இடுகைகள்

ஏ.கருணாகரன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலியின் லட்சியக் கனவுக்காக காதலை ஒத்திவைக்கும் காதலன்! - தொலி பிரேமா - ஏ.கருணாகரன்

படம்
  தொலி பிரேமா 1998 பாலு, அனுவை முதல் முறையாக பார்க்கும் காட்சி தொலி பிரேமா 1998 - இறுதிக்காட்சி  தொலி பிரேமா பவன் கல்யாண், கீர்த்தி ரெட்டி, அலி, வேணு, நாகேஷ் இயக்கம் ஏ.கருணாகரன் இசை தேவா பாலு என்ற படிப்பில் தேறாத இளைஞன் ஹார்வர்ட் பல்கலையில் சேரும் லட்சியத்துடன் படிக்கும் இளம்பெண்ணை காதலிக்கிறான். அவன் காதல் நிறைவேறியதா என்பதே கதை. படம், வெளிவந்த காலத்தில் அன்றைய இளைஞர்களிடையே பிரபலமாக இருந்த கோக், பைக் என பல்வேறு விஷயங்களை அடையாளப்படுத்தி எடுத்திருக்கிறார்கள். அதனால் படம் பார்க்கும்போது நிறைய பேருக்கு அவர்களின் இளமைக்காலம் நினைவுக்கு வரலாம். காதலே லட்சியம் என நினைக்கும் இளைஞர், ஆராய்ச்சிப் படிப்பே லட்சியம் என வாழும் இளம்பெண். இதுதான் இருவருக்குமான முரண்பாடு. பாலு, படத்தில் நாயகி சொன்னது போல உருப்பட்டு எதையும் சாதிக்கவில்லை. ஆனால் அவர் தனது காதலை இளம்பெண்ணிடம் சொல்லிவிடுகிறார். அவரின் பெரியப்பாவான நாகேஷ் எப்படி நிம்மதி அடைகிறாரோ அதே திருப்தியை படத்தை பார்க்கும் பார்வையாளர்களும் அடைகிறோம்.   காதலித்தால் கூட கல்யாணம் செய்துகொள்ள விரும்பினால் கூட பெண்ணின் கனவுக்கு குறுக்கே