காஃபிக்கு வார்னிங்!



Image result for coffee



காஃபிக்கு வார்னிங்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் விரைவில் காஃபி விற்கும் கடைகளில் புற்றுநோய் எச்சரிக்கை லேபிள்கள் ஒட்டப்படவிருக்கின்றன. நச்சுக்கள் தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலின் முயற்சியால் நீதிமன்றம் மேற்சொன்ன உத்தரவை பிறப்பித்துள்ளது.

காஃபியிலுள்ள அக்ரைலாமைடு என்ற வேதிப்பொருளை கலிஃபோர்னியா நகரம், புற்றுநோய்க்கான காரணியாக வகைப்படுத்தி உள்ளது. தாவரங்களிலும், தானியங்களிலும் உள்ள அக்ரிலாமைடு, அதிக வெப்பநிலையில் பொருட்களின் வழி உருவாகும். உருளைக்கிழங்கு, பிரெட், பிஸ்கட், காஃபி ஆகிய பொருட்களை அதிக வெப்பத்தில் சூடுபடுத்தும்போது அக்ரிலாமைடு உருவாகிறது. இந்த வேதிப்பொருள் இன்றி, காஃபியை உருவாக்கும் வழியும் பலரும் அறியாதவை. 2002 ஆம் ஆண்டு ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்தனர். "வறுப்பது, பொரிப்பது, பதப்படுத்துவது என அனைத்தும் அக்ரிலாமைடு மேதிப்பொருளை ஏற்படுத்துகிறது" என்கிறது ஐரோப்பிய உணவு ஆணையம்

2

சுனாமியை அறிவிக்கும் நீர்!

கடலில் ஏற்படும் சுனாமியின்போது நீரில் acoustic gravity waves (AGWs) ஒலியலைகள் உருவாகின்றன. தற்போது இங்கிலாந்திலுள்ள கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கணிதமுறையில் அந்த ஒலியலைகளை ஆய்வு செய்து, சுனாமியின் தீவிரத்தை அளவிட முயற்சி செய்து வருகின்றனர்.

நிலநடுக்கம் ஏற்படும் இடத்திற்கு சுனாமி வருவதற்கு பத்துமடங்கு வேகத்தில் AGW அலைகள் பயணிக்கின்றன. நீரிலுள்ள ஹைட்ரோபோன் மூலம் இடம், நேரம் ஆகிய தகவல்களின் மூலம் சுனாமியின் பாதிப்பை எளிதில் கணக்கிட முடியும். இதற்கு அதிக எண்ணிக்கையில் மிதவைகள் தேவை என்பதால் அதிக செலவு பிடிக்கும் முறை. தற்போது எச்சரிக்கை அமைப்புகள் மிதவைகளின் மூலமே அழுத்தங்களை அறிந்து சுனாமியை அறிகிறார்கள். ஆனால் இதன்மூலம் சுனாமியை முன்கூட்டியே அறியமுடியாது. "AGW அலைகள் மூலம் சுனாமியை முன்னரே அறிந்து காப்பதுதான் ஆராய்ச்சியின் நோக்கம்" என்கிறார் ஆராய்ச்சியாளர் உசமா கத்ரி. மேற்சொன்ன அலைகளை செயற்கையாக உருவாக்கி சுனாமியை தடுக்கும் ஆய்வுகளிலும் கத்ரி முன்பு ஈடுபட்டவர்.

3

புதிய கண்டுபிடிப்புகளின் சூழல்!

THE PRINTING PRESS

1492 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த துறவி ஜோகனஸ் டிரிதெமியஸ் பிரிண்டிங் முறையை தீவிரமாக எதிர்த்தார். துறவிகள் பெரும்பாலும் தோலில் எழுதுபவர்களாக பணி செய்து வந்ததால், பிரிண்டிங் தொழில்நுட்பம் அவர்களை வேலையிழக்கச்செய்துவிடும் என்ற பயம் அவர்களுக்கு தோன்றியிருந்த காலம் அது. துறவியின் காலத்தில் பழைய பொருட்களிலிருந்து பேப்பரை உருவாக்கினார்கள். பின்னாளில் காகிதத்தை தவிர்க்க கூறிய துறவி ஜோகனஸின் போதனைகள் காகிதத்தில்தான் அச்சிடப்பட்டு வெளியாயின.

ICE CUBES

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபிரடெரிக் ட்யூடர் பல்வேறு குளங்களிலிருந்து ஐஸ் க்யூப்களை பெற மெனக்கெட்டார். ஐஸ்கட்டிகளை கப்பலில் ஏற்றிக்கொண்டு கரீபியன் தீவுகளுக்கு செல்வதை நண்பர்கள், உறவுகள் என கிண்டல் செய்தாலும் ஃபிரடெரிக் தன்னம்பிக்கை இழக்கவில்லை. ஐஸை வைத்து என்ன செய்வதென மக்களுக்கு விளக்க முடியாததால் அம்முயற்சி தோல்வியானது.  பின் நியூ ஆர்லியன்ஸ் டூ கொல்கத்தா வரை பயணித்து ஜில் குளிர்பானங்கள் தயாரிக்கவும் மற்றும் காய்ச்சலிலுள்ள நோயாளிகளுக்கு ஐஸ் ஒத்தடத்தை டாக்டர்கள் பரிந்துரை செய்யக்கோரி வென்றதால் இன்றுவரை ஐஸ் கிங் என்றால் அது ஃபிரடெரிக் ட்யூடர்தான்.

தொகுப்பு: கா.சி.வின்சென்ட்
நன்றி: முத்தாரம்


பிரபலமான இடுகைகள்