இந்தியாவை விட்டு தப்பித்து ஓடும் மக்கள்!
இந்தியாவை விட்டு தப்பித்து ஓடும் மக்கள்! எதற்காக ஓடுகிறார்கள்? எல்லாம் ஒரு ஜாண் வயித்துக்காகத்தான் அய்யா. கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவிற்கு கள்ளத்தனமாக சென்று, தங்குவதற்கு அனுமதி பெற முடியாமல் காவல்துறையில் மாட்டிக்கொண்டவர்களின் எண்ணிக்கை 96, 917. கொரோனா லாக்டவுன் சீரானவுடன் எவனாவது இந்த நாட்டில் இருப்பானா என மக்கள் தலைதெறிக்க மேற்கு நாடுகளைப் பார்த்து ஓட்டம் பிடித்திருக்கிறார்கள். 7,25, 000 இந்தியார்கள் அனுமதி வாங்காமல் அமெரிக்கா, மெக்சிகோ, எல் சால்வடோர் எல்லையில் சுற்றித் திரிந்து வருகிறார்கள் என ப்யூ நிறுவனம் ஆய்வில் தெரிவித்துள்ளது. பைத்தியக்காரர்களின் கையில் தீப்பந்தத்தைக் கொடுத்துவிட்டு உயிருக்கு தப்பி ஓடுவது என்ன புத்திசாலித்தனமோ? அமெரிக்காவில் அகதிகளைப் பற்றி எப்போது தேடுதல் நடத்தினாலும் அதில் மாட்டிக்கொள்பவர்களில் இந்தியர்களே அதிகம். இவர்கள் அமெரிக்காவில் ஆதார அடையாள அட்டைகள் இல்லாமலே வாழ்ந்து வருகிறார்கள். எல்லைகளிலும் இப்படித்தான் மக்கள் உள்ளே நுழைய முயன்று வருகிறார்கள். காசு கொடுத்தால் சட்டவிரோத பாதை வழியாக ஏஜண்டுகளே மேற்கு நாடுகளில் உள்ள...