சூப்பர் விமானங்கள்!
சூப்பர் விமானங்கள்!
F-35 Lightning II
அமெரிக்க ராணுவத்தின்
அடுத்த ஜெனரேஷன் விமானம்.
ஒற்றை சீட், ஒரே எஞ்சின் என சிம்பிளாய் ஆயுதங்களை
நிறைத்து தாக்கும் விமானங்கள் இவை. மணிக்கு 1,930 கி.மீ வேகம் பாயும் திறன் கொண்டது.
Su-27 Flanker
சோவியத் ரஷ்யாவின்
பெருமைமிக்க தயாரிப்பு.
1985 ஆம் ஆண்டு விமானப்படையில் இணைந்தது என்றாலும் 1977 ஆம் ஆண்டே வானில் பயணிக்க தொடங்கிவிட்டது. மணிக்கு
2,500 கி.மீ வேகத்தில் பயணிக்க கூடியது.
F-111 Aardvark
ஜெனரல் டைனமிக்
நிறுவனத்தின்
1960 ஆம் ஆண்டு தயாரிப்பு. இருவர் பயணிக்கும் விமானம்,
1967 இல் ராணுவத்தில் இணைந்தது. மணிக்கு
2,655 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது.
வியட்நாம் போரில் அதிகம் பயன்பட்ட விமானம் இது.
F-15 Eagle
1976 ஆம்
ஆண்டு அமெரிக்க ராணுவ சர்வீஸில் என்ட்ரியான இவ்விமானத்தின் டிசைன், மெக்டொனால் டக்ளஸ். மணிக்கு 2,655 கி.மீ வேகத்தில் இயங்கிய சக்சஸ் விமானம் இது.
ஜப்பான், சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் விற்பனை செய்யப்பட்ட விமானமும் கூட.
தொகுப்பு: கோமாளிமேடை டீம்
நன்றி:முத்தாரம்