குழந்தைகளுக்கான புத்தகங்கள்!




Image result for books

புக் பார்க்!

Atom Land by Jon Butterworth Atom Land: A Guided Tour Through the Strange (and Impossibly Small) World of Particle Physics
by Jon Butterworth
pp288 The Experiment

இயற்பியல் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கான அறிவியல் புத்தகம் இது. அணு இயற்பியல் குறித்த துல்லிய துலக்கமாக வாசகர்களுக்கு கூறிச்சொல்லும் நூலில் எலக்ட்ரான்,போசான், ஹாட்ரோன் ஆகியவை மட்டுமே கதாபாத்திரங்களாக உள்ள உலகில் பயணிக்க வைக்கிறார் ஆசிரியர் ஜோன் பட்டர்வொர்த்.அறிந்த அறிய விரும்புகிற இயற்பியல் கேள்விகளுக்கான பதில்கள் இந்நூலில் ஏராளமாக உள்ளன.

The Food Explorer: The True Adventures of the Globe-Trotting Botanist Who Transformed What America Eats
by Daniel Stone
Dutton Books

உலகெங்கும் உள்ள உணவுகளை தேடி அலைந்த உணவு ஆய்வாளரின் பயணக்குறிப்பு இது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய இப்பயணத்தில் இந்தியாவின் மாம்பழம், சீனாவின் பீச் பழம், மால்டாவின் மாதுளை என கண்டறிந்த தாவரவியலாளர் ஃபேர்சைல்ட்டின் உதவியால் அமெரிக்க விவசாயத்துறை ஏராளமான பயன்களை பின்னாளில் பெற்றது. பழங்குடிகளிடம் சிறைபட்டு உயிர்தப்பியது, பயணத்தின் நோய் தாக்குதல் என ஃபேர்சைல்ட் தன் லட்சியத்திற்காக படாத சிரமங்களில்லை. உணவுத்துறையை விரிவாக்கியதில் முக்கியமானவர் இவர்.



 2

புத்தகம் பேசுது!

PHYSICIAN
How Science Transformed the Art of Medicine
by Rajeev Kurapati
Manuscript
Kirkus Indie

நோயைக் கண்டறிவதில் நவீன மருத்துவம் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்பதைக்கூறும் ஆய்வு நூல். நோயாளியின் நோயை தீர்ப்பதில் உணர்வு மற்றும் ஆன்மிகரீதியான பங்கை வரலாற்று பின்புலத்துடன் பேசுகிறது. க்ரீஸ்,சீனா,இந்தியா ஆகிய நாடுகளின் மருத்துவ முறைகளையும், நோய் தீர்ப்பதில் உளவியல் ரீதியான அணுகுமுறைகளையும் நெருக்கமாக ஆராய்ந்து மருத்துவர்களின் பங்களிப்பை நேர்மையாக புரியவைக்கும் நூல் இது.

WHAT’S HOLDING YOUR SALES BACK?
Find It, Face It & Fix It
by Peter Farkas with Leonard Atlas
284pp,CreateSpace
Kirkus Indie

பொருட்களை தயாரிப்பதைவிட அதை முறையாக மார்க்கெட்டிங் செய்து வாடிக்கையாளர் தலையில் கட்டும் சேல்ஸ் திறமை 21 ஆம் நூற்றாண்டின் அவசியத்திறன். விற்பனையில் அடிப்படைகளை விளக்கும் சூப்பர் கைடுதான் இந்நூல். நேரம்,கருத்து,எண்ணம்,செயல், முன்னுரிமை என குறிப்பிட்ட அடிப்படை கொள்கைகளை உதாரணங்களோடு விளக்குகிறார்கள் ஆசிரியர்களான பீட்டர் மற்றும் அட்லஸ்.

தொகுப்பு: கோமாளிமேடை டீம் 
நன்றி: முத்தாரம்