கலர்கலராக பாஸ்போர்ட்!
தினசரி உணவாக இறைச்சி!
மொத்த உடலும் டோட்டல்
டேமேஜாகும்.
இறைச்சியில் நார்ச்சத்து ஜீரோ என்பதால் மாவுச்சத்தில் ஜீவித்த உடல் சமநிலை
தடுமாறும். இதன் முதல் அறிகுறி, மலச்சிக்கல்.
அடுத்து உடலின் எனர்ஜிக்கும் உதவும் கார்போஹைட்ரேட் இறைச்சியில் மினிமம்
என்பதால், உடல் தன் சேமிப்பிலிருந்த கொழுப்பைக் கரைக்க உடலின்
அத்தியாவசிய வைட்டமின்கள் நொடியில் மிஸ்ஸாகும். பக்கவிளைவுகள்
உடனே உடலில் தெரியும்.
குமட்டல், வயிற்றுப்போக்கு
புரதம் கல்லீரலில் குளுக்கோஸாக மாறுவதன் எச்சமாக
உப்பு படிவதால் குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும்.
வைட்டமின் சி நம் உடலில் உருவாக்கிக்கொள்ள முடியாத சத்து என்பதால்,
பச்சையாக இறைச்சி உண்டால் மட்டுமே இச்சத்து உடலுக்கு கிடைக்கும்.
ஆனால் பச்சையாக இறைச்சியை உண்பது பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தும்.
உடலில் ரத்த அழுத்தம், நீரிழிவு இருந்தால் இறைச்சியை
மட்டுமே உண்பது டாக்டரின் ஆலோசனைப்படி நடப்பது உத்தமம்.
2
சாக்லெட்டை அழிக்கும்
வைரஸ்!
சாக்லெட்டின் மூல
ஆதாரமான கோகோ காய்களை((Theobroma cacao)) வைரஸ் மற்றும் பூஞ்சைகள் தாக்குவதால் சாக்லெட் உற்பத்தி பெருமளவு குறைந்துவருகிறது.
இதைத் தடுக்க CRISPR-Cas9 எனும் ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் யோசித்து
வருகின்றனர்.
பருவப்பயிரான கோகோ பூஞ்சைகளால் பெருமளவு தாக்கப்படுவதை தேசிய கடல் மற்றும் சுற்றுப்புறச்சூழலியல்
அமைப்பும் தனது 2016 அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. "வைரஸ் மற்றும் பூஞ்சை தாக்குதல்களிலிருந்து கோகோ மரத்தை பாதுகாக்க
ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கோகோவின் டிஎன்ஏவை மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளோம்" என்கிறார் கலிஃபோர்னியா பல்கலையின் தாவரவியல் பேராசிரியரான
பிரையன் ஸ்டாஸ்காவிக்ஸ். கோகோ மரம் மேற்கு ஆப்பிரிக்கா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகின்றன.தோராயமாக 50 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் தொழில்துறை இது. IGI இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த
பொறியாளர்கள் இதே டெக்னிக்கை அரிசி,கோதுமை,மரவள்ளிக்கிழங்கு ஆகிய
பயிர்களுக்கும் பின்னாளில் பயன்படுத்த உள்ளனர்.
3
பாஸ்போர்ட்டுகள்
ஏன் நான்கு நிறங்களில் மட்டும் வெளியாகின்றன?
பொதுவாக பாஸ்போர்ட்டுகளின்
நிறம் நான்கு.
சிவப்பு,பச்சை,நீலம்,கருப்பு. Civil Aviation Organization(ICAO) விதிப்படி,
உலக நாடுகளின் பாஸ்போர்ட்டுகளில் அளவு, வடிவம்
ஆகியவை தீர்மானிக்கப்படுகிறது. நிறம் என்பது அந்நாட்டின் அரசியல்
மற்றும் நிலப்பகுதி சார்ந்து தீர்மானிக்கப்படுகிறது. கரீபியன்
நாடுகளில் பாஸ்போர்ட் நீலநிறத்திலும், இங்கிலாந்து பாஸ்போர்ட்
அரக்கு நிறத்திலும் இருப்பது இதனால்தான். இதில் இஸ்லாமிய நாடுகளான
பாகிஸ்தான், மொராக்கோ, சவுதி அரேபியா நாடுகளின்
பாஸ்போர்ட் பச்சையின் பல்வேறு ஷேடுகளைக் கொண்டது.
இதிலும் ஸ்பெஷலாக தன்னைக்காட்ட ஸ்விட்சர்லாந்து
சிவப்பு, சிங்கப்பூர் ஆரஞ்சு, கனடா வெள்ளை
என நிறங்களை பயன்படுத்துகின்றன. பாஸ்போர்ட்டின் கவரை தயாரிக்கும்
நிறுவனங்களும் சொற்பம்தான். வடிவமைப்பு, நிறம் ஆகியவற்றில் நாட்டின் கலாசாரம், வரலாறு ஆகியவையும்
பின்னிப் பிணைந்துள்ளது.
குறிப்பு:
தற்போது இந்திய அரசு குறிப்பிட்ட கல்வித்தகுதி உடையவர்களுக்கு ஒரு நிறத்திலும் பிறருக்கு சாதாரண ரெகுலர் நிறத்திலும் பாஸ்போர்ட்டுகளை பிரிண்ட் செய்ய முடிவெடுத்துள்ளது. புதிய நிறம், ஆரஞ்சாக இருக்கலாம்.
தொகுப்பு: கா.சி.வின்சென்ட்
நன்றி: முத்தாரம்