இடுகைகள்

அவதானிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொலை வழக்குகளைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவும் பல்கலைக்கழக மாணவன்! டோன்ட் கால் இட்ஸ் எ மிஸ்ட்ரி!

படம்
  டோன்ட் கால் இட்ஸ் எ மிஸ்ட்ரி ஜப்பான் டிவி தொடர் சீசன் 1 இந்த டிவி தொடர் முழுக்க உளவியல் தொடர்பானது. குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவர் எப்படி உளவியல் கோட்பாடுகளை பயன்படுத்தி வெற்றி பெறுகிறார் என்பதை பல்வேறு வழக்குச் சம்பவங்கள் வழியாக விளக்குகிறது. அதிரடியான திருப்பங்கள், துப்பாக்கித் தோட்டாக்கள் என்று தொடரில் ஏதுமில்லை. அனைத்தும் நிதானமாக நடைபெறுகிறது. அதை பல்கலைக்கழக மாணவர் டோட்டனோ குன் கண்டுபிடிக்கிறார். பல்கலைக்கழகத்தில் படிக்கும் டோட்டனோ குன், சமூகத்தின் விதிகளுக்கு அதிகம் பொருந்தாத ஆள். அகவயமானவர் என்பதால், நூல்களை வாசிப்பது, பிடித்த உணவுகளை சமைத்து ரசித்து சாப்பிடுவது, ஓவியக் கண்காட்சிகளுக்கு செல்வது என வாழ்ந்து வருகிறார். அவருக்கு நண்பர்களே கிடையாது. பெண் தோழியும் இல்லை. இப்படி வாழ்பவர் வாழ்க்கையில் கொலை வழக்கு குற்றச்சாட்டு வருகிறது. ஒருநாள் தனது. அறையில் சமைத்து சாப்பிடத் தயாரானவரை காவல்துறையினர் வந்து அவரது பல்கலையில் படிக்கும் வசதியான மாணவரை கொலை செய்துவிட்ட குற்றத்திற்காக கைது செய்கிறார்கள். முறையான அரஸ்ட் வாரண்ட கூட கிடையாது. கூட்டிபோய் மிரட்டி அவரை குற்றவாளி என