இடுகைகள்

வலதுசாரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆட்சியைப் பிடிக்கும் இடதுசாரிகள்!

  லத்தீன் அமெரிக்க நாடுகள் பறக்கும் சிவப்புக்கொடி லத்தீன் அமெரிக்க நாடுகளில் மில்லினிய ஆண்டு தொடங்கி இடதுசாரி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வென்று வருகின்றன. இங்குள்ள நாடுகள் மெக்சிகோ, ஹோண்டுராஸ், கொலம்பியா, பிரேசில், பெரு, சிலி, பொலிவியா, அர்ஜென்டினா. மெக்சிகோ ஆண்ட்ரெஸ் மானுவேல் லோபெஸ் ஆப்ரோடர் 2018 போதைப்பொருட்களை ஒழிப்பதாக சொல்லி நாட்டின் அதிபரான இடது சாரித் தலைவர். இந்த வகையில் முதல்முறையாக அதிபரான முதல் இடதுசாரி இவரே. இருபது ஆண்டுகளாக இவரே மெக்சிகோவை ஆள்கிறார். அர்ஜென்டினா ஆல்பெர்டோ ஃபெர்னான்டெஸ்   2019 சற்று மையமான இடதுசாரி தலைவர். பொருளாதார சீரற்ற நிலையில் நாட்டின் தேர்தலில் போட்டியிட்டு கடுமையான போட்டியில்தான் வென்று அதிபரானார். பொலிவியா லூயிஸ் அர்சே 2020 மார்க்சியர். தற்போது அதிபராக உள்ளவர் முந்தைய காலத்தில் ஈவோ மொராலெஸ் ஆட்சிக்காலத்தில் பொருளாதாரத்தை உயர்த்திய பெருமைக்கு சொந்தக்காரர். சிலி கேப்ரியல் போரிக் 2021 36 வயதில் நாட்டின் அதிபரான சாதனைக்கு சொந்தக்காரர். நாட்டில் பணவீக்கம் அதிகரித்து ஒருவர் வாழவே அதிகம் செலவு செய்யும் நிலையை மாற்றுவதாக சொல்லி

சிபாரிசு ஏற்படுத்தும் சங்கடங்கள்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  3 13.8.2021 அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? முத்து செல்லக்குமார் போன்றவர்கள் திறமையானவர்களாக இருந்தால் கவலைப்படவே வேண்டாம். அவர்களுக்கான வாய்ப்பு கேட்காமலேயே அவர்களுக்கு கிடைக்கும். அதில் சாதித்து வெல்ல முடியும். நான் வேலை செய்யும் இதழின் ஆசிரியர் வலதுசாரி கருத்து கொண்டவர். இவர் போன்றவர்களிடம் திறமையைத் தாண்டி கவனமாக நடந்துகொள்வது அவசியம். எனக்கு வேலை சிபாரிசில் தான் கிடைத்தது. நான் பிறருக்கு சிபாரிசுகளை செய்வது கிடையாது. இதுவரையிலும் வேலை சிபாரிசுகள் பெரும் சங்கடங்களையே உருவாக்கியுள்ளது.   இப்போது முழங்கால் வழி மட்டுப்பட்டுள்ளது. இதனால் நடக்க முடிகிறது. உடல் பலவீனமாக இருப்பதை உணர்கிறேன். இதனால் முட்டை சாப்பிட முயன்று வருகிறேன். அலுவலகத்திற்கு நடந்து சென்று வருவதை ஈடுகட்ட சரியாக சாப்பிடுவது அவசியம்.  அன்பரசு  4 22.8.2021 அன்பிற்கினிய நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? வேலைப்பளு காரணமாக நேரம் ஒதுக்கி பேச முடியவில்லை. அலுவலகத்தில் அமர்ந்து வலைப்பூ எழுதுவதில்லை என முடிவு செய்துள்ளேன். எனவே அறைக்கு வந்துதான் செய்திகளை, கட்டுரைகளை தட்டச்சு செய்ய

இந்திய வரலாறு குறிப்பிட்ட நெறிமுறைப்படி எழுதப்பட்டது! - மிருதுளா முகர்ஜி, வரலாற்று ஆய்வாளர்

படம்
  மிருதுளா முகர்ஜி, வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் மிருதுளா முகர்ஜி வரலாற்று ஆய்வாளர்  மிருதுளா 2012-2014 காலகட்டத்தில் ஜேஎன்யூ சமூக அறிவியல் துறையின் தலைவராக செயல்பட்டார்.  2006 -2011 காலகட்டத்தில் நேரு நினைவு அருங்காட்சியகத்தில் தலைவராக செயல்பட்டார்.  குறிப்பிட்ட முறையில் வரலாற்றை உருவாக்குகிறார்கள். அப்படியென்றால் இங்கு, தகவல்களை மறைக்கிறார்களா? வரலாற்றை நேரடியாக எழுதுவது என்ற அதிகாரப்பூர்வ செயல்பாடு எங்குமே நடைபெற்றது இல்லை.வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அவர்களாகவே சுயமாக ஆய்வு செய்து எழுதுகிறார்கள். இந்த வகையில் முதல்தரமான ஆய்வாளர்கள் பாடநூல்களை எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். காலனி கால ஆட்சியின் சுவடுகளை தவிர்த்துவிட்டு வரலாற்றை எழுதுவது முக்கியம்.  பிரிவினையை ஏற்படுத்தாத உண்மையான கருத்துகள் என்றால் அவை ஏன் வன்முறையை ஏற்படுத்தும் இயல்பில் உள்ளன? நீங்கள் கூறும் விதமாக எழுதப்படும் வரலாறு அரசியல் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றப்படுவதுதான். இவை இயல்பான தேடுதலால் எழுதப்படுவதில்லை.  வலது சாரி வரலாற்று ஆய்வாளர்களை வரலாறு ஆய்வுகளை செய்ய அனுமதிப்பது, நூல்களை அங்கீகரிக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழ

நூல்களை தடை செய்வது என்றால் நாம் நாஜி ஜெர்மனி திசையில் நகர்கிறோம் என்று அர்த்தம்! - வினய் லால், பேராசிரியர்

படம்
  பேராசிரியர் வினய் லால் வினய்லால்  பேராசிரியர், வரலாற்றுத்துறை கலிபோர்னியா பல்கலைக்கழகம் சங் பரிவார் அமைப்புகள் வரலாற்றைத் திருத்தி எழுதுகின்றனர் என்ற பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். என்சிஇஆர்டி யில் கூட பாடத்திட்டங்களை மாற்றி அமைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஏன் இதனை யாருமே பெரியளவு எதிர்க்கவில்லை? இதை கொஞ்சம் விரிவான பார்வையில் பார்க்க வேண்டும். வரலாற்றை திருத்தி மாற்றி எழுவது புதிதான விஷயமல்ல. அதிகாரத்தில் உள்ளவர்கள் காலம்தோறும் செய்து வரும் விஷயம்தான் இது. உலகம் முழுக்க நடைபெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும் நடந்துள்ளது என நினைத்து அதிர்ச்சியாகவேண்டாம். நான் இதைப்பற்றி பல்லாண்டுகளுக்கு முன்னரே கேள்விகளை எழுப்பியுள்ளேன்.  2003இல் எழுதிய தி ஹிஸ்டரி ஆப் ஹிஸ்டரி பாலிடிக்ஸ் அண்ட் ஸ்காலர்ஷிப் இன் மாடர்ன் இந்தியா வரலாற்றை எழுதுவதில் உள்ள அரசியலைப் பற்றியது இந்த நூல்.  உலக நாடுகளில் உள்ள வரலாற்றுப் பாடல் என்பது எப்போது விவாத த்திற்குரியதாகவே இருந்து வருகிறது. இது நாம் சிந்திக்கும் முறையில் உள்ள பிரச்னை. இந்திய பத்திரிகையாளர்கள், உலகின் பிற பகுதிகளில் உள்ள வ

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு காரணம் என்ன?

படம்
  இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு அமெரிக்க வர்த்தக மையம் தாக்குதல் மட்டுமே காரணம் அல்ல. அதற்கு முன்னரே இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு இடையே முன்விரோதம் , பகை, வன்மம் என எல்லாமே உண்டு. அதனை ஊக்கப்படுத்தியது தாக்குதல் நடத்திய பத்தொன்பது தீவிரவாதிகள் என்று கூறலாம்.  கிறித்துவம், இஸ்லாம் என்ற இரு மதங்களுமே நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள். இதில் இஸ்லாமைப் பொறுத்தவரை அவர்கள் பிறரிடமிருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். இதனை இலக்கியவாதிகள் கூட பயன்படுத்தி காபிர்களின் கதைகள் என எழுதுகிறார்கள். இதன் வழியாக அவர்கள் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்று தெரியவில்லை.  புர்கா அணிவது, குல்லா அணிவது என தங்களை தனித்தே காட்டிக்கொள்ளும் இஸ்லாமியர்கள் அனைத்து நாடுகளிலும் இணக்கமான தன்மை கொண்டவர்களாக இல்லை. அமெரிக்காவில் இந்த வேறுபாடுகளை துல்லியமாக அடையாளம் காண்கிறார்கள். முஸ்லீம்களின் புனித நூலில் போர் என்பதை இயல்பானதாக ஏற்றுக்கொள்வதால், வன்முறையான குணம் கொண்டவர்கள் என முஸ்லீம்களை அடையாளப்படுத்த தொடங்கினர். 2010ஆம்ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அமெரிக்கர்களில் பாதிப்பேர் முஸ்

இணையத்தில் உள்ள அடிப்படைவாதிகள் அசாதாரணமானவர்கள்!

படம்
2019ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச்சில் அடிப்படைவாதி ஒருவர் மசூதிகளின் மேல் தாக்குதல் நடத்தினார். மேலும் இத்தாக்குதலை திறமாக திட்டமிட்டு பேஸ்புக்கில் லைவ் செய்தார். இத்தாக்குதலை பல்வேறு தரப்பினரும்  பார்த்து அதிர்ந்து போனார்கள். வெளிப்படையாக வெளியுலகில் இருக்கும் அடிப்படைவாதிகளை விட இணையத்தில் உள்ள அடிப்படைவாதிகளின் அளவும் எண்ணிக்கையும் அதிகம். இவர்கள் நடத்தும் தாக்குதல்களை அனைவரும் பார்க்கும்படியாகவும் செய்கிறார்கள். இந்த நூற்றாண்டில் நாம் தொலைத்த முக்கியமான விஷயம். குற்றவுணர்வுதான். தனது சந்தோஷம் முக்கியம் என யாரையும் பலிகொடுக்கத் தயங்காத ஆட்கள் உருவாகி வருகிறார்கள். இவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஜூலியா எப்னரிடம் பேசினோம். இணையத்தில் ஒளிந்துள்ள தீவிரவாதிகளைக் கண்டுபிடிப்பது எளிதாக இருந்ததா? அவர்களைக் கண்டறிவது மிகவும் கஷ்டம். காரணம், அவர்கள் படுகொலை செய்வது பற்றிய வீடியோ ஒன்றை வெளியிடுகிறார்கள். அதனைக் கண்டறிந்து நீக்குவது மிகவும் கடினம். ஒரு லிங்கை நீங்கள் நீக்கினால் மூன்று லிங்குகளை புதிதாக உருவாக்குகிறார்கள். ட்விட்டர், பேஸ்புக் எ

ஜனநாயக இந்தியாவுக்கான போராட்டக்காரர்கள்!

படம்
இந்தியாவில் சிஏஏ, என்பிஆர் ஆகிய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கு கட்சிகள் பின்னாளில் ஆதரவு கொடுத்தாலும், பெரிய தலைவர்களின் முன்னணி இன்றியே இப்போராட்டங்கள் கச்சிதமாக உதவுகின்றன. அனைத்துக்கும் தொழில்நுட்பங்கள் சிறப்பாக உதவி வருகின்றன. இவர்களில் முக்கியமான சில போராட்டக்கார ர்களைப் பற்றி பார்ப்போம்.  சரித்தர் பார்தி - 27 சிங்கப்பூரைச் சேர்ந்த வழக்குரைஞர் 2014ஆம் ஆண்டு பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது. அதிலிருந்தே அரசு அமைப்புகள், கொள்கைகள் அனைத்தும் வேறுபடத்தொடங்கின. அவர்கள் தம் கொள்கைகளுக்கு ஏற்ப நாட்டின் அனைத்து விஷயங்களையும் மாற்றி அமைக்கத் தொடங்கினர். இது ஆபத்தானது என்று எனக்குத் தோன்றியது என்கிறார். இதன் விளைவாக இந்தியாவில் போராட்டங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளார். இதனை இவர் மற்றொரு மாணவர்களின் போராட்டமாக கருதவில்லை. நாட்டின் ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டமாக கருதுகிறார்.  ஷால்மொலி ஹால்டர், 26 மேம்பாட்டு ஆலோசகர் அரசு மக்களின் மதிப்புகளுக்கு உணர்ச்சிகளுக்கு இடமளிக்கவில்லை என்கிறார் ஹால்டர். இவர், அரசு மதம், குடியுரிம

இந்தியாவை உடைக்கும் வலதுசாரித்துவம்! - கபில்சிபல்

படம்
பிரிவினையின் விதைகள் தூவப்படுகின்றன! கபில் சிபல், காங்கிரஸ். அதிகாரம், உடல் பலத்தை வைத்துச் செய்யும் அரசியல், சில ஆண்டுகளுக்கு மட்டுமே பயனளிக்கும். மோடி அரசு இதனை திடமாக நம்பி, அதற்கான திட்டங்களோடு பயணிக்கிறது. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற மோடி, உணர்ச்சிகரமான இந்துவின் மனநிலையைப் பிரதிபலித்தார். விளைவு, அதுபோலவே போலியாகப் பேசினார். வரலாற்றில் நடந்த தவறுகளுக்கு, இந்துக்களுக்கு நேர்ந்த பிரச்னைகளைத் தீர்ப்போம் என விநோதமாக பேசினார். கூட்டணி ஆட்சியில் சில விஷயங்களை துணிச்சலாக பாஜக செய்யவில்லை. ஆனால் இம்முறை கிடைத்த பெரும்பான்மை  பல அதிரடி முடிவுகளை எடுக்க வைத்திருக்கிறது. கர்வாப்சி எனும் திட்டத்தை ஆர்எஸ்எஸ் அதன் துணை அமைப்புகளாக பஜ்ரங்தள் ஆகியவை முன்னிலைப்படுத்தி சமூக ஒழுங்கை சீர் குலைத்தன. மெல்ல சமூகத்திலுள்ள மக்களிடையே அமைதியை உடைத்து பயத்தை உண்டாக்கும் சம்பவங்களை கலாசார காவலர்கள் ஏற்படுத்தினர். ஆண், பெண் காதலித்து திருமணம் செய்வது கிரிமினல் குற்றமல்ல. ஆனால் அதனையும் லவ் ஜிகாத் என்ற பெயரில் இழிவு செய்தனர். சாதியை அழிக்கும் காதல் திரு

கருத்து சொல்லுங்க பாஸ்! - வற்புறுத்தப்படும் கார்ப்பரேட் நிறுவனங்கள்!

படம்
பன்னாட்டு நிறுவனங்களின் அரசியல் நிலைப்பாடு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வணிகம் தடையில்லாமல் நடைபெற என்ன அவசியமோ அந்த காரியங்களை ஆங்கிலேயர் செய்தனர். அதில் சில நல்ல விஷயங்களும் நடந்தன. உடன்கட்டை ஏறும் பழக்கம் ஒழிப்பு போன்ற மூடநம்பிக்கை சார்ந்த பிற்போக்குதனங்களும் குறைந்தன. அதேநேரம் இந்த செயற்பாடுகள் கூட படித்த இந்தியர்களின் செல்வாக்கு, உழைப்பு காரணமாகவே சட்டமாக்கப்பட்டன. அதேசமயம் அன்று நிலவிய சமூகப்பழக்க வழக்கங்கள் பற்றி எந்த வர்த்தக நிறுவனங்களும் கவலைப்படவும் இல்லை. அதுபற்றி கருத்துகளைச் சொல்லவும் இல்லை. சமூக வலைத்தளங்கள் வந்தபிறகு காட்சிகள் அனைத்தும் மாறின. வலைத்தளத்தில் பல்வேறு விளம்பரங்கள் இடம்பெறத்தொடங்கின. இதனை விளம்பரத்துபவர்களுக்கு இன்ஃபுளுயன்சர் என்று பெயர். இதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துகொண்டு பணமும் வழங்குகின்றன. இன்று தேசியமயம், வலதுசாரி பாபுலிச கோஷங்கள் உச்சம் பெற்றுவருகின்றன. இந்நிலையில் பல்வேறு நிறுவனங்களும் அந்தந்த நாட்டு அரசுகளின் நிலைப்பாடு, அல்லது அனைவரும் ஏற்கும்படியான நிலைப்பாடுகளை தங்களின் நிறுவன மதிப்பு கெடாமல் எடுத்து வருகின்றன. முன