ஆப்பிரிக்காவிலுள்ள மேற்கு சகாரா மற்றும் செனகல் ஆகியவற்றுக்கு இடையிலுள்ள மாரிடானியா உலகிலேயே கடைசியாக(1981) அடிமை முறையை ஒழித்த நாடு. 2007 ஆம் ஆண்டு அதனை குற்றமென அறிவித்தது. அராபியர்கள், பெய்டர்கள், வடகிழக்கு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த பெர்பர்கள், ஆப்பிரிக்க அடிமைகள் இங்கு வசிக்கின்றனர். ஆப்பிரிக்க மாரிடானிய மக்களுக்கு எதிராக அரசு கட்டவிழ்த்த வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளை மூத்த பத்திரிகையாளரான பிர்ஜித் ஸ்வார்ஷ் பேசுகிறார்.

மாரிடானியாவில் இன்னும் அடிமை முறை ஒழிக்கப்படவில்லையா? இதற்கு ஆதாரம் ஏதேனும் கிடைத்திருக்கிறதா?

அரசு தவிர்த்த பிற இயக்கங்கள் அடிமை முறைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. அரசின் பங்கு இதில் மிக சொற்பம். ஹராடைன் இன மக்கள் கடும் வறுமையில் வதங்குகிறார்கள். வசதியான குடும்பங்களின் ஆடு மற்றும் ஒட்டகங்களை மேய்ப்பதே இவர்களின் பணி. கிராமங்களில் இன்றும் இவர்களை ஏலங்களில் வாங்கி விற்கிறார்கள். அடிமைகளை விடுவிக்க உழைப்பவர்களின் அமைப்புகளுக்கு அரசு பதிவு கிடையாது. இதன் விளைவாக, அயல்நாட்டு நிதி கிடைக்காது. பேரணி, மாநாடு என எதையும் நடத்த அனுமதி இல்லை. அரசின் டிவி, ரேடியோ எதையும் பயன்படுத்த முடியாது. வாட்ஸ் அப் போன்ற சேவைகளைத்தான் சார்ந்து செயல்படுகிறார்கள்.

மாரிடானியாவில் தீர்க்கப்படாத பிரச்னைகள் என்ன?

அடிமைமுறையை அடுத்து தீண்டாமை. பின் இதைத்தொடர்ந்த குற்றச்செயல்கள். மனித உரிமை கண்காணிப்பகம் 1989-91 ஆண்டுகளில் அரசு ஆப்பிரிக்க மாரிடானியர்களுக்கு எதிராக தொடங்கிய திட்டத்தால் அதிகாரிகள், மக்கள் என ஆயிரக்கணக்கானவர்களை தூக்கிலிட்டதுநூற்றுக்கணக்கான விவசாயிகள் செனகலுக்கு சென்றுவிட்டனர். இன்றும் இறந்தவர்களின் குடும்பம் நீதிகேட்டு நிற்கிறது. ஆண்டுதோறும் 28 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றபடி இருக்கிறது. மனித உரிமை கண்காணிப்பகம் இதனை பதிவு செய்துள்ளது.

அரசு அடக்குமுறைக்கு உதாரணம் சொல்லுங்களேன்.

மூர் இனத்தைச் சேர்ந்த ஓமர் பெய்பாகர், ஆப்பிரிக்க மாரிடானிய மக்கள் 1989-91 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டபோது பலரும் அறிந்த அதிகாரி. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிகழ்வை படுகொலை என்று கூறி பேசினார். அரசு உடனே அவரை கட்டம் கட்டி பாஸ்போர்ட்டை தடை செய்து, தீவிரவாதி என  முத்திரை குத்தியது. இன்னும் விசாரணை முடியவில்லை. உண்மையை பேசியதற்கு அரசு தரும் தண்டனை இது.

சவால்களை மீறி மனித உரிமை மீறல்களைப் பற்றிய ஆய்வறிக்கையை எப்படி தயாரித்தீர்கள்?

கடந்த செப்டம்பர் வரை அடிமை எதிர்ப்புக்குழுவினர் மாரிடானியாவுக்குள் நுழைய அரசு அனுமதிக்கவில்லை. இங்கிருந்த ஆய்வாளர்களும் நாட்டைவிட்டு வெளியேற அனுமதி கிடைக்கவில்லை. இதோடு ஒப்பிடும்போது எங்களுக்கு கேள்விகள் கேட்டு பதில்களைப் பெற அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்கவில்லை. அருகிலுள்ள நாடுகளை ஒப்பிடும்போது மாரிடானியா ஒன்றும் ஏழையான நாடல்ல. மீன்வளம், எரிவாயு, கனிமங்கள் நிறைந்த நாடு இது. அரசியல் சீர்குலைவால் இந்நாடு சீரழிவில் சிக்கியுள்ளது.
நன்றி: hrw.org

தொகுப்பு: பானுமதி, வினோத் மேத்தா
நன்றி: முத்தாரம்




பிரபலமான இடுகைகள்