விக்டரி வரி!


Image result for medal





வெற்றிக்கும் வரி உண்டு!

அத்லெட்டின் வாழ்க்கையில் ஒரே லட்சியம், ஒலிம்பிக்கில் உலக போட்டியாளர்களை முட்டிச்சாய்த்து வெற்றிவாகை சூடி பதக்கத்தோடு பரவசம் வழிய ஒரு போட்டோ எடுக்கவேண்டும் என்பதுதானே! போட்டோ எடுத்தபின் வரி கட்டச்சொன்னால் எப்படியிருக்கும்?

ஒலிம்பிக் வீரர்களுக்கு அமெரிக்காவில் வரவேற்பு உண்டுதான். வரவேற்பு முடிந்ததும் உடனே வாங்கிய மெடலுக்கும் பரிசுத்தொகைக்கும் வருமானவரி(விக்டரி டாக்ஸ்) கட்ட அழைப்பு வரும். 2016 ஆம் ஆண்டு ஒபாமா அரசு, விக்டரி டாக்ஸை நீக்கியது. ஆனாலும் பல்வேறு மாநிலங்களில் பரிசுத்தொகை பிளஸ் மெடலுக்கு வரி கட்டும் முறை அமுலில் உள்ளது.

நல்ல ஆடிட்டர் உங்களுக்கு கிடைத்தால் வரியை கம்மி பண்ணி நிம்மதி தர வாய்ப்புள்ளது. பென்சில்வேனியாவில் ஒலிம்பிக், பாராலிம்பிக் வீரர்களுக்கு வரிவிலக்கு உண்டு.  மற்றபடி பிற மாநிலங்களில் கோல்டு மெடல் ஜெயித்தாலும் அதற்கு வரியாக 1100 டாலர்களை எடுத்துவைத்தே ஆகவேண்டும்.

தொகுப்பு: கா.சி.வின்சென்ட்
நன்றி: முத்தாரம்

பிரபலமான இடுகைகள்