புக்மார்க் செய்யுங்க!



Image result for book





புத்தக அறிமுகம்!

Option B
by Sheryl Sandberg, Adam Grant, Adam M. Grant
240 pages WH ALLEN

நியூயார்க் டைம்ஸின் பெஸ்ட் செல்லர் நூல் இது. தன் கணவர் இறந்தபின் ஏற்பட்ட வெறுமையை எப்படி கடந்து வந்தேன் என விவரிக்கிறார் செரில் சான்ட்பெர்க். ஃபேஸ்புக்கின் திட்ட அதிகாரியான ஷெரில், கணவர் இறந்த துக்கத்தை தன் நண்பர் ஆடம் கிராண்ட் கூறிய வழிமுறைகளின் மூலம் துடைத்தெறிந்து வாழத்தொடங்கியது எப்படி என ஆப்ஷன் பி நூலில் விவரிக்கிறார்.

LET US EAT HEALTHY!
With Bernard and His Mom
by Connie Du
50pp,CreateSpace

குழந்தைகள் நூலான இதில் கானி டூ தன் மகன் பெர்னார்ட்டுக்கு தரும் உணவுவகைகளைப் பற்றி விவரிக்கிறார். தன் குழந்தைக்கான ஆரோக்கிய உணவுவகைகளை எப்படி டூ வடிவமைத்தார் என்பதை
அழகிய படங்களுடன் கூறியுள்ள நூல் இது. குழந்தை பருவத்தை அழகாக்கும் ஆரோக்கிய உணவுக்கான பயணமே இந்நூல்.  



Winterhouse
by Ben Guterson
384 pages
Henry Holt and Co. (BYR)

நகரத்திலுள்ள ஹோட்டலில் நிகழும் அதிசய சம்பவங்களைக் கொண்ட நாவல் இது. எலிசபெத் சோமர்ஸை அத்தையும் மாமாவும் நார்பிரிட்ஜ் என்பவரின் வின்டர்ஹவுஸ் ஹோட்டலில் தங்க வைக்கின்றனர். அங்குள்ள பெரிய நூலகத்தில் புதிர்களைக் கொண்ட மேஜிக் நூலை எலிசபெத் கண்டெடுக்கிறாள். அவளுக்கும் ஹோட்டலுக்கும் ஏதோ தொடர்பிருப்பது போல அவளுக்கு தோன்ற, ஹோட்டலுக்கு வரவிருக்கும் பிரச்னை என்ன? அதை எலிசபெத் எப்படி தீர்த்தாள் என்பதே இந்த சாகச நாவலின் மையம்.

by Eliot Schrefer
368 pages
Katherine Tegen Books

மந்திர மழைக்காட்டில் வாழும் சிறுத்தை தான் வாழும் காட்டிற்கு வரும் ஆபத்தை தடுத்து, அதன் தொன்மை ரகசியங்களை அறிந்து கொள்வதே இந்த நாவலின் கதை.

மழைக்காடான கால்டெராவில் பகலில் மற்றும் இரவில் உலவும் மிருகங்கள் என விடாப்பிடி ரூல்ஸ் உண்டு. ஆனால் கதை நாயகன் மேஸ் அதனை கண்டுகொள்ளாமல் பகலின் ரகசியங்களை அறிவதில் கதை தொடங்குகிறது. நியூயார்க் டைம்ஸ் இதழின் விற்பனை சாதனை படைத்த எழுத்தாளர் எலியட் ஸ்ரெஃபர் எழுதியுள்ளார்.

புத்தகம் பேசுது

தமிழகத்தின் பறவைக்காப்பிடங்கள்
சண்முகானந்தம் ஜெயக்குமார்
எதிர் வெளியீடு, விலை ரூ.500

தமிழகத்திலுள்ள பல்வேறு பறவைக்காப்பிடங்களைப் பற்றிய ஏ டூ இசட் தகவல்களை கூறும் நூல் இது. பறவைகளின் பெயர், அவற்றின் கூடமைக்கும் முறை, அதன் இனப்பெருக்கம் பற்றியும் விரிவாக பேசும் பறவைகள் பற்றிய களஞ்சியம் என்றே கூறலாம்.

How Democracies Die:
What History Reveals About Our Future
320 pages , Crown Publishing Group (NY)
உலகெங்கும் தாராளமய ஜனநாயகம் எப்படி மறைந்து வருகிறது என குறுக்குவெட்டாக நமக்கு காட்டுகிற நூல். ட்ரம்ப் அதிபரானதிலிருந்தே பலருக்கும் நம் ஜனநாயம் ஆபத்திலிருக்கிறதா என்று கேள்வி எழுந்துவருகிறது. ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவை இருபது ஆண்டுகளாக ஆராய்ந்த ஸ்டீபன் லெவிட்ஸ்கி, டேனியல் ஸிப்லட் இதற்கு சொல்லும் பதில் முக்கியமானது. 1930 ஆம் ஆண்டு உலகளாவிலான உதாரணங்கள், ஹங்கேரி, துருக்கி, வெனிசுலா ஆகிய நாடுகளின் ஜனநாயகம் இறந்துபோனதை கூறி எப்படி அதனை மீட்பது என்றும் தீர்வு தந்திருக்கிறார்கள்.



தொகுப்பு: லிஸி நெபகோவ், ஸ்மித் உபல்
நன்றி: முத்தாரம் 

பிரபலமான இடுகைகள்