வாயில் உரித்து வைத்த பனானா!



Image result for banana




ஆரஞ்சு திருடிய கூட்டம் 

தங்கம், போதைப்பொருட்களை திருடுபவர்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஆரஞ்சை திருடிக்கொண்டு தலைதெறிக்க ஓடி போலீசில் மாட்டியவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஸ்பெயினின் செவில்லே பகுதியில் போலீஸ் ரோந்து சென்றார்கள். அப்போது போலீசாரைப் பார்த்ததும் இரண்டு கார்களும் அதைத் தொடர்ந்து ஒரு வேனும் பம்மி பயந்து வேறுவழியில் பாய்ந்து சென்றன. ஆகா சிக்கிருச்சி இரை என போலீஸ் சேஸ் செய்து பிடித்தனர். காரைத்திறந்தால் கொட்டியது 4 டன்கள் ஆரஞ்சு. கர்மோனா பகுதியிலிருந்து ஆரஞ்சு பழங்களை ஐந்து பேர்கொண்ட டீம் அபேஸ் செய்து கடத்தியிருப்பது செவிட்டில் நான்கு கொடுத்து என்கொயரி செய்ததில் தெரியவந்திருக்கிறது. கார் முழுக்க ஆரஞ்சு கொட்டிக்கிடக்கும்  போட்டோ இணையத்தில் செம ஹிட்.  


2
செக்யூரிட்டி வாயில் பனானா!

பணத்தை அடிக்க  திருடர்கள் போடும் பிளான்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஷாக் என்றாலும் பலரையும் சிரிக்க வைத்துவிடும். பெங்களூருவில் நடந்த பனானா கொள்கை சம்பவம் அந்தரகம்.

பெங்களூருவில் நானாபாரதி பகுதியிலுள்ள வங்கி ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்ய வந்த ஏஜன்சி ஊழியர் இருவரும், ட்ரைவரோடு சேர்ந்து 90 லட்சத்தை அபேஸ் செய்து ஓடிவிட்டனர். இத்தனை களேபரத்திற்கும் நடுவில் மாட்டிக்கொண்டவர் மூவருக்கும் பனானா வாங்கச்சென்ற செக்யூரிட்டி நடராஜ்தான்.

பணத்தை லபக்க ஸ்கெட்ச் போட்ட ஊழியர்களும், ட்ரைவரும் செக்யூரிட்டிக்கு டேக்கா கொடுக்க சிம்பிள் வழியைத் தேடினர். வாழைப்பழம் மனதில் தோன்ற, செக்யூரிட்டியை வாழைப்பழம் வாங்க அனுப்பிவிட்டு பணத்துடன் சாவகாசமாக எஸ்கேப்பாகிவிட்டனர். உடனே சுதாரித்த நடராஜ், வாங்கிவந்த பனானாவைக்கூட உரித்து சாப்பிடாமல் பேங்க் மேனேஜர் ரகுநாத்துக்கு போன் பண்ணிச்சொல்ல, விவகாரம் தீப்பிடித்தது. தற்போது செக்போஸ்டில் கொள்ளையர்களுக்காக போலீஸ் வெயிட்டிங்கில் உள்ளனர்.

3
குப்பையில் கரன்சி!

ஒரு ரூபாயை கீழே மிஸ் செய்தாலே பதறி கன்னத்தில் போட்டுக்கொள்ளும் ஜிஎஸ்டி யுகத்தில், பனிரெண்டு லட்சத்தை குப்பையில் போடும் சீனரின் தில் உங்களுக்கு உண்டா?

சீனாவின் லையோனிங் பகுதியைச் சேர்ந்த வாங்  வீட்டில் குப்பைத்தொட்டியில் போட குப்பை பேக் ஒன்றையும் வங்கியில் கட்ட கரன்சி பேக் என இரு பிளாஸ்டிக் பேக்குகளை வைத்திருந்தார். பழையன கழிதல் இன்றே இப்பொழுதே ஆவேசமாகிய வாங்  குப்பை என நினைத்து கரன்சி பேக்கை தூக்கி குப்பைத்தொட்டியில் கடாசினார். வீடு வந்த பின்னர், வங்கியில் செலுத்த வைத்திருந்த கரன்சி பேக்கை வீட்டில் தேடினால் கிடைத்தது குப்பை பேக் மட்டும்தான். ஐய்யய்யோ என பதறி போலீசில் புகார் கொடுத்தார். கரன்சி பேக்கை டஸ்ட்பின்னிலிருந்து எடுத்த பெண் அதனை வாங்கிடம் திருப்பிக்கொடுத்து ரூ.20 ஆயிரம் வெகுமதி பெற்றுவிட்டார்

தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்