"விவசாயிகளின் தற்கொலை இருமடங்கு ஆகியுள்ளது"
முத்தாரம் mini
ராஷ்ட்ரிய கிசான்
மகாசங்கம் எப்போது தோன்றியது?
சண்டிகரில் அரசின்
நிலச்சீர்திருத்த மசோதாவுக்கு எதிராக திரண்ட அறுபது விவசாயங்கள் இணைந்து கிசான் ஏக்தா
என ஒரு அமைப்பானது.
ஹரிஷ் சௌகான் தலைமையில் பெங்களூரு, சிம்லா என மாநாடு
நடந்தது. கமிஷன்களால் ஏமாற்றப்பட்டபோதும் நாங்கள் அமைதியாக இருந்தோம்.2019
தேர்தல் எங்களைப் பற்றி உலகுக்கு சொல்லும்.
உங்களது கோரிக்கைகள்
என்ன?
கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச
உத்தரவாத விலை அதிகரிப்பு ஆகியவையே.
கடந்தாண்டு செய்த
போராட்டங்களைப் பற்றிக் கூறுங்கள்.
2017 ஆம்
ஆண்டு ஜனவரி 10-12 ஆகிய நாட்களில் போபாலில் போராட்டம் நடத்தினோம்.
22 மாநிலங்களில் 290 தேசிய ஹைவேகளில் போராடுவதாக
பிளான். மக்களுக்காக அதனை விலக்கிக்கொண்டு, 9-15 தேதிகளில் ஜெயில் பாரோ அந்தோலன் திட்டப்படி 45 ஆயிரம்
விவசாயிகள் சுதந்திர தினங்களில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். இனி டெல்லியில் பெரியளவு போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
விவசாயிகளின் தற்கொலை
அதிகரித்திருக்கிறதா?
மோடியில் ஆட்சியில்
மட்டும் விவசாயிகளின் தற்கொலை 43% அதிகரித்துள்ளது. ஆனால் இது குறைவு. மாநில அரசுகள் விவசாயிகளின் தற்கொலைகளை மறைத்துவிட்டன. தற்போதைய எண்ணிக்கையை விட இருமடங்கு தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது என்பதே உண்மை.
-சிவ்சங்கர் சர்மா, பொதுசெயலாளர் ராஷ்ட்ரிய கிசான் மஸ்தூர் சங்கம்
தொகுப்பு: ச.அன்பரசு, கா.சி.வின்சென்ட்
நன்றி: முத்தாரம்