இடுகைகள்

தொழில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதிய அமெரிக்க ஒன்றியம்

New America (முன்பு New America Foundation என்று அழைக்கப்பட்டது) என்பது அமெரிக்காவில் உள்ள ஒரு முக்கிய சிந்தனை அமைப்பு (think tank) ஆகும். இது 1999-ல் நிறுவப்பட்டது. முக்கிய தகவல்கள் நிறுவப்பட்ட ஆண்டு : 1999 நிறுவனர்கள் : Ted Halstead, Sherle Schwenninger, Michael Lind மற்றும் Walter Russell Mead. தலைமையிடம் : வாஷிங்டன், டி.சி. (அதிகமாக); ஒக்லாண்ட், கலிபோர்னியா மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களிலும் அலுவலகங்கள் உள்ளன. வகை : Nonprofit, public policy think tank. தன்னை nonpartisan (கட்சி சார்பற்றது) என்று கூறினாலும், பல ஆதாரங்கள் இதை liberal அல்லது left-leaning (இடதுசாரி சார்புள்ளது) என்று விவரிக்கின்றன. நோக்கம் (Mission) இதன் தற்போதைய நோக்கம்: “Generate big ideas and bold solutions for a new America” (ஒரு புதிய அமெரிக்காவுக்கான பெரிய யோசனைகளையும் தைரியமான தீர்வுகளையும் உருவாக்குவது). இது அமெரிக்காவின் அடிப்படை அமைப்புகளை (கல்வி, வேலை, ஜனநாயகம், குடும்ப நலன், பாதுகாப்பு, தொழில்நுட்பம்) அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விரைவான தொழில்நுட்ப மற்றும் சமூக மாற்ற...

1 சதவீத ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பு என்ன செய்துவிடும்?

தமிழ்நாட்டின் GST வருவாய் 1% குறைந்துள்ளது என்பது ஒரு தனிமையான எண்ணிக்கை மட்டுமல்ல, மாநிலத்தின் நிதி நிலைமையில் ஒரு முக்கியமான எச்சரிக்கை சமிக்ஞையாகும். தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாயில் (Own Tax Revenue) சுமார் **38% பங்கு மாநில GST (SGST)** மூலமாகவே வருகிறது. எனவே, இந்த வருவாய் குறைவது மாநில அரசின் மொத்த நிதி திட்டமிடலையே பெரிதும் பாதிக்கும். ### 📊 தற்போதைய நிலை மற்றும் ஒப்பீடு 2026 ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டின் GST வசூல் ₹10,189 கோடியாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் (2025 ஆகஸ்ட்) இருந்த ₹10,329 கோடியுடன் ஒப்பிடும்போது சுமார் **1% சரிவு** ஆகும். இந்த சரிவை மிகவும் கவனிக்க வேண்டியது ஏனெனில், அதே காலகட்டத்தில் ஒட்டுமொத்த இந்தியாவின் GST வருவாய் **9% வளர்ச்சி** அடைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டுடன் போட்டியிடும் பிற மாநிலங்களின் வளர்ச்சி விகிதங்கள் இதோடு ஒப்பிடும்போது மிகவும் வலுவாக உள்ளன. ### 🔍 இந்தச் சரிவின் தாக்கங்கள் என்ன? இந்த வருவாய் சரிவு, மாநில அரசை மூன்று முக்கியமான நிதிச் சவால்களில் தள்ளும் வாய்ப்பு அதிகம்: *   **வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி பற்றாக்க...

கிழக்கு மேற்கு ஒத்துழைப்பு

14வது ஃபுஜியான்-நிங்சியா உதவிக் குழு, தொடர்ந்து தொழில்நுட்ப ஆதரவை வழங்க ஒரு கிரீன்ஹவுஸை மீண்டும் பார்வையிடுகிறது கிழக்கு-மேற்கு ஒத்துழைப்பிற்குப் பின்னால் உள்ள வருமானத் தரவுகள் நிலைத்து நிற்கின்றன; இந்த மாதிரியானது சந்தையிடம் ஒப்படைக்கப்படும்போது உயிர்வாழுமா என்பதில் அறிஞர்கள் மிகவும் குறைவான நம்பிக்கை கொண்டுள்ளனர் பெருநகரங்கள் வளமான கிழக்கு மாகாணங்களை ஏழ்மையான மேற்கு மாகாணங்களுடன் இணைக்கத் தொடங்கி 30 ஆண்டுகள் ஆகின்றன. இப்போதைய இலக்கு, நிதியை மேற்கு நோக்கி நகர்த்துவதில் இருந்து, சுயாதீனமாக நிற்கக்கூடிய தொழில்களைக் கட்டமைப்பதற்கு மாறுவதாகும்: தேவை-உந்தப்பட்ட, உள்நாட்டு ஊழியர்களைக் கொண்ட, மற்றும் அவற்றை அமைப்பதற்கு நிதி எவ்வளவு விரைவாக வழங்கப்பட்டது என்பதைக் காட்டிலும் சந்தைகளால் மதிப்பிடப்படுபவை. சீனா கொள்கை முன்னணிகளைப் பகிரவும் மிகப் பல திட்டங்கள் இன்னும் விலைகள், கீழ்நிலை வாங்குபவர்கள் மற்றும் நுகர்வோரை விட நிர்வாக ஆதரவையே சார்ந்துள்ளன, மேலும் அந்த ஆதரவு முடிவுக்கு வந்தவுடன் உயிர்வாழ போராடுகின்றன, என்று குவாங்சோ பல்கலைக்கழக கிராமப்புற மறுமலர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஜீ ஷிஜு எச்சர...

கொங்கு பகுதி, தொழில்முனைவோருக்கான வழிகாட்டி! - மைல்கல்

படம்
 மைல்கல் த செ ஞானவேல் தரு மீடியா வெளியீடு விலை ரூ.400 தொடக்கத்தில் நன்றாக வந்த இந்து தமிழ்திசை பத்திரிக்கை இப்போது ஆர்எஸ்எஸின் ஆர்கனைசர் ஆகிவிட்டது என்று பேச்சு. அதில் வெளியான கொங்கே முழங்கு என்ற தொடரே நூலாக மாறியிருக்கிறது. இந்த நூலில் மொத்தம் இருபத்தைந்து தொழிலதிபர்கள் பேசப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள், அனைவருமே தமிழ்நாட்டின் மேற்குப்பகுதியைச் சேர்ந்தவர்கள். கொங்கு மண்டலம் என்று கூறுகிறார்களே அந்த நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டு தொழிலதிபர்கள் பெரும்பாலும் தங்களுடைய தொழில் ரகசியங்கள், போராட்டம், நிறுவனத்தின் லாபம், கிளைகளை பத்திரிகைகளுக்கு பகிர்ந்தது கிடையாது. அதாவது முன்னர், வரி பிரச்னை வந்துவிடுமோ என நினைத்திருக்கலாம். ஆனால், இந்த நூலில் தயங்கவில்லை. பல்வேறு விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள். இதில் நான் வாசித்தது எட்டு தொழிலதிபர்களை மட்டும்தான். மற்றவர்களை பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஏனெனில் மருத்துவமனை, ஆயத்த ஆடை ஆலைகளை நடத்துவது ஒப்பீட்டளவில் பெரிய சாகசம் என்று கூறமுடியாது. அதில் சிரமங்கள் உண்டு. ஆனால், பழம், உணவு விற்பது அடிப்படையில் கடினமான ஒன்று. ...

பிடித்த விஷயம் பின்னாளில் தொழிலாக மாறியது!

படம்
  அன்பரசு சண்முகம் மொழிபெயர்ப்பாளர் பிழைப்புக்கான தொழில்! மொழிபெயர்ப்பை பாடமாக பயின்றீர்களா? அப்படி பயின்றிருந்தாலும் சிறப்புதான். எனக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பு, தமிழாக்கம் ஆகியவற்றை நான் சுயமாக கற்றவன். தாளில் எழுதி அதில் உள்ள தவறுகளைக் கண்டுபிடித்து மீண்டும் அத்தவறு நடக்காமல் பார்த்துக்கொண்டுதான் மின்னூல்களை எழுதி வருகிறேன். சுயமாக மொழிபெயர்ப்பை கற்கும் முயற்சியில் வெளியில் இருந்தும் சிலர் உதவி புரிந்தனர். என்னுடைய மொழிபெயர்ப்புகள் புனைவல்ல(சிறுகதை, கவிதை, நாவல்). கட்டுரைகள் சார்ந்தது. அபுனைவு. அதுவே பின்னாளில் பிழைப்புக்கான தொழிலானது. இது பலமா, பலவீனமா என்றால் இரண்டுமே உள்ளது.  இதற்கான தொடக்கம் எது? நெ.2 இதழான குமுதம் வார இதழ்தான். இளமை புதுமை முதன்மை என ஏகத்துக்கும் புதுமை செய்யும் இதழ் இன்றைக்கு வாராவாரம் பக்க எண்களை மட்டும் மாற்றிப்போடும் நிலைக்கு வந்துவிட்டது. ஆனால், அன்றைக்கு வார இதழ் தனது கதைகள், சிறுகதைகள், பேட்டி என அனைத்திலும் அவர்களின் கேப்ஷனுக்கு ஏற்றாற்போலவே புதுமையாக இருந்தது.  குமுதம் இதழின் அட்டையைப் பார்த்த...

டாடா - தேசத்தை வளர்ந்த நிறுவனத்தின் கதை - ஆர்எம் லாலா தமிழில் பிஆர் மகாதேவன்

 மறுவாசிப்பு நூல்கள் டாடா - நிலையான செல்வம்  ஆங்கிலத்தில் ஆர்எம் லாலா தமிழில் பிஆர் மகாதேவன் கிழக்கு பதிப்பகம் மூல நூல் -கிரியேஷன்ஸ் ஆப் வெல்த் வணிக நூல் டாடா குழுமம், நூறாண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் இயங்கி வருகிறது. அதாவது அதன் குழுமத்தில் உள்ள பல நிறுவனங்கள் நூற்றாண்டுகளாக இந்தியாவில் தொழிலை நடத்தி வருகின்றன. பார்சி இனத்தவர்களே டாடா குழுமத்தின் இயக்குநர்கள், தலைவர்கள்.  365 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை ஒருவர் வாசிக்கும்போது முதல்முறையிலேயே டாடா குழுமத்தினர் எந்தளவு உயரிய கொள்கை கொண்டு உழைக்கிறார்கள், வணிகம் செய்கிறார்கள் என்ற எண்ணத்திற்கு ஆட்படுவார்கள். நூலை எழுதிய நூலாசிரியர் லாலாவின் நோக்கமும் கூட அதுதான். ஆனால், அவர் டாடா நிறுவனத்தில் வேலையைப் பெற்றுள்ளதும், இந்த நூலுக்கு ரத்தன் டாடா உரை எழுதிக் கொடுத்ததும் நூலை சற்று பின்னுக்கிழுப்பது போல தோன்றுகிறது. இதை நூலை வாசிப்பவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.   ஒரு பத்திரிகையாளராக லாலா நூலை எழுதி இருந்தால் அந்த நூலில் டாடா குழுமத்தில் உள்ள பிரச்னைகள், செயல்பாட்டில் உள்ள தவறுகள், அவர்கள் மீது மக்கள் கூறிய புகார்கள், ...

வேலை சார்ந்த மூடநம்பிக்கைகளை ஒழித்துக்கட்டி வெற்றி பெறுவது எப்படி?

படம்
  ரீவொர்க் 37 சிக்னல்ஸ் நிறுவனர்கள் சுயமுன்னேற்ற நூல் ஒரு தொழிலை எப்படி நடத்துவது, அதற்கான தகுதிகள், விளம்பரம் செய்வது, வாடிக்கையாளர்களை எப்படி ஈர்ப்பது என ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் சுவாரசியமாக கூறியிருக்கிற நூல்தான் ரீவொர்க்.  நூலில் நிறைய மூடநம்பிக்கைகளை உடைத்து எறிந்திருக்கிறார்கள். பொதுவாக நம்பும் பழக்க வழக்கங்கள்தான் அவை. குறிப்பாக, நிறுவனத்தை பெரிய நிறுவனமாக்கவேண்டும் என்ற கருத்து. அப்படி செய்யும்போது என்னென்ன பிரச்னைகளை வருகிறது என சுருக்கமாக விவரித்த பாங்கு அருமை. அடுத்து, திட்டமிடுதல். அப்படி திட்டமிடுதல் கடந்த காலத்தில்தான் இருக்கும். நடைமுறைக்கு எதிர்காலத்தில் வரும் பிரச்னைகளை தீர்க்க உதவாது என அழகாக சுருக்கமாக விளக்கியிருக்கிறார்கள்.  மென்பொருளை உருவாக்கும்போது உணர்ந்த அனுபவங்களையே நூலாக எழுதியிருக்கிறார்கள். நூல்களை எழுத வேண்டுமென எழுதவில்லை என்பது இன்னும் ஆச்சரியம் தருகிறது. இதுபற்றி அவர்களே தனி அத்தியாயம் ஒன்றை எழுதி விளக்கியுள்ளனர். வாய்ப்பு கிடைப்போர் படியுங்கள். சுவாரசியமாக இருக்கும்.  பொதுவாக தொழில் சார்ந்த அறிவுரைகளை படித்தவர்கள், இந்த நூலை ...

வன்முறையைப் பயன்படுத்தி மக்களை பணிய வைக்கும் சாமர்த்தியம்!

படம்
    மேலாதிக்க சாதியினர், கையில் பத்திரிகைகளை கொண்டிருக்கிறார்கள். டிவி சேனல்களை நடத்துகிறார்கள். அரசிடம் கைக்கூலிகளாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் மக்கள் அதிகாரத்தை வலியுறுத்துபவர்களை வெடிகுண்டு வீசுபவர்கள், ஒழுங்கின்மை கொண்டவர்கள், பேரிடரை விளைவிப்பவர்கள் என வசைபாடி தவறான கருத்துகளை முன்முடிவுகளை ஏற்படுத்துகிறார்கள். முதலாளித்துவத்தைக் கொண்டுள்ள அரசு, தன்னைக் காத்துக்கொள்ள பேரிடரை ஏற்படுத்துகிறது. வன்முறையை கைக்கொள்கிறது. மக்கள் அதிகாரம், இதற்கு எதிரான இயல்பைக் கொண்டுள்ளது. அரசு இல்லாத ஒழுங்கு, வன்முறை இல்லாத அமைதி என இரண்டையும் உருவாக்க முனைகிறது. ஜனநாயகவாதி, முடியரசு விசுவாசி, சோசலிசவாதி, போல்ஸ்விக், மக்கள் அதிகாரர்கள் என எவரும் கூட வெடிகுண்டுகளை வீசலாம். வன்முறையைக் கையில் எடுக்கலாம். இன்றைய சூழலில் வன்முறை ஒருவரின் கையில் திணிக்கப்படுகிறது. அதை மக்கள் எவரும் வேண்டுமென தேர்ந்தெடுக்கவில்லை. ப்ரூடஸ் தனது நண்பனான அரசன் சீசரைக் கொன்றான். அவனுக்கு தனது நண்பன் குடியரசுக்கு துரோகம் செய்துவிடுவானோ என்ற பயம் இருந்தது. ப்ரூடஸ் நண்பனை விட ரோமை அதிகம் நேசித்தான் என்று கூறமுடியாது. வி...

விலை உயர்வெனும் பற்றியெரியும் காட்டில் பட்டாம்பூச்சி!

படம்
        3 பாயும் பொருளாதாரம் விலை உயர்வெனும் பற்றியெரியும் காட்டில் பட்டாம்பூச்சி! பனிரெண்டு லட்சம் கோடி ரூபாயை இந்திய வங்கிகள் தொழிலதிபர்களுக்கு கொடுத்து அவற்றை வசூலிக்க முடியவில்லை. அணுக்க முதலாளித்துவ ஒன்றிய அரசு, எப்போதும்போல கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்றால் அத்துறை சார்ந்த முன்னேற்றம் என்று பொருள் கொள்ளலாம். கொரோனா காலத்தில் கூட லாபம் சம்பாதித்த தொழிலதிபர்களுக்கு எதற்கு கடன் தள்ளுபடி? இப்படி அரசியல்வாதிகளின் உதவிகளைப் பெற்று வரி கட்டாமல் சம்பாதித்தாலும் கூட லஞ்சம் வழங்குவது, பங்கு விலையை அதீதமாக காட்டுவது என இந்திய தொழிலதிபர்கள் சர்க்கஸ் காட்டி வருகிறார்கள். சரி சந்தைக்கு செல்வோம். சந்தையில் மக்கள் பொருட்களை வேண்டும் என கோரவில்லை என்றாலும் கூட அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வணிகர்கள் வாங்கி வைத்து விற்பார்கள். சந்தை அதன் இயல்பில் இயங்கி வரும் என பொருளாதார வல்லுநர் ஆடம் ஸ்மித் கூறியுள்ளார். இவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். காலம் பதினெட்டாம் நூற்றாண்டு. சந்தை இயங்குவது கண்ணுக்குத் தெரியாத கரம் மூலம் என...

சாதனைப் பெண்கள் - பார்ச்சூன் ஆசியா 2024 பட்டியல்

படம்
    சாதனைப் பெண்கள் - பார்ச்சூன் ஆசியா 2024 பட்டியல் சினா சங் இயக்குநர், காகாவோ தென்கொரியா தென்கொரியாவில் இயங்கி வரும் காகாவோ ஒரு தொழில்நுட்ப நிறுவனம். இந்த நிறுவனம், இசை, போக்குவரத்து, வெப் காமிக்ஸ், பணம் செலுத்தும் வசதி, குறுஞ்செய்தி என பலவற்றையும் ஒன்றாக இணைத்து காகாவோ டாக் என்ற ஆப் வழியாக வழங்குகிறது. இந்த நிறுவனத்தில் இயக்குநராக சினா பதவியேற்றது நடப்பாண்டு மார்ச் மாதம்தான். ஆப்பிற்கு பயனர்களாக 44 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இவருக்கு முன்னிருந்த தலைவரால் ஏற்பட்ட பங்கு சந்தை முறைகேடு பிரச்னையை சமாளித்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். டாபனி டெகாஜாரேன்விகுல் தலைவர், இயக்குநர், பெர்லி ஜக்கர் தாய்லாந்து தினசரி பயன்பாட்டுப்பொருட்கள், உடல்நலம், பேக்கேஜிங் சார்ந்த துறைகளில் பெர்லி செயல்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் டாபனி இயக்குநராக பொறுப்பேற்றார். டாபனியின் தந்தை சாரியோன் சிரிவதனபக்தி. பெரும் பணக்காரர். டாபனியின் கணவர் அஸ்வின், பெர்லியின் இயக்குநராக செயல்பட்டு வந்தார். அந்தப்பதவி இப்போது அவரது மனைவிக்கு வந்துள்ளது. தாய்லாந்தில் உள்ள பிக் சி எனும் பேரங்காடி கடைகளை பெர்...

ஆசியாவில் வலிமையான தொழிலதிபர் பெண்கள் - பார்ச்சூன் ஆசியா 2024

படம்
             powerful womens asia fortune asia 2024(not included india) siyun chen bristol myers squibb பிரிஸ்டல் நிறுவனத்தின் துணைத்தலைவர், பொது மேலாளராக இருக்கிறார் சென். இவர். 2011ஆம் ஆண்டு தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோவில் உள்ள மலைத்தொடரில் கணவருடன் மலையேற்றம் செய்ய முடிவெடுத்தார்.  அந்த செயல்பாடு இலக்கு, அதன் முக்கியத்துவம், கூட்டாளிகள் மீது வைக்கும் நம்பிக்கை, நெகிழ்வுத்தன்மை பற்றி புரியவைத்ததாக கூறுகிறார். அமெரிக்க நிறுவனமான பிரிஸ்டலின் ஆசிய வணிகம், சீனா ஆகியவற்றை சியுன் கவனித்து வருகிறார். இந்த பணிக்கு முன்னர் ஜிஎஸ்கே, நோவர்டிஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். sung suk suh cosmax தலைவர், துணை நிறுவனர் சங்கின் கணவர் கியுங்தான் காஸ்மேக்ஸ் நிறுவனத்தை 1992ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த நிறுவனம் பெண்களுக்கான அழகுசாதனப் பொருட்களை தயாரித்து விற்று வருகிறது. காஸ்மேக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா, சீனா, தென்கொரியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் தொழிற்சாலைகள் உண்டு. கடந்த ஆண்டு நிறுவனம், 1.3 பில்லியன் டாலர்களை லாபம் பார்த்துள்ளது. கலீஜா...

சமையலால் காதலில் ஒன்று கூடும் பால்ய கால நண்பர்கள்!

படம்
    ஃபார்ம் டு போர்க் டு லவ் ஆங்கிலம் யூட்யூப் ஆக்சன் காட்சிகள் இல்லாமல் உரையாடல்களை, முரண்களை மட்டும் கொண்ட ஆங்கில திரைப்படங்களை அமெரிக்காவில் தயாரித்து வருகிறார்கள். இவற்றில் சில படங்கள், இலவசமாக இணையத்தில் பார்க்க கிடைக்கிறது. அப்படி கிடைத்த படத்தில் ஒன்றுதான் இது. அலைஸ் மையர்ஸ், கிறிஸ்டியன் என இருவரும் சமையல் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். கிறிஸ்டியனின் சொந்த வாழ்க்கையில் பெரும் இழப்பை அவர் சந்திக்க, அலைஸை காதலித்தபோதும் ஏதும் சொல்லாமல் பிரிக்கிறார். அலைஸ் படித்து முடித்து அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹோட்டலில் வேலைக்கு சேர்கிறார். அங்கு அவருக்கு மேற்பார்வையாளராக உள்ள சமையல்காரருடன் காதல் உருவாகிறது. சூப்புகளை தயாரித்து தரும் வேலையை செய்து வருகிறார். அப்படியான சூழலில் அவருக்கு உணவுகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவராக இருக்க வெளிநாட்டில் இருந்து அழைப்பு வருகிறது. பிலிப்ஸ் குழுமம் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. அலைஸ் அங்கு செல்கிறாள். மிகப்பெரிய ஹோட்டலில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்குதான் பள்ளிகால தோழன், முன்னாள் காதலனான கிறிஸ்டியனை மீண்டும் சந்திக்கிறார். கிறிஸ்டியன் சமை...

தொழில்துறையில் சாதனை செய்யும் பெண் தொழிலதிபர்கள், அதிகாரிகள் - பார்ச்சூன் 2024

படம்
      ஆற்றல் வாய்ந்த பெண் தொழிலதிபர்கள் - பார்ச்சூன் 2024 கிரேஸ் சுவா இயக்குநர், ஃபேர்பிரைஸ் குழுமம் சிங்கப்பூர் grace chua fairprice group சுவா, குழுமத்தின் ஓன் பிராண்ட்ஸ் பிரிவின் இயக்குநராக உள்ளார். இந்த நிறுவனம், சிங்கப்பூரின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் சங்கிலித்தொடர் அமைப்பைக் கொண்டுள்ளது. ஓன் பிராண்ட்ஸ் என்பது, குறைந்த விலையிலான பொருட்களை விற்று வருகிறது. சுவா, குழுமத்தில் 2017ஆம் ஆண்டு இணைந்தார். அதற்கு முன்னால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திலும், கல்வி தொடர்பான ஸ்டார்ட்அப்பிலும் வேலை செய்திருக்கிறார். ஃபேர்பிரைஸ் குழுமம் தனது பொருட்களை பிலிப்பைன்ஸ் நாட்டில் விற்க திட்டமிட்டு வருகிறது. ஜெனிபர் வாங் சுயி ஃபென் நிதி தலைவர், மேக்சிஸ் மலேசியா jenifer wong chui fen maxix மலேசியாவிலுள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இதில் வணிக திட்டமிடல், நிதி மேலாண்மை ஆகிய பொறுப்புகளை வகிக்கிறார். தொலைத்தொடர்புத் துறையில் பதினேழு ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். நிதி நிர்வாகத்தில் இருபத்தெட்டு ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஜெனிபரின் வழிகாட்டுதலில் நிறுவனம் முந்தைய ஆண்டை விட அதிக...

பெண்களுக்கான தொழில், பெண்ணடிமைத்தனம், ஆண் மேலாதிக்கம் பற்றி கேள்வி கேட்கும் வரலாற்று சீனத்தொடர்!

படம்
        நியூ லைப் பிகின்ஸ் சீன தொடர் ஆறாவது இளவரசர், தனது துணைவியை அதிகாரப்பூர்வ மனைவியாக மாற்றிக்கொள்ள என்னென்ன செய்கிறார், அவரது துணைவியின் திறமைகள் எப்படி இளவரசரின் நிர்வாக பணிகளுக்கு உதவியாக உள்ளன என்பதே கதை. பொதுவான சீன தொடர்களில் ஆண்கள், பெண்களை காதலுக்கு சமையலுக்கு பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இந்த தொடரில் வரும் இளவரசர் பாத்திரம் தனது மனைவியை அவரது விருப்பத்திற்கு விட்டுவிடுகிறார். அவரது மனைவியும், கணவரின் அரசியல் விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. அதேசமயம், பெண்களுக்கான வேலை, சுயமரியாதை, முன்னேற்றம் என்பதில் தன் அம்மாவிடம் கற்றுக்கொண்டதை ஷின் மாகாணத்தில் செயல்படுத்துகிறார். இந்த கதை நடக்கும் காலகட்டத்தில் ஷின் மாகாணம், பிற ஒன்பது மாகாணங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அரசு. அன்றைய காலகட்டத்தில் பெண்களை சந்தைப்பொருளாக அரசியலில் பயன்படும் காய்களாக மக்கள் எண்ணினர். இதனால், பிற மாகாண மக்கள் தங்களது செல்வாக்கு, அதிகாரத்திற்காக இளம்பெண்களை மனைவி அந்தஸ்தில், அல்லது அதிகாரப்பூர்வ மணமின்றி துணைவியாக இருக்க அனுமதித்தனர். இது சமூகத்தில் உள்ள ஆண்களின் ...