இடுகைகள்

கணவன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொலைக்குற்றவாளியாக்கப்பட்ட தங்கையின் கணவரைக் காப்பாற்ற நாயகன் செய்யும் அசகாய செயல்கள்!

படம்
  மாநகரிலோ மாயகாடு சிரஞ்சீவி, விஜயசாந்தி  சிரஞ்சீவி ஹைதராபாத்தில் சிறியளவு பிக்பாக்கெட், பணத்தை திருடும் மனிதராக வாழ்கிறார். இவருக்கென தனி திருட்டு நண்பர்கள் குழுவே உள்ளது. அவர்களுக்கு வேலை சொல்லி திருட்டை நடத்துவது சிரஞ்சீவிதான். இப்படியான அவரது வாழ்க்கையில் முக்கியமான நோக்கம், தங்கைக்கு திருமணம் செய்து வைப்பதுதான். தங்கை கிராமத்தில் வாழ்கிறாள். இந்த நிலையில் அவளுக்கு திருமணம் நடந்திருப்பதும், மாப்பிள்ளை ஹைதராபாத்திற்கு வந்திருப்பதாகவும் கிராமத்து மனிதர்கள் மூலம் தகவல் கிடைக்கிறது. ஆனால் சிரஞ்சீவி செய்யும் தவறான பொய்சாட்சியால் மாப்பிள்ளை சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை மீட்டு உண்மையை வெளியே கொண்டு வருகிறார். அது என்ன உண்மை என்பதே கதை.  படத்தில் நடக்கும் கொலை முயற்சி என்னவென்பதை பார்வையாளர்கள் முன்னமே அறிந்தாலும் அதில் உள்ள பாத்திரங்கள் அறிவதில்லை.  போலீஸ் அதிகாரி, பாசத்தால் ஈர்க்கப்பட்டு தனது கடமை, பொறுப்பை துறப்பதுதான் முக்கியமான திருப்புமுனை. ஆனாலும் கூட அவர் தான் பிடித்து வைத்திருப்பவர்களை இம்சிப்பதில்லை. தனது மகளின் வாழ்க்கையைக் காக்க நினைக்கிறார். ஆனால் அது சட்டவிரோத கும்பலுக்கு

சூடும் குளிரும் தாண்டிய பௌதிகம்! - கவிஞர் தாமரை

படம்
  எரிமலைக் குழம்பையும் துருவப் பனியையும் பிசைந்து போட்டுவிட்டு கேள்வியென்ன? சூடும் குளிரும் தாண்டிய பௌதிகம்   நான் வெள்ளிவாசி நீ செவ்வாயிலிருந்து இறங்கியிருக்கிறாய் இடைதூரத்தை கடக்க முயல்கிறோம் நான் கண்ணீராலும் கனத்த   வார்த்தைகளாலும் நீ அதிகாரத்தாலும் அடர்ந்த மீசையாலும்   சாலையின் ஒரு திசையிலும் எதிர் திசையிலும் ஒரே நேரத்தில் நடந்துகொண்டிருக்கிறோம் கைகள் கோர்த்தும் விலகியும்… -தாமரை படம் - பிக்ஸாபே காப்புரிமை - குமுதம்  

காணாமல் போன மனைவியை தேடும் கணவன்! - புஷ்பக விமானம் - தெலுங்கு

படம்
  புஷ்பக விமானம் - தெலுங்கு புஷ்பக விமானம் தமோதர் ராம் மிர்யாலா ஆனந்த் தேவர் கொண்டா, கீத் சைனி, ஷான்வி மேகனா புஷ்பக விமானம்- தெலுங்கு அரசு பள்ளி ஆசிரியர், இளைஞர். இவருக்கு கிராமத்தில் பெண் பார்த்து நிச்சயம் செயகிறார்கள். அங்குதான் கல்யாணம் நடக்கிறது. இவரும் சங்கோஜமாக பெண்ணிடம் பேசுகிறார். அவரும் தயக்கத்துடன் இவருடன் பேசுகிறார். கல்யாணம் ஆன பிறகு ஹைதராபாத் வருகிறார்கள். இங்கு வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். ஆனால் சில நாட்களிலேயே ஆசிரியரின் மனைவி காணாமல் போகிறார். இதைப் பற்றி பிறரிடம் சொன்னால், அவமானம் என நாயகன் தானே தேடத் தொடங்குகிறார். மிக நெருக்கமான நண்பனிடம் இதைப்பற்றி சொல்லுகிறார்.  புதிதாக மணமான ஜோடி என்பதால் அவர்களைப் பார்க்க வரும் பிற ஆசிரியர்கள் என அனைவரையுமே நாயகன் சமாளிக்க போலி மனைவியை ஏற்பாடு செய்கிறார். இதெல்லாம் ஒரு கட்டம்தான். பிறகு, அவரின் மனைவி தலையில் அடிபட்டு இறந்துபோனார் என்ற செய்தி டிவியில் வர அனைத்துமே மாறுகிறது. எஸ் ஐ ரங்கம் என்ற போலீஸ்காரர், தொடக்கம் முதலே வழக்கை நாயகன்தான் கொலை செய்துவிட்டு நாடகம் ஆடுகிறான் என்ற கோணத்தில் விசாரிக்கிறார். இதனால் நாயகன் செய்த கௌரவமா