இடுகைகள்

கிரிஸ்டல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விண்ணைத்தாண்டி சொந்த கிரகத்திற்கு பறக்க முயலும் பஸ் லைட் இயர்! - லைட்இயர் - டிஸ்னி பிக்ஸார்

படம்
  லைட் இயர் பிக்சார் -டிஸ்னி வேற்று கிரகத்திலிருந்து பூமியை ஒத்த கிரகம் ஒன்றுக்கு ஆராய்ச்சி செய்ய ஸ்பேஸ் ரேஞ்சர்கள் வருகிறார்கள். அப்படி வந்து ஆராய்ச்சி செய்யும்போது, அங்கு உயிருள்ள ஜந்துகளை பிடித்து உண்ணும் மர விழுதுகள் இருப்பதைப் பார்க்கிறார்கள். அவற்றிடமிருந்து தப்பிக்கும்போது விண்கலம் பாறையில் மோத அங்குள்ள பீடபூமி அமைப்பு ஒன்றில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து தங்கள் கோளுக்கு மீண்டு சென்றார்களா இல்லையா என்பதே கதை.  பஸ் லைட் இயர் (செல்லப்பெயர் பஸ்) என்பவர்தான் இதில் ஸ்பேஸ் ரேஞ்சர்களில் ஒருவர். இவருக்கு ஆணைகளை வழங்கும் கமாண்டர் பெண்மணி ஒருவர் உண்டு. அவர் பெயர் அலிஷா. பஸ் செய்யும் தவறு காரணமாகவே விண்கலம் பீடபூமி அமைப்பில் மாட்டிக்கொள்கிறது. கூடவே விண்கலத்திற்கு ஆற்றல் தரும் கிரிஸ்டலும் உடைந்துபோய் விடுகிறது. இந்த எரிபொருள் இருந்தால்தான் அவர்களின் சொந்த கிரகத்திற்கு செல்ல முடியும்.  இதை அதே கிரகம் ஒன்றிலிருந்து அகழ்ந்து எடுத்து சோதித்து பிறகுதான் பயன்படுத்த முடியும்.  தங்களது சொந்த கிரகத்திற்கு செல்வதே பஸ் காலகட்ட வீரர்களுக்கு லட்சியம்.  பஸ் இப்படி சோதனை செய்ய செய்ய அவரது

ரத்தினங்கள் - அறிவோம்

படம்
  ரத்தினங்கள் ரத்தினங்களை, சுரங்கங்களிலிருந்து அகழ்ந்து எடுக்கிறார்கள். துளையிடுவது, வெடிவைப்பது ஆகிய முறையில் பாறைகளை உடைத்து ரத்தினக்கற்களை வெளியே எடுக்கிறார்கள். அரியவகை, குறைந்த தேய்மானம், அழகு ஆகியவற்றைப் பொறுத்து கற்களை பட்டைதீட்டி விலை வைத்து விற்கிறார்கள். சுரங்கத்திலிருந்து எடுத்து சுத்தம் செய்து அதன் வடிவமைப்பை மாற்றுகிறார்கள். பிறகு அதனை பாலீஸ் செய்து தனியாக அல்லது நகையில் பொருத்தி விற்கிறார்கள். வைர சந்தையில் வைரங்களை அகழ்ந்தெடுத்து விற்பதில் ரஷ்யா முன்னிலையில் உள்ளது.  கி.மு.25 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலான காலகட்டம் தொடங்கி ரத்தினங்களை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எகிப்தில் மார்பில் அணியும் தொன்மை ஆபரணம் ஒன்று கண்டறியப்பட்டது. இதில் லாசுலி, கமேலியன், லாபிஸ் போன்ற அரிய கற்கள் பதிக்கப்பட்டிருந்தன என்பதை புவியியல் வல்லுநர்கள் கண்டுபிடித்தனர். இதேபோல மாசடோமியாவில் (தற்போதைய ஈராக்) நெக்லஸ் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதிலும் மேற்சொன்ன அரியவகை ரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்தன. இதன் காலம் கி.மு.2500 ஆகும்.  தகவல் nature guide rocks and minerals book

ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த திரவ வடிவிலான கண்ணாடி! - புதிய நீள்வட்ட வடிவிலான மூலக்கூறுகள் கொண்ட பொருள்

படம்
                ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த திரவ வடிவிலான கண்ணாடி ! ஜெர்மனி , நெதர்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் கான்ஃபோகல் மைக்ரோஸ்கோப்பி எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திரவ வடிவிலான கண்ணாடியை கண்டறிந்திருக்கிறார்கள் . கண்ணாடி என்பது உறுதியாக இருந்தாலும் அதன் அமைப்பு பற்றி விஞ்ஞானிகள் அறியவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன . நீள்வட்ட கூழ்மமான இதிலுள்ள துகள்கள் அலைந்தபடி உள்ளன . குளிர்சாதனப்பெட்டியில் உள்ள ப்ரீசரில் உறைதல் எப்படி நடக்கிறது என கவனித்திருக்கிறீர்களா ? பிளாஸ்டிக் தட்டில் உறைதல் என்பது குறிப்பிட்ட வரிசைப்படி நடைபெறும் . நடுவிலிருந்து ஐஸ்ட்ரே உறையத்தொடங்கும் . ஆனால் கண்ணாடி கிரிஸ்டல் வடிவில் அமைந்தது அல்ல . இதன் காரணமாக கண்ணாடி திரவ வடிவிலிருந்து திட வடிவிற்கு மாறும்போது செயல்பாடுகள் வரிசைப்படியாக நடைபெறுவதில்லை . எனவே , கண்ணாடி பற்றி அறிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் . ஜெர்மனியைச் சேர்ந்த கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதற்கான வேதிக்கலவையை உருவாக்கி சோதித்து திரவ வடிவிலான கண்ணாடியை அடையாளம்

வைரத்தின் முடிவு - கிரிஸ்டல் காலம் தொடங்கிவிட்டது!

படம்
திருமண மோதிரங்கள் என்பது அன்பைச் சொல்லுவது.. முன்பு ஆண்கள் பெண்களுக்கு போட்டார்கள். இன்று சாஹோ படத்தில் ஸ்ரத்தா, பிரபாசுக்கு மோதிரம் போட்டு காதல் - கல்யாணம் - ஹனிமூனை கன்ஃபார்ம் வரை செட் செய்வார். நிலைமை இப்படி போய்க்கொண்டிருக்கிறது. இதனை தொடங்கி வைத்தார் யார் என்று அறிந்தால்தானே நம் கட்டை வேகும். அதற்காகத்தான் இந்தப் பதிவு.  நூற்றாண்டுகளுக்கு மேலாக வைரம் திருமணத்தை உறுதி செய்வதற்காக பயன்பட்டு வருகிறது. முதலில் வைரத்திற்கு இந்தளவு மதிப்பு கிடையாது. இல்லையென்றால் என்ன அர்த்தம் உருவாக்கவேண்டும் என்பதுதானே? அப்படித்தான் டீ பீர்ஸ் நிறுவனம் வைரத்தை இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தி கலாசாரத்தையே மாற்றியது.  இரு இதயங்களை இணைக்கும் பந்தம் என்று எழுதி மக்களை கல்யாணம் செய்யத் தூண்டிய விளம்பர எழுத்தாளர்  பிரான்சிஸ் ஜெரார்டி,  கல்யாணமே செய்துகொள்ளவில்லை. ஆனால் மில்லினிய ஆட்கள் உள்ளே வந்த தும் அனைத்தும் மாறியது. இவர்கள் அழகிய கிரிஸ்டல் கற்களை மட்டுமே தேர்ந்தெடுத்தனர். இதனால் இப்போது வைரத்திற்கு பெரிய மதிப்பில்லை. பச்சை, ரோஸ் என பல்வேறு நிறம் கொண்ட கற்களைத