விண்வெளியில் சீனச்சுவர் மட்டும்தான் தெரியுமா?


Related image





கேள்விக்கென்ன பதில்?

விண்வெளியிலிருந்து பார்த்தால் சீனப்பெருஞ்சுவர் மட்டும்தான் தெரியுமா?

சீனப் பெருஞ்சுவர் மட்டுமல்ல மனிதர்கள் உருவாக்கிய கட்டுமானங்கள் பலவும் தெரியும். ஆனால் விண்வெளி தொடங்கும் இடம் எது என்பதிலிருந்துதான் அதனை முடிவு செய்யமுடியும். சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து  402 கி.மீ பார்த்தால் மேலும் பல மனிதகட்டுமானங்களையும், நிலவையும் கூட கிளியராக காணலாம்.

பூமியில் உயரமான மலைச்சிகரம் எது?

உலகின் உயரமான மலைச்சிகரம் எவரெஸ்ட் என்பது தவறு. கடல்மட்டத்திற்கு(29,035 அடி) மேலுள்ள சிகரங்களில் எவரெஸ்ட் உயரமானது. ஹவாய் தீவிலுள்ள மௌனா கியா மலைச்சிகரம் கடல்மட்டத்திற்கு 13,796 அடி மேலாக அமைந்துள்ளது. அப்படியே தொடர்ச்சியாக பசிபிக் கடல் வரை கீழிறங்கி தோராயமாக 19,700 அடி வரை நீண்டுள்ளது. இப்போது இதன் உயரத்தை அளவிட்டால் 33,500 அடி வரும்.


நீர் மின்சாரத்தை கடத்துகிறதா?

சுத்திகரித்த நீரில் மின்சாரம் கடத்தும் தன்மை குறைவு. அப்படி நீர் மின்சாரத்தை கடத்துவதற்கு காரணம், அது கலப்படமாக உள்ளதே. நீரில் கலந்துள்ள கனிமங்கள், அழுக்குகள் ஆகியவை இதற்கு உதவுகின்றன.


உடலிலுள்ள ரத்தத்தில் ஆக்சிஜன் குறையும்போது, நீலமாக மாறுமா?

ஆக்சிஜன் குறைந்தால் ரத்தம் கருஞ்சிவப்பாக மாறும். நீலமாக மாறுவது போல தோன்ற காரணம், தோலிலுள்ள பல்வேறு அடுக்குகளே.

தொகுப்பு: கோமாளிமேடை டீம்
நன்றி: முத்தாரம்