இடுகைகள்

சயின்ஸ் போகஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செர்னோபில் அணுஉலைக் கசிவு விபத்து!

படம்
செர்னோபில் அணு உலைக்கசிவு பிரச்னை தற்போது தீர்ந்துவிட்டதா? ஹெச்பிஓ டிவியில் வெளியான செர்னோபில் பிரச்னை பற்றி ஆவணப்படம், அப்பிரச்னையைப் பற்றி பலரையும் பேச வைத்திருக்கிறது. ரஷ்யாவை குற்றவாளியாக்கினாலும் ரஷ்ய ஊடகங்களிலும் முக்கியமான ஆவணப்படமாக இதனைப் பற்றி பேசி வருகிறார்கள். குறிப்பாக, உக்ரைனின் செர்னோபிலில் நடந்த அணுஉலைக் கசிவு குறித்த படம், உலகமெங்கும் அதுகுறித்த விவாதங்களை இன்று ஏற்படுத்தி வருகிறது. 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று, செர்னோபிலிலுள்ள ரியாக்டரில் பாதிப்பு ஏற்பட்டது. இன்றுவரையும் அணு உலை எதிர்ப்பாளர்கள் உதாரணமாக காட்டும் அளவு கொடூரமாக இருந்தது இந்த விபத்து. கதிர்வீச்சு பாதிப்பால் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் இன்றுவரை அந்த அணு உலை அருகிலுள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. இங்குள்ள ஐந்து சதுர கிலோமீட்டர்களிலுள்ள பைன் மரங்கள், கதிர்வீச்சினால் சிவப்பிலிருந்து ஆரஞ்சு நிறத்திற்கு மாறியுள்ளன. நேரடியாக மனிதர்கள் பாதிக்கப்பட்டதோடு, உளவியல் ரீதியாகவும் பாதிப்பின் அளவுகள் உள்ளன. செய்தி - சயின்ஸ் போகஸ்