ஆன்டிபயாடிக் எறும்புகள்!
அபாயதேசம் மெக்சிகோ!
2006 ஆம்
ஆண்டிலிருந்து மெக்சிகோ அரசு போதைப்பொருட்களுக்கு எதிரான போரில் 2 லட்சம் மக்களை படுகொலை செய்துள்ளதோடு, 30 ஆயிரம் மக்களை
காணவில்லை விளம்பரத்தில் தேட வைத்துள்ளது. கடந்தாண்டில் மட்டும்
29 ஆயிரம் கொலைகள் மெக்சிகோவில் நிகழ்ந்துள்ளன. ஆனால் போதை பிஸினஸ் எந்த பிரச்னையும் இன்றி ஜரூராக நடைபெற்று வருகிறது.
"மெக்சிகோ
மலிவான விலையில் உற்பத்தியை வழங்க அமெரிக்கா அதனை கடத்தலுக்கு பயன்படுத்திக்கொள்கிறது.
மெக்சிகோ மக்களுக்கு மரணத்தை பரிசளிக்கிறது. அமெரிக்கா,
போதைப் பொருட்களுக்கான படையை உருவாக்குகிறது. பண
வலிமையற்ற மெக்சிகோ மெல்ல கடவுளிடமிருந்து விலகி அமெரிக்காவிடம் சென்றுவிட்டது"
என்கிறார் மெக்சிகோவைச் சேர்ந்த லா ஜோர்னாடா தினசரியைச் சேர்ந்த நிருபரான
ஆர்ட்யூரோ கானோ. தாராள வணிகம் என்பதும் அமெரிக்காவுக்கு மட்டுமே
பயனளிக்க கூடியது என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். A Narco History: How
the United States and Mexico Jointly Created the 'Mexican Drug War என்று நூலில் அமெரிக்காவின் போதை ஒழிப்பு அமைப்பான DEA, மெக்சிகோவின் போதை ஒழிப்பு பிரிவு எப்படி போதை ஒழிப்பு திட்டத்தை லாபகரமாக
மாற்றுகிறார்கள் என பேசுகிறது.
2
மூளையில் வாழ்கிறது
வைரஸ்!
நம் உடலின் உணர்வுநிலையை
தீர்மானிக்கும் வேர்களில் தொன்மையான வைரஸ் வாழ்வதை செல் அறிவியல் இதழ் கட்டுரை உறுதிபடுத்துகிறது. நான்கு
கால் விலங்குகளை தொற்றிய வைரஸ் பின்னாளில் மனிதர்களின் மூளையில் வாழத்தொடங்கியது. நரம்பு செல்களில் தன் மரபு பண்புகளை
கடத்தும் பணியை செய்து, தகவல் தொடர்பை சீர்மை செய்கிறது.
மனிதர்களின் ஜீனை
வைரஸிலிருந்து பெறுகிறோம் என்பது பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கலாம். மனிதர்களின்
40-80 சதவிகித ஜீன்கள் வைரஸ் ஆக்கிரமிப்பு மூலம் பெற்றவை என
2016 செல் இதழில் வெளியான மற்றொரு கட்டுரை குறிப்பிடுகிறது. வைரஸ் செல்லில் புகுவது, தன்னை பெருக்கிக்கொள்ளத்தான்
என்றாலும் திசுக்களின் வளர்ச்சி காலகட்டத்தில் இது உதவும். டிஎன்ஏவின்
தூதராக ஆர்என்ஏவினை பயன்படுத்தி செல்களுக்கிடையே தகவல்களை பரிமாறும் வைரஸ் ஜீனுக்கு
ஆர்க் என்று பெயர். ஈக்கள், புழுக்களுக்கும்
கூட உண்டு என ஆராய்ச்சி அதிர வைக்கிறது. இந்த ஜீன் செல்களுக்கிடையே
பரிமாறும் செய்தியைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஆன்டிபயாடிக் எறும்புகள்!
பல்வேறு வகையான
எறும்பு இனங்களிலிருந்து பெறப்படும் எதிர்நுண்ணுயிரிகளை பயன்படுத்தி மனிதர்களுக்கு
ஆன்டிபயாடிக் மருந்துகளை தயாரிக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். எறும்புகள்
தமக்கு ஏற்படும் நோய்களை தீர்க்க பாக்டீரியாக்களுக்கு எதிராக வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவதில்லை
என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு புதியபாதையை திறந்துள்ளது.
தற்போது 20 எறும்பு
இனங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. தன் உடலில் மேற்பரப்பில் பயன்படுத்தும் வேதிப்பொருட்களின் மூலம் பாக்டீரியா
உள்ளிட்ட கிருமிகளை எறும்புகள் சமாளிப்பது தெரிய வந்துள்ளது. பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு ஏற்ப 60 சதவிகிதம் அளவுக்கு
எறும்புகளின் உடலில் எதிர்நுண்ணுயிரி வேதிப்பொருட்கள் உருவாகியுள்ளது. "எறும்புகளில்
Solenopsis molesta இன எறும்பு எதிர்நுண்ணுயிரி எதிர்ப்புகளில் முன்னணியில்
உள்ளது. இவற்றை விட எதிர்நுண்ணுயிரி வேதிப்பொருட்களை திறமையாக
வேறு உயிரி பயன்படுத்தவே முடியாது. மேலும் ஆன்டிபயாடிக் இல்லாமலேயே
நிறைய எறும்பு இனங்கள் நோய்களை சமாளிக்கின்றன." என்கிறார் ஆராய்ச்சியாளர் அட்ரியன்
ஸ்மித். நோய்களை எறும்புகள் சமாளிக்கும் மாற்று வழிகள் குறித்த
ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.
நன்றி: முத்தாரம்