ஆச்சர்ய குழந்தைகள்!


Image result for amazing kids




ஆச்சர்ய குழந்தைகள்!

Daliyah Marie Arana
பொதுவாக அமெரிக்கர்கள் ஆண்டுக்கு ஆசைக்கு ஐந்தே ஐந்து புத்தகங்கள் படிக்கிறார்கள் என்கிறது சர்வே கணக்கு. ஆனால் ஜார்ஜியாவைச் சேர்ந்த ஐந்து வயது பெண் தாலியா மேரி ஆரானா கின்டர்கார்டன் பள்ளியில் அட்மிஷன் வாங்குவதற்குள் படித்து முடித்த நூல்களின் எண்ணிக்கை 1000. ஜனவரி 2017 லைப்ரரி ஆஃப் காங்கிரஸின் கௌரவ நூலகராகவே வரவேற்கப்பட்ட பெருமை உடையவர் தாலியா. "என்னுடைய வகுப்பு மாணவர்களுக்கு நான் உதாரணமாக காட்டப்படுவதை விரும்புகிறேன். ஐந்து மாத குழந்தையான என் தம்பி டிமெட்ரியோவுக்கு இப்போதே நூல்களை வாசித்து காட்டத்தொடங்கிவிட்டேன். அவன் தன் இரண்டுவயதிலிருந்து நூல்களை வாசிக்கத் தொடங்கவேண்டும் என்பதே என் ஆசை" என புதிய நூலை வாசிக்க கையில் எடுக்கிறார் தாலியா.

Giselle Bazos
மூன்றாவது படிக்கும்போதே பொருட்களை தொலைக்கத் தொடங்கினார் ஜிசெல் பசோஸ். டஜன் கணக்கில் பொருட்களை தவறவிட்டு தாயிடம் திட்டுகளை வாங்கினார். பொருட்களை வைக்கும் சிறிய பாக்ஸை கையில் கட்டிக்கொள்ளும்படி ரீடெய்னரை கண்டுபிடித்து பெருமூச்சு விட்டார் ஜிசெல். 2017 ஆம் ஆண்டு தேசிய கண்டுபிடிப்பு கண்காட்சியகத்திற்கு தனது ஐடியாவை தானம் செய்தவர், தற்போது புதிய கருவியைக் கண்டறியும் ஆய்வில் இறங்கியுள்ளார்.

HENRY BURNER

நான்காவது படிக்கும் ஹென்றிக்கு பள்ளியில் வணிக ப்ராஜெக்ட் ஒன்றை கொடுத்தார்கள். வழக்கமான வழியை கைவிட்டு, அம்மாவின் உதவியுடன் இணையத்தில் பின்பேக்பட்டன்களை(சட்டையில் அணியும்படியான பேட்ஜ்) விற்கும் நிறுவனத்தை தொடங்கினார். இன்று இவரின் Buttonsmith, Inc., ஃபோர்ப்ஸ் நிறுவனத்தில் பாராட்டப்பட்டுள்ளதோடு, வால்மார்ட் கடைகளிலும் சேல்சில் சக்கைபோடு போடுகிறது.

AMARIYANNA COPENY

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதிச் சிறுமியான கோபெனி, தன் ஏரியா நீர்நிலையில் லெட் வேதிப்பொருள் கலந்து மக்கள் தோல்நோய்களால்  அவதிப்பட்டதைக் கண்டு வேதனைப்பட்டார். மார்ச் 2016 அன்று முன்னாள் அதிபர் ஓபாமாவுக்கு நிலைமையை விளக்கி லெட்டர் எழுதினார் எட்டு வயசு கோபெனி. அதிசயம் நிகழ்ந்தது சில மாதங்களுக்கு பிறகுதான். ஒபாமா கோபெனி பாப்பாவை சந்திக்க ஃபிளின்ட் பகுதிக்கு வருவதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்தது. பின்னர், லிட்டில் மிஸ் கோபெனியாக புகழ்பெற்று மத்திய மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் 25 ஆயிரம் டாலர்கள் ஸ்காலர்ஷிப் வென்றார். தற்போது தனது பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

தொகுப்பு: ஆலன் வான்கா, விக்டர் காமெஸி
நன்றி: முத்தாரம்