இடுகைகள்

தேர்தல் சட்டங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வந்தே மாதரமா? வந்தே ஏமாத்துறோம்! - தேர்தல் 2019

படம்
தேர்தல் நாளில் என்ன செய்யலாம்? தேர்தலில் நேராக வாக்காளர் அட்டையை எடுத்துக்கொண்டு விடுவிடுவென பள்ளிக்குச் சென்று ஓட்டு போட்டுவிட்டு வந்து டிவி பார்ப்பது புத்திசாலித்தனமல்ல. தேர்தல் தொடர்பான சில சிக்கல்களை சந்தித்தால் அதனை எப்படி சமாளித்து தீர்வு காண்பது என்பதையும் யோசிப்பது எதிர்காலத்திற்கு உதவும்.  49(P) சர்க்கார் விஜய் நமக்கு இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தி ஒருவிரல் புரட்சி செய்தார் இல்லையா? அதேதான். நீங்கள் துபாய், அமெரிக்கா ஏன் பக்கத்து ஊரிலிருந்து கூட உங்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொண்ட பள்ளிக்கு வருகிறீர்கள். உள்ளே நுழைந்து சோதிக்கும்போதுதான் தெரிகிறது. உங்கள் ஓட்டை வேறு யாரோ போட்டுவிட்டு ஓடிவிட்டனர். என்ன செய்வீர்கள்.  நீங்கள்தான் குறிப்பிட்ட நபர் என புகைப்படம், ச்சீ அதைப் பார்த்தால் நம் குடும்பத்தினரே நம்ப மாட்டார்கள். எனவே பிற அடையாள ஆவணங்களை கொட்டாவி விடும் ஆபீசரை ஆறுதல் படுத்தி காட்டினால் 49 பி சட்டப்படி காகிதம் ஒன்றைக் கொடுப்பார்கள். அதில் உங்கள் ஓட்டைப் பதிவு செய்து இந்தியக் குடியரசின் மகுடம் கீழே  விழாமல் காப்பாற்றிவிட்டு நெட்ஃபிளிக்ஸில் இணையலாம்.  1