சிறைக்கைதி பழிக்குபழி வாங்கி எதிரிகளை துண்டு துண்டாக வெட்டி எறியும் கதை!
வூ சாங் சீன திரைப்படம் ஐக்யூயி ஆப் நாயகன் வூ சாங் ராணுவத்தில் இருந்து வீட்டுக்கு வருகிறார். அண்ணன் இறந்துபோய் ஊதுபத்தி ஏற்றிவைத்திருக்கிறது. அண்ணி கள்ளக்காதலனுடன் சேர்ந்து அண்ணனைக் கொன்றுவிட்டாள் என உண்மை தெரிகிறது. அண்ணியின் தலையை வெட்டிய கொழுந்தன், கள்ளக்காதலனை தேடி விலைமாதுவின் இல்லம் செல்கிறான். சண்டையிட்டு கொன்று இருவரின் தலைகளையும் எடுத்து அண்ணனின் அஞ்சலி செலுத்தும் இடத்தில் போட்டுவிட்டு காவல்துறையில் சரணடைகிறான். சிறைக்கு செல்பவனை, ஜெயிலர் மூலம் ஓட்டல் நடத்துபவர் சந்தித்து அவனது உதவியைக்கேட்கிறார். அதாவது, அவரது தம்பி நடத்தும் ஓட்டலை ரவுடி ஒருவன் பிடித்துக்கொள்கிறான். அவனை கொல்ல வேண்டும். இல்லையா அடித்து உதைக்கவேண்டும். சிறையில் உள்ளவனுக்கு ஓட்டல்காரர் ஐந்து நாட்கள் இறைச்சியும் மதுவும் கொடுத்து நன்றாக பார்த்துக்கொள்கிறார். நாயகன், சாப்பிட்ட சோறுக்கு நியாயம் செய்ய ரவுடியை சந்திக்க செல்கிறான். ரவுடியின் மனைவியை தூக்கி பீப்பாய் தண்ணீரில் தலைகுப்புற வீசுகிறான். ரவுடியை அடித்து உதைத்து ஓட்டலை மீட்கிறான். என்னா அடி... மது வைத்துள்ள பானைகள் எல்லாம் சிதறுகி...